புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கல்விக் கோயில்! - பழநி மலை

கல்விக் கோயில்! - பழநி மலை

கல்விக் கோயில்! - பழநி மலை
##~##

ழகு முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியம்பதி. இந்த ஊரில் உள்ள தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், குழந்தைகள் மேல் அதிக பிரியத்துடன் கல்வி யோகத்தைத் தந்தருள்கிறாள் என்கின்றனர், பக்தர்கள்!

பழநி மலையின் கிரிவலப் பாதையில் உள்ளது புலிப்பாணி ஆஸ்ரமம். இந்தச் சித்தரின் சமாதிக்கு, ஞானமும் யோகமும் பெற வேண்டி வருகிற பக்தர்கள் ஏராளம். சுமார் நானூறு வருடங்கள்: பழைமை வாய்ந்த ஆஸ்ரமத்தில், கிராம தேவதையான தொட்டிச்சி அம்மனின் சந்நிதி உள்ளது. சக்தி மிக்க தொட்டிச்சி அம்மனிடம் சரணடைந்தால், நம் வாழ்வையே மலரச் செய்தருள்வாள் என்பது ஐதீகம்!

கல்விக் கோயில்! - பழநி மலை

இந்த ஆஸ்ரமத்துக்கு வந்து தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், சாப விமோசனம் பெறலாம். சங்கடங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை.  

குறிப்பாக, கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, பிரார்த்தித்துச் செல்கின்றனர். கல்விக்கும் கலைக்கும் அடையாளமாக தன் வலது கரத்தில் தாமரை மலரையும் பில்லி, ஏவல், சூனியம் முதலானவற்றில் இருந்து விடுபட்டு வாழ்வில் நிம்மதி பெறுவதன் அடையாளமாக இடது கரத்தில் மந்திர சக்தி கொண்ட ஓலைச் சுவடிகளையும் வைத்தபடி, நின்ற கோலத்தில் காட்சி தரும் தொட்டிச்சி அம்மனைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.    

வருடந்தோறும் நவராத்திரி விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெறும். இந்த நாளில், அன்னதானம் செய்தால், கலையில் சிறந்து விளங்கலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள், பக்தர்கள்.

மாதந்தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்போது தொட்டிச்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், தள்ளிப்போன சுபகாரியங்கள் யாவும் விரைவில் நடைபெறும். சித்தர்களின் பேராற்றலும் அம்மனின் அருட்சக்தியும் இணைந்து கிடைக்கும் என்பதால், பௌர்ணமி வழிபாட்டில் கலந்துகொள்ள, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான அன்பர்கள் வருகின்றனர்.  

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அன்று, அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். சர்வ அலங்காரத்துடன் காட்சி தரும் தொட்டிச்சி அம்மனின் அழகே அழகு! இந்த நாளில், ஓலைச்சுவடிகளை அவளின் திருவடியில் வைத்து, தாமரை, செவ்வரளி, ரோஜா ஆகிய பூக்களைக் கொண்டு விசேஷ வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு, அம்மனை மனதார வேண்டிக் கொண்டால், மனதில் நினைத்த காரியங்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி என்கின்றனர்.

கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறவும் மாணவர்கள் இங்கு வந்து, தங்கள் எழுதுபொருட்கள், ஹால்டிக்கெட் ஆகியவற்றை அம்மனின் திருவடியில் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.

கல்விக் கோயில்! - பழநி மலை
கல்விக் கோயில்! - பழநி மலை

தாமரை மலர்களைக் கொண்டு அம்மனை அலங்கரித்து, பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், விபூதி ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்து வழிபட்டால், கர்மவினைகள் யாவும் அகலும்; வீட்டில் சௌந்தர்யம் குடிகொள்ளும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

ஞானவேல் குடிகொண்டிருக்கும் பழநியம்பதிக்கு வந்து, அப்பனுக்குப் பாடம் சொன்ன கந்தனையும் தொட்டிச்சி அம்மனையும் வேண்டுங்கள்; கல்விச் செல்வம் கிடைக்கும், கவலையை விடுங்கள்!

- க.அருண்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்