Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

கர ராசி(லக்னம்)யின் அதிபதி சனி. உணர்வுகளில் ஒன்றான துயரத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சனிக்கு உண்டு. 'துக்ககாரகன் சனி’ என்கிறது ஜோதிடம். அவன், மகரத்துக்கு தலைவனாக அமைந்திருப்பது இழப்பல்ல; செழிப்பு. அதில் சனி வீற்றிருந்தால் துக்கத்தை அண்டவிடாமல் தடுப்பான். பாவாதிபதி பாவத்தில் இருப்பது 'பாவ புஷ்டி’ என்று விளக்கும் ஜோதிடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இங்கு குரு நீசனாகவும் செவ்வாய் உச்சனாகவும் இருப்பார்கள். 12-க்கும் 3-க்கும் உடைய குரு நீசன். 12- இழப்பு; 3- ஆயுள் [எட்டின் (சிம்மம்) எட்டு (மீனம்) பாவாத்பாவம்... 3 - ஆயுள்]. பெருமைக்கு இழுக்கு, அல்பாயுர் யோகம், அகால மரணம், ஆபத்தான மரணம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையில் மனம் தடுமாறும் நிலையை ஏற்படுத்துவான். அவன் முதல் அம்சகம், 3-வது அம்சகம் அல்லது 7-வது அம்சகமானால் புகழும், பெருமையும், செல்வமும், ஆயுளும் சேர்ந்து சிறப்புற விளங்க வைப்பான். நீச குருவுக்கு முதல் அம்சகமானால், வர்கோத்தம பலவான் 3-வது ஆனால், ஸ்வக்ஷேத்ர பலவான் 7-வது ஆனால் உச்ச பலவான் என்ற உயர் தகுதி வந்துவிடும்.

மேஷத்துக்கு உடைய செவ்வாய் மகரத்தில் உச்சனாவான். மகர லக்ன அதிபதி சனி மேஷத்தில் நீசனாவான். சனி துலாத்தில் உச்சனாக இருப்பான். மகரத்தில் சனி இருந்தால், அம்சகத்தில் நீசனாக மாற வாய்ப்பு உண்டு. உச்சனாக மாற இயலாது. உச்சனான செவ்வாய் நீசனாக அம்சகத்தில் தென்பட வாய்ப்பு உண்டு. இந்த இரண்டு ராசிநாதன்களும் பரிவர்த்தனத்தில் விசேஷ மாறுபாட்டை சந்திக்கிறார்கள். ராசிக் கட்டத்தில் உச்சன், ஸ்வ க்ஷேத்ரம், மூலத்ரிகோணம், பந்து க்ஷேத்ரம்- இவற்றைப் பார்த்ததும் ஆஹா... ஓஹோ என்று பலனை உறுதி செய்து தகவலை அவிழ்த்துவிட முடியாது. நீசன், சத்ரு, க்ஷேத்ரம் ஆகியவற்றைப் பார்த்து, 'அய்யஹோ’ என்று கப்பல் கவிழ்ந்துவிட்டதே என கன்னத்தில் கைவைத்து தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியாது! குறைந்தபட்சம் அம்சகம் வரை பின்தொடர்ந்து, அந்தக் கிரகங்களின் நிலையை அளக்க வேண்டும். அப்போதுதான் கிரகங்களின் செயல்பாட்டை ஓரளவு கணிக்கமுடியும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கிரகத்தின் பார்வை, பலனில் மாறுபாட்டை விளைவிக்கும் என்கிறது ஜோதிடம். உண்மைதான்! அதற்காக நீச குருவின் பார்வை, 7-வது வீட்டை செழிப்பாக்கும் என்ற முடிவு நடைமுறைக்கு வராது. தகுதியிழந்த ஒருவரின் பார்வைக்கு மட்டும் எப்படி தகுதி வரும்? ஓய்வுபெற்ற அமைச்சரின் பார்வை வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. பலனை இறுதியாக்க, அம்சகத்தையும் கவனிக்க வேண்டும் என்கிறது ஜோதிடம் (பலமம்சகர்க்ஷயோ:).

ராசி புருஷனின் 10-வது வீடு மகரம். நம்மை உயர்த்தும் செயல்பாட்டின் அளவை வரையறுக்கும். உழைப்பால் வரும் ஊதியத்தின் பெருமையை விளக்கும். ராசிச் சக்கரத்தின் 270 முதல் 300 வரையிலான ஆரங்களை உள்ளடக்கிய ராசி. சூரியன், சந்திரனுக்கு இது பகை வீடு. சுக்கிரன், புதனுக்கு பந்து வீடு. 5-க்கும் 10-க்கும் உடைய சுக்கிரனுக்கு, யோக காரகன் என்ற தகுதியும் சேர்ந்துவிடுகிறது. சிந்தனை வளத்தால் செல்வத்தை அடைவது. அதாவது,  புத்திஜீவியாக இருப்பவர்கள் சூரியனும் சந்திரனும். உழைப்பால் செல்வம் பெற்று வாழ்பவன்... அதாவது, சிரமஜீவியாக இருப்பவன் சனி. ஆகையால், பகை என்பது இயல்பு. சுக்கிரன் யோக காரகனாக மாறுவதால் நண்பனாகவே மாறி விடுவான். புதன்- பெண் அலி. சனி- ஆண் அலி என்ற கோணத்தில், அதாவது தகுதியில் ஒன்றானவர்களிடம் நட்பு வளரும் (சமானதுக்கவ்யசனேஷ§ஸக்யம்). பகையும் நட்பும் உணர்வில் வெளிப்படும். ஆகவே, இரண்டு வகை பலன்களில், ஜீவ பரமான பலன்களுக்கு மட்டுமே எதிரிடையாகத் திகழும். உலகவியல் சுகத்துக்கு இவை இடையூறை ஏற்படுத்தாது என ஜோதிடம் விளக்கும். சூரியனின் புதல்வன் சனி. ஸெளரி என்று சனிக்குப் பெயர்; சூரியனின் புதல்வன் என்று பொருள். சந்திரனின் புதல்வன் புதன்.  ஸெளம்யன் என்று புதனுக்குப் பெயர்; ஸோமனின் (சந்திரனின்) மகன் என்று அர்த்தம். சூரியனும் சந்திரனும் பகை பாராட்டும் போது, அவர்களின் புதல்வர்கள் நட்பு பாராட்டும் விசித்திரம் இங்கு உண்டு.

மகர - கடகம், கும்ப - சிம்மம் என்ற இரு சமஸப் தகப் பொருத்தத்தைப் பகைவர்கள் என்ற நோக்கில் விலக்களிக்கும் முடிவுகளை ஏற்பது உண்டு. ஆனால், உலகவியல் சுகங்கங்களுக்கு (அறம், பொருள், இன்பம்) பகை செயல்படாததால் (ஜீவபர பலனுக்கு மட்டும்தான் பகை வேலை செய்யும்), பகைவர்களாக இருந்தாலும் சமஸப்தகத்தை ஏற்கலாம் என வித்யாமாதவீயம் கூறும் (அப்யரதீ உபே அபி...). செல்வச்செழிப்பு மிக்க தாம்பத்தியத்தை ஈட்டித் தருவதில் இந்த சமஸப்தகம் சிறப்புற இருப்பதால், பொருத்தத்தில் கழற்றிவிடுவது பொருந்தாது. பகை, நட்பு என்ற தகுதியை எல்லா பலன்களுக்கும் ஒட்டவைத்து விளையாடுவதை, ஜோதிடம் ஏற்காது.

சூரிய கோளத்திலிருந்து வெளிவந்த சிறு கோளம் சனி என்று வானசாஸ்திரம் விளக்கும். சந்திரனோடு இணைந்தது புதன் என்று ஜோதிடம் விளக்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - இந்த நாலும் அந்த: கரணம். மனத்தில் அடக்கம். புத்தி, புதனின் இயல்பு. ஆகையால் இரண்டுக்குமான தொடர்பை பாமரர்களுக்கு விளக்க புதல்வனாகச் சித்திரிக்கிறது ஜோதிடம். சூரியனும் சனியும் அப்பாவும் பிள்ளையும் ஆவார்கள். தகப்பன், தனயன் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள்; பகைவர் களாகவே தென்படுவர் என்றொரு விளக்கத்தை பாமரர்களின் சிந்தனையில் திணிப்பவர்களும் உண்டு. சூரியனிடம் இருந்து பலம்பெற்று விளங்குகிறான் சந்திரன். ஆன்மாவிடம் பலம்பெற்று மனம் சிறப்பாகச் செயல்படும். மற்ற ஏழு கிரகங்களும் இந்த இருவரிடமும் பலம் பெற்று  விளங்குகின்றன.

ஆன்மாவும், மனமும் இணைந்திருந் தால் மட்டுமே ஐம்புலன்கள் வேலை செய்யும். சூரிய- சந்திரரின் தொடர் பில் பலம்பெற்ற கிரகங்கள், தாம் அளிக்க வேண்டிய பலன்களை முழுமையாக அளிக்கும். இந்த நிலையில் அவர்களிடம் நட்பு- பகை என்பது, ஒத்துழைப்பின் ஏற்றக்குறைவை சுட்டிக்காட்ட வந்ததாகவே கருத வேண்டும். நம்மிடம் இருக்கும் பகை- நட்பை போன்று பாவித்து பலன் சொல்ல விளைந்தால், வெற்றிபெறுவது கேள்விக்குறியாகி விடும்.

இது சர ராசி, பெண் ராசி, பின் புறமாகத் தோன்றும் ராசி, நீர் ராசி, மலட்டு ராசி, விலங்கின ராசி... இப்படி இருக்கும் மாறுதல், அதில் பிறந்தவனி டமும் தென்படும். உடல் முதலை உருவம். தலை மானின் உருவம். நாலுகால் பிராணியும், ஊர்வன பிராணியும் கலந்த வடிவம். வனாந்திரங்களைக் கடந்து, ஒவ்வொரு அடியாக நடந்து நடந்து மலையுச்சி வரை செல்லும் இயல்பு மானுக்கு உண்டு. கடலில் நீருக்கு அடியில் மெள்ள நீந்தி நீந்தி கரைசேர்ந்து, அங்கே இருக்கும் இரையை நீருக்குள் இழுத்து பயன்படுத்தும் திறமை முதலைக்கு உண்டு. இந்த இரண்டுமே சுயமுயற்சியில் எல்லை எட்டும். வாழ்க்கைப் பயணத்தில் மான், சிங்கத்துக்கு இரையாவது உண்டு. கரையை எட்டிய முதலை மனிதனிடம் மாட்டிக்கொள்வது உண்டு. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்பாராமல் விளைவது. விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் மான் சிங்கத்திடம் இருந்து தப்பிவிடும். முதலையும் விழித்துக்கொண்டால் நீரில் மூழ்கி தப்பித் துக்கொள்ளும். இந்த இயல்புகள் மகர ராசியில் பிறந்தவனிடமும் தென்படும்.

கரையை எட்டிய முதலை, தான் நீருக்குள் இழுத்துவரும் விலங்கினத்தை சேற்றில் அழுத்தி பலநாட்கள் கழிந்தபிறகு, உணவாகப் பயன்படுத்தும். நம்மிலும், வருஷக்கணக்காக ஊறுகாயைப் பயன்படுத்துபவர்கள் உண்டு. எரித்த கறியை விரும்பி உண்ணுபவர்களும் உண்டு. தாமச உணவில் ஈடுபாடு. மானின் இயல்புக்கு ஏற்ப ஸாத்விக உணவிலும் அக்கறை இருக்கும். சைவமும், அசைவமும் கலந்தும் இருப்பது உண்டு. நீரிலும் நிலத்திலும் வளைய வரும் விருப்பம், கடல் கடந்த வாணிபத்தில் விருப்பம் இருக்கும். சுய உழைப்பில் முன்னேற விரும்புவதால், உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் வாழ்வை வளமாக்கும்.

ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை சுறுசுறுப்பு இருக்கும். பாதியில் விட்டுவிட்டு மற்றொரு வேலையைத் தேடமாட்டார்கள்.

உழைப்பில் முதல் வரிசையில் திகழ்வர். பொறுமை இருக்கும். வரவுக்கேற்ப செலவு செய்யும் பழக்கம் இருக்கும். ஏற்றுக்கொண்ட  வேலையைச் செம்மையாக்கி, ஓர் அட்டவணையோடு குறித்த வேளையில் முடிக்கும் திறன் இருக்கும். தனது வேலை குறித்த விமர்சனத்திலும் அபவாதத்திலும் பயம் இருக்கும். பிறர் வலையில் எளிதில் சிக்காமல் இருக்க, விழிப்புடன் இருப்பார்கள். மற்றவர்களிடம், திடீரென அன்பைச் சொரிய மாட்டார்கள். சிறுகச் சிறுக நட்பு வளர்ந்து ஒட்டிக்கொண்டால், கடைசி வரையிலும் அந்த நட்பை நிலைநிறுத்துவார்கள். நேராக வா... நேராக போ... என்ற மனோபாவம் இருக்கும். பிறர் மீது கொண்ட நம்பிக்கையை நழுவவிட மாட்டார்கள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சனியும், சுக்கிரனும், புதனும் பலம்பெற்றிருந்தால் உலக அங்கீகாரம் பெறும் அளவுக்கு வாழ்க்கை செழிக்கும். லக்னத்துக்கும் 2-க்கும் உடையவன் சனி. யோககாரகன்(5) சுக்கிரன். பாக்கியாதிபதி(9) புதன். இவர்களால் செல்வாக்கு, தனம், குழந்தைகள், வேலையில் பெருமை, அதிர்ஷ்டத்தின் பங்கு அத்தனையும் சேரும்போது பெருவாழ்வு கிடைத்துவிடும்.

சனியும் புதனும் பலம் குன்றியிருந்தால் பரவஞ்சனாகவும், மானாவமானங்களைத் துடைத்துவிடுபவனாகவும் திகழ்வான். சொல்லிலும், நினைவிலும், செயலிலும் மாறுபட்டு, எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடச் செய்யும். தவறு செய்ய கூச்சம் இருக்காது. தண்டனையை ஏற்பதில் வெட்கம் இருக்காது. வேலைகளை தள்ளிப்போடும் எண்ணம் இருக்கும். சுயநலத்தை எட்டுவதற்காக பொதுநலன்களை அழிக்கத் தயங்காது. தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களை எதிர்க்கும் எண்ணம் இருக்கும். தான் விரும்பியது கிடைக்காமல் பிறருக்குக் கிடைத்துவிட்டால், பகை வலுத்து பிறரைத் துன்புறுத்தத் தயங்க மாட்டார்கள். தான் உயராவிட்டாலும், தன்னைவிட உயர்ந்தவனை என்றென்றும்

பகையோடு பார்க்கத் தோன்றும். என்னதான் நட்புடன் பழகினாலும் சுயநலத்துக்காக நட்பைத் துறக்கவும் செய்வார்கள். குடும்பம், சமுதாய வாழ்வில் பேரும் புகழும் சேரும்.

சனி, சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் மனம் தளராத வாழ்க்கை அமையும். பாட்டிலும் கலைகளிலும் ரசனை இருக்கும். பணத்தாலும் உழைப்பாலும் பலபேருக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கும்.

