குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மிட்டாய் அபிஷேகம்!

மிட்டாய் அபிஷேகம்!

##~##
மிட்டாய் அபிஷேகம்!

திருச்சியில் இருந்து பழநி செல்லும் வழியில் திண்டுக்கல்லை அடுத்துள்ளது ஒட்டன்சத்திரம். இங்கே கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீகுழந்தை வேலப்பர். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கு நடைபெறும் மிட்டாய் அபிஷேகம் விசேஷமானது. அபிஷேகத்துக்குப் பிறகு, பக்தர்களுக்கு மிட்டாயை பிரசாதமாக தருவார்கள்.

பள்ளி- கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், புதிதாக பள்ளி- கல்லூரிகளில் சேருபவர்கள், நேர்முகத் தேர்வில் தேர்வானவர்கள் இங்குள்ள ஸ்வாமிக்கு மிட்டாயை நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றிக்கடனாகவும், வளமான எதிர்காலத்துக்காகவும் இப்படியரு பிரார்த்தனையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி