சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நோய் தீர்க்கும் வைத்தியநாதனுக்கு கும்பாபிஷேக விழா!

மகிழ்ச்சியில் ராதாநல்லூர் கிராமம்

##~##

'நோயின்றி இருந்தால்தான் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். அப்படியே நோய் வந்துவிட்டால், இருக்கவே இருக்கிறார் மருத்துவர். மூவுலகுக்கும் கண்கண்ட அந்த வைத்தியரின் பெயர்... ஸ்ரீவைத்தியநாதர்.

நாகை மாவட்டம், சீர்காழியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலை அறிவோம். இந்த ஆலயத்தை மையமாகக் கொண்டு, சுற்றிலும் நான்கு ஆலயங்கள் உள்ளன என்றும், அந்த ஆலயங்களில் உள்ள இறை மூர்த்திகளும் வைத்தியநாதன், வைத்தீஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்டவர்கள் என்றும், இந்த ஐந்து தலங்களையும் பஞ்ச வைத்தியநாத தலங்கள் என்று போற்றிக் கொண்டாடினார்கள் என்றும் கடந்த 22.10.10 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேடு வந்து, அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு பயணித்தால், ராதாநல்லூரையும் அங்கே மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலையும் அடையலாம். பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் ஒன்றான ராதாநல்லூர் ஆலயம் சிதிலம் அடைந்திருக்கும் நிலையையும், வழிபாடுகளின்றி இருக்கும் அவலத்தையும் குறிப்பிட்டு, 'அவலத்தில் தவிக்கும் ஆலயம்’ என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் துடித்துப் போனார்கள் நம் வாசகர்கள்.

நோய் தீர்க்கும் வைத்தியநாதனுக்கு கும்பாபிஷேக விழா!

உலக மக்களின் நோய்களைத் தீர்க்கும் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த ஒப்பற்ற திருத்தலம் சுமார் 100 வருடங்களாக கும்பாபிஷேக வைபவம்

நடைபெறாமலேயே அமைந்துள்ளது என்றும், நுழை வாயிலின் மேற்பகுதியிலும் மதிலின் பல இடங்களிலும் செடி- கொடிகள் புதர் போல் மண்டியிருக்கின்றன என்றும் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, வாசகர்கள் தங்களால் இயன்ற தொகையைத் திருப்பணிக்காக அனுப்பி

நோய் தீர்க்கும் வைத்தியநாதனுக்கு கும்பாபிஷேக விழா!

வைத்தார்கள். அதையடுத்து, திருப்பணிகள் மளமளவென நடக்கத் துவங்கின.

''இதோ... வருகிற மே 1-ஆம் தேதி, புதன்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது. சக்திவிகடனுக்கும் அதன் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் எங்கள் கிராமமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் ராதாநல்லூர் மக்கள்.

ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தியநாதருக்கு நடைபெறும் கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ளுங்கள். நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ்வீர்கள்!

- வி.ராம்ஜி

படங்கள்: ர.அருண்பாண்டியன்