Published:Updated:

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

Published:Updated:
பனிமுடி தரிசனம்
##~##

திருக்கயிலாய யாத்திரையின் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டோம். கயிலைமலையானை பரிக்ரமா வர நாம் புறப்பட்ட தார்ச்சன் நகரை இப்போது நாம் நெருங்கிவிட்டோம். ஜுஜுல்புக்கில் இருந்து 14 கி.மீ. தொலைவுக்குப் பயணித்தால் தார்ச்சனை அடையலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கயிலைமலையை வட்ட வடிவில் வலம் வந்த நாம், யாத்திரையின் நிறைவில் பிரமாண்டமாய் கயிலைமலையானுக்கு எதிரே நிமிர்ந்து நிற்கும் மந்தாதா மலையைப் பார்த்து வியக்கிறோம். மந்தாதா என்கிற முனிவரே இப்படி மலையாக இருப்பதாக ஐதீகம்.

இந்த ஐதீகக் கதையின்படி, இறைவன் சிவபெருமானை எப்போதும் தரிசித்துக்கொண்டிருக்கும் பாக்கியத்தை அவரிடம் வேண்டிப் பெற்ற முனிவர் மந்தாதாவுக்குத் தன்னை எப்போதும் தரிசிக்கும் வரம் தந்து அருளிய சிவபெருமான், தன்னைவிடவும் (கயிலாயமலை) உயரமாக இருக்கும் பெரும்பேற்றையும் அவருக்கு வழங்கினார். தன்னை மனதார வழிபடும் பக்தர்களுக்குத் தன்னைவிடவும் உயர்ந்த இடத்தைத் தந்தருளக்கூடியவர் சிவனார் என்பதை இந்தத் திருக்கதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

மந்தாதா மலையைத் தரிசித்தபடி நடைப்பயணமாக வருகையில், தார்ச்சன் நகருக்கு 4 கி.மீ. தொலைவுக்கு முன்பாக நம்மை அழைத்துச் செல்ல, ஓரிடத்தில் வாகனங்கள் தயாராக நிற்கின்றன. தார்ச்சன் துவங்கி மறுபடியும் தார்ச்சனுக்கு இன்னொரு பாதையில் நாம் வந்து சேர்வதற்குள் 2 இரவு, 3 பகல் ஆகிவிடுகிறது. இந்த பரிக்ரமாவில் மொத்தமுள்ள 58 கி.மீ. தொலைவில் 45 கி.மீ. தொலைவை நடைப்பயணத்தில் செலவிடுகிறோம். மீதமுள்ள 13 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்த முடியும்.

கயிலை யாத்திரையின் நிறைவில் ஓரிடத்தில் யாத்ரீகர்கள் அனைவரும் குழந்தையாய் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். அவ்வாறு செய்வது ஐதீகம் என்பதால், எல்லோரும் ஆடிப் பாடுகிறார்கள். அந்த இடத்தை 'மங்க்’ என்கிறார்கள். துறவி ஒருவரின் நினைவிடம்தான் இந்த மங்க்.

பனிமுடி தரிசனம்

நம்மோடு 15 வயது முதல் 80 வயது வரையிலான பக்தர்கள் கயிலாய யாத்திரைக்கு வந்திருந்தனர். நிறைவாக தார்ச்சனில் மறுபடியும் கயிலைமலையானின் நேத்திர தரிசனம் எல்லோருக்கும் கிடைத்தது. அந்த தரிசனத்தில், யாத்திரையின் நிறைவில் அவர்கள் அனைவரும் ஒருமித்துச் சொன்ன ஒரு வாசகம் நிச்சயம் சத்தியவாக்குதான். அது-  'அத்தனைக்கும் ஆசைப்படும் மனித மனம் இங்கே ஒருமுறை வந்தால், அத்தனை ஆசைகளையும் அடித்துத் துரத்திவிடும்!’

நமது அரசாங்கமும் கயிலாய யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறது. அடுத்த இதழில் அந்த வழியாக பயணிப்போம்.

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)

கயிலாய யாத்திரை செல்வோர் கவனத்துக்கு...

பயிற்சி முக்கியம்: கயிலாய யாத்திரை புறப்படுவதற்கு

3 மாதத்துக்கு முன்பே நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை முறையாகக் கற்றுக்கொள்வது அவசியம்.

கொண்டு வரவேண்டியவை: தெர்மல்வேர், ஸ்வெட்டர், குளிரைத் தாங்கும் ஜெர்கின், ரெயின்கோட், 10 நாள் பயணத்துக்குத் தேவையான ஆடைகள், மலையேற்றத்துக்கு உதவும் ஷூ, சாப்பிடுவதற்கு உலர்ந்த பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள், பூஜைக்குத் தேவையான பொருட்கள், டார்ச்லைட், குடை மற்றும் முதலுதவிப் பெட்டியுடன் டாயாமேக்ஸ் மாத்திரை. இவற்றுடன், தேவைப்பட்டால் பயன்படுத்த ஆக்சிஜன் சிலிண்டர் (தார்ச்சனில் இதை வாங்கிக்கொள்ளலாம். ரூ.100-ல் இருந்து இதன் விலை ஆரம்பமாகிறது).

அறிவுரை நல்லது!: யாத்திரை தொடங்கிய பிறகு, நம் பயணத்துக்கு ஏற்பாடு செய்யும் சுற்றுலா முகவர்கள் தரும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுவது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism