குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

கலைஞர்களுக்கு கௌரவம்!

கலைஞர்களுக்கு கௌரவம்!

##~##

மது பாரம்பரியக் கலைகளையும், அவற்றைத் தமது வாழ்க்கையாகவே கொண்டு வாழ்ந்துவரும் கலைஞர்களையும் கௌரவப்படுத்துவது நம் கடமை அல்லவா? கொரட்டூர் பண்பாட்டுக் கழகம் எனும் அமைப்பைத் துவங்கி, கலைஞர்களைக் கடந்த 2 வருடமாகக் கௌரவித்து வருகிறார்கள், அன்பர்கள் சிலர்.

இந்த அமைப்பின் 2-ஆம் ஆண்டு விழாவும் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவும் கடந்த 13.4.13 அன்று சென்னை கொரட்டூரில் உள்ள நல்லி குப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. நான்கு நாட்கள் அமர்க்களமாக நடந்தது விழா!

கடந்த 79 வருடங்களாக, மிருதங்கமே வாழ்க்கை என வாழ்ந்து வரும் மிருதங்கச் சக்ரவர்த்தி டி.கே.மூர்த்திக்கு ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் விருது வழங்கி கௌரவித்தார். பிறகு, சிதம்பரம் நாட்டியப் பள்ளி மாணவிகள், ராமாயணத்தை நாட்டிய நாடகமாகச் செய்து காட்டி, அசத்தினார்கள்.

இரண்டாம் நாள், வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் தனக்கே உரிய பாணியில், 'தேசியமும் தெய்வீகமும்’ என்று பாடி  மகிழ்வித்தார். மூன்றாம் நாள் விழாவில் உபந்யாசகர் அக்காரக்கனியின் அருமையான சொற்பொழிவு. 'பெருமாளே... நீ எனக்கு எது தந்தாலும் நிறைவுதான் என்று நினைத்தால், குறைவின்றி வாழலாம்’ என்று எளிமையாகவும் புரியும்படியாகவும் விளக்கினார்.

கலைஞர்களுக்கு கௌரவம்!

நிறைவு நாளில்... டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி. ஒவ்வொரு பாடலையும் கண்மூடி, தலையசைத்து, கரவொலி எழுப்பிக் கேட்டது கூட்டம்! இதுதான்... கலைஞர்களுக்குக் கிடைக்கிற உண்மையான மனநிறைவைத் தரும் பாராட்டு!

நவராத்திரி முதலான நாட்களில், சிறு கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் வாய்ப்பு தருவதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

நல்ல முயற்சி... தொடரட்டும் இப்பணி!

- கட்டுரை, படங்கள்: இ.ராஜவிபீஷிகா