Published:Updated:

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

Published:Updated:
விசாக தரிசனம்! - திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயத்தைத் தெரியும்தானே! அந்தக் கோயிலுக்கு அருகிலேயே, மலையடிவாரத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதண்டாயுதபாணி பெருமான். கந்தகோட்டம் என்று இந்தத் தலத்தைப் போற்றிக் கொண்டாடுகின்றனர், திண்டுக்கல் வாழ் மக்கள்.

மலையடிவாரத்தில் ஆர்.வி.நகர் எனும் பகுதியில் குடிகொண்டிருக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
முருகப்பெருமானைத் தரிசிக்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திரள்கின்றனர் பக்தர்கள். தம்பி முருகன் மூலவராக அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில், அண்ணன் விநாயகப் பெருமானும் மிகுந்த வரப்பிரசாதியானவர். இவரின் திருநாமம்- ஸ்ரீஜெயம்கொண்ட விநாயகர். இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் காரியம் யாவிலும் வெற்றியையே தந்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள்.

பழநியம்பதியில் ஆட்சி செய்யும் கந்தக்கடவுளைப் போலவே இங்கே உள்ள ஸ்ரீதண்டாயுதபாணியும் மேற்கு நோக்கி அருள்புரிவதல், இது சக்தி வாய்ந்த தலம் என்றும் பழநிக்கு நிகரான கோயில் என்றும் சொல்கின்றனர்.  

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

ஸ்ரீகோட்டை மாரியம்மன், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீஅபிராமி அம்பாள் சமேத ஸ்ரீபத்மகிரீஸ்வரர் என திண்டுக்கல்லின் முக்கிய கோயில்களைப் போலவே ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலிலும் வழிபாடுகளும் பூஜைகளும் அமர்க்களப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீதண்டாயுதபாணியை மனதாரப் பிரார்த்தித்தால், செவ்வாய் தோஷம் நீங்கும், கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்! அப்படி வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தம்பதி சமேதராக வந்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

தொழில் மற்றும் வேலையில் அடிக்கடி இடைஞ்சல் மற்றும் தடைகள் ஏற்படுவதாக வேதனைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீதண்டாயுதபாணிக்கு வேல் காணிக்கை செலுத்தி வேண்டிக்கொண்டால், தொழிலில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்; விரைவில் லாபம் கொழிக்கும். அதேபோல், உத்தியோகத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கப் பெற்று, தடைப்பட்டிருந்த பதவி மற்றும் சம்பள உயர்வு விரைவில் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பக்தர்கள். 

அதேபோல் கார்த்திகை, விசாகம் ஆகிய மாதாந்திர நாட்களில், ஸ்ரீகந்தபிரானுக்கு