குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்
##~##

யிலைமலையானை தரிசிக்க திராபுக்கில் இருந்து கடுமையான பயணம் மேற்கொண்டுள்ள நாம், இப்போது டோல்மாபாஸில் இருந்து ஜுஜுல்புக் எனும் இடத்துக்குச் செல்ல வேண்டும். டோல்மாபாஸ்- ஜுஜுல்புக் இடையேயான 16 கி.மீ. தொலைவு பயணம் மிகவும் சவாலானது. இந்தப் பயணத்தின் முதல் 6 கி.மீ. தொலைவுக்குக் கடுமையான மலை இறக்கத்தைச் சந்திக்க வேண்டும். குதிரையில் வருவோர்கூட இந்த 6 கி.மீ. தொலைவை நடந்துதான் கடக்க வேண்டும். மேலும், நாம் நடக்கும் மண் பகுதிகளில் ஈரத்தன்மை அதிகம் இருப்பதால், திடீர் திடீரென்று வழுக்கும். அதனால், முன்னெச்சரிக்கையுடன் பயணிப்பது அவசியம்.

சிறிது தொலைவு நடந்ததும், 'கௌரிகுண்ட்’ என்கிற இடத்தை அடைகிறோம். அங்கே, பச்சை நிறத்தில் தண்ணீர் நிரம்பிய அதிசய குளத்தைப் பார்க்கிறோம். அன்னை பார்வதிதேவி தினமும் அதில் நீராடுவதால், அவளது நிறமான பச்சை நிறத்தில் இந்தக் குளத்துத் தண்ணீர் இருக்கிறது என்கிறார்கள். நம் பார்வைக்குப் பச்சை நிறத்தில் தெரியும் இந்தக் குளத்து நீரைக் கையில் அள்ளியெடுத்தால், சாதாரண தண்ணீர் போன்றே தெளிவாக இருக்கிறது. ஆனால், அதில் அவ்வளவு பளிச்சிடும் வெண்மை!

படத்தை க்ளிக் செய்யவும்

பனிமுடி தரிசனம்

யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கௌரிகுண்ட் தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு நடக்கிறார்கள். 6 கி.மீ. தொலைவு கடந்த பிறகு, சம பரப்பான மலைப்பகுதியை அடைகிறோம். அங்கே, கயிலைமலையானின் கிழக்கு முக தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. பக்திப் பரவசத்தோடு கயிலையானை வழிபடும் பக்தர்கள், அங்கிருந்து தொடர்ந்து 10 கி.மீ. தொலைவு பயணித்தால்தான், தங்கும் இடமான ஜுஜுல்புக்கை அடையலாம். கடல் மட்டத்தில் இருந்து 15,700 அடி உயரத்தில், இங்குள்ள தங்கும் விடுதியில் வசதிகள் மிக மிகக் குறைவுதான். அதேநேரம், கயிலைமலையானை வலம் வந்த இனம்புரியாத பரவசம் நம்மை மகிழ்ச்சி என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)