குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஸ்ரீநிருதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா!

பூரிப்பில் புலவர்நத்தம் மக்கள்

##~##

ஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான ஸ்ரீநிருதி பகவான் வழிபட்டு சிவனாரின் அருளைப் பெற்ற திருத்தலம், புலவர்நத்தம். தஞ்சாவூருக்கு அருகில் குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு அருகில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில், நிருதி பகவான் வழிபட்ட ஸ்ரீநிருதீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த ஆலயத்தின் பெருமையையும், இங்கு வந்து வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளையும் சொன்னதுடன், தற்போது வழிபாடுகள் இல்லாமல் சிதிலம் அடைந்த நிலையில் இருப்பதையும், திருப்பணிக்கு உதவியின்றி அடியவர்கள் கவலைப்படுவதையும் கடந்த 2.4.13 இதழில் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் தெரிவித்திருந்தோம்.

''நாமோ நம்ம முன்னோர்களோ, தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச அத்தனைப் பாவங்களும் இங்கே வந்து வேண்டிக்கிட்டா விலகிப் போயிடும்'' என்றும், ''இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தனை செஞ்சா, இழந்ததைப் பெறலாம்; தொழில் அபிவிருத்தியாகும்; மனதில் நிம்மதி பிறக்கும்'' என்றும் தெரிவித்திருந்தோம். அத்துடன், ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள் வழிபட்ட தலம் என்றும், திருப்பணிக்கு உதவுங்கள் என்றும் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, ஏராளமான வாசக அன்பர்கள் உடனே தொடர்புகொண்டு உதவினார்கள்.

ஸ்ரீநிருதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா!

இப்போது, சக்திவிகடன் வாசகர்களின் உதவியாலும், அன்பர்களின் கைங்கர்யத்தாலும் வரும் மே மாதம் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் புலவர்நத்தம் கிராம மக்கள்.

''எல்லாம் நல்லவிதமா நடந்துக்கிட்டிருக்கு. அத்தனை ஸ்வாமி திருமேனிகளுக்கும் வஸ்திரம் வாங்கறது, யாகசாலை பூஜைகள், அன்னதானம்னு இதுக்குதான் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டிருக்கோம். சக்திவிகடன் வாசகர்களாலயும் சிவனருளாலயும் கிடைச்சிடும்னு நம்பிக்கையோட இருக்கோம்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தட்சிணாமூர்த்தி.

12-ஆம் தேதி புலவர்நத்தம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, உங்களால் முடிந்த சேவையைச் செய்யுங்கள். இழந்த செல்வத்தைப் பெற்று நிம்மதியாக வாழ்வீர்கள்!

- வி.ராம்ஜி

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்