Published:Updated:

அறுபத்துமூவருக்கு அமர்க்கள விழா!

அறுபத்துமூவர் தரிசனம்!

##~##

'அடியார்கள் சேவையே ஆண்டவன் சேவை’ என்பார்கள். அதாவது, அடியார்களுக்குச் சேவை செய்தாலே, அது ஆண்டவனுக்குச் சேவை செய்ததற்குச் சமம்’ என்பார்கள். இதை நிரூபிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், சென்னை மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். காரணம்... அடியவர்களான அறுபத்து மூவருக்காக நடைபெறும் திருவிழா.

மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ஆம் நாளில், வெள்ளிவாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர... அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண, சிலிர்த்துப் போவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிவ-பார்வதி தரிசனம் ஒருபக்கம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில்... அடியவர்களும் ஆண்டவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றுகிற இந்த விழாவில் இன்னொன்றும் சிறப்புக்கு உரியது!

மயிலாப்பூரின் ஒவ்வொரு தெருவிலும் கோயிலைச் சுற்றி பல இடங்களிலும் தண்ணீர்ப் பந்தலும் மோர்ப்பந்தலும் களைகட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் அன்னதானம் சிறப்புற நடைபெறும்.

மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்! அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல... எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிற விழா எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

இதோ... அறுபத்து மூவர் திருவிழா தரிசனக் காட்சிகள்!

அறுபத்துமூவருக்கு அமர்க்கள விழா!
அறுபத்துமூவருக்கு அமர்க்கள விழா!

  - க.பிரபாகரன்

படங்கள்: ரா.மூகாம்பிகை