முதல் மூன்று நவாம்சகங்களுக்கு (உத்ராடம் 2, 3, 4) சூரிய தசை இருக்கும். அடுத்த நான்கு நவாம்சகங்களுக்கு (திருவோணம்)சந்திர தசையும், கடைசி இரண்டு நவாம்சகங் களுக்கு (அவிட்டம் 1, 2) செவ்வாயும் இருக்கும். இளமையை எட்டும் வரை இந்த மூன்று தசை இருப்பதால் படிப்படியான முன்னேற்றம் இடையூறின்றி நிறைவேறிவிடும். முதல் ஐந்து வயதுவரை பாலாரிஷ்டம் இருந்தாலும், சந்திர தசையில் தென்படும் சனி, சுக்கிர, புத புக்திகளின் ஒத்துழைப்பால் சந்திரனின் தாக்கம் தெரியாமல் போய்விடும். செவ்வாய் பலம் பொருந்தியிருந்தால், உற்சாகத்தோடு படிப்பில் தேர்ச்சி பெற்று, வேலையின் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்ட போதுமான அடித்தளம் அமைந்துவிடும்.

55 வயதுக்கு மேல் ஏற்படும் சனிதசை முதுமையை இளமையாக்கிவிடும். ராகுவிலும் குருவிலும் ஏற்படும் சுக்கிரன், புதன், சனி ஆகியோரது புக்திகளும் அந்தரங்களும் தக்க தருணத்தில் உயர்வை எட்டவைத்து, வாழ்வில் இன்பத்தைச் சுவைக்க வைப்பர். குடும்ப விருத்தியும் பரம்பரை விருத்தியும் இவர்களை வந்து அடையும். பழைய பண்பாட்டிலும் சம்பிரதாயத்திலும் ஈடுபாடு இருந்தாலும், சூழலுக்கு ஏற்ப புதுமைகளையும் வரவேற்று வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக்கொள்வர். ஏமாறவும் மாட்டார்கள், ஏமாற்றவும் மாட்டார்கள்.

சம் சனைச்சராய நம:, சும் சுக்ராய நம: பும் புதாய நம: என்று மூவரையும் வழிபடுவது சிறப்பு.  'சம்னோ தேவீ:’ என்ற மந்திரத்தால் சனைச்சரனையும், 'ப்ரவ: சுக்ராய’ என்ற மந்திரத்தால் சுக்கிரனையும்,  'உத்புத்யஸ்வ’ என்ற மந்திரத்தால் புதனையும் வழிபடலாம். 'சுகப்ரதாய சனைச்சராய நம: தனதாத்ரே சுக்ராய நம: விவேகினேபுதாய நம:’ என்று மனதில் அசைபோட்டு புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும். நேரமில்லாத நிலையில்,

'நமஸ்துப்யம் சூர்யபுத்ரம் சனைச்சர மஹர்நிசம்
தாபத்ரயவினாசாய மந்தாயானந்த தாயினே’

- என்ற செய்யுளை மனதில் அசைபோட்டு அடிபணிய வேண்டும். ப்ரஜாபதியும் யமனும் சனைச்சரனுக்கு அதிதேவதையும் ப்ரத்யதி தேவதையும் ஆவார்கள். அவர்களையும் சேர்த்து வணங்கினால் அகால மரணம், அபமிருத்யு வராமல் பாதுகாப்பார்கள். பலம் பொருந்திய சனி நீண்ட ஆயுளை அளிப்பான். சுக்கிரன், புதன் இவர்களது ஒத்துழைப்பு இன்றி, சனி பலமிழந்தால் ஏற்படும் வினைகளை அகற்ற இவர்களது வழிபாடு உதவும். பூர்வ புண்யஸ்தானாதிபதியும் (சுக்கிரனும்), பாக்யாதிபதியும் (புதனும்) வலுவாக இருப்பவர்களுக்கு, பணிவிடையால் நெருடல் இல்லாத வாழ்க்கை அமைந்து நிம்மதி ஏற்படும்.

- வழிபடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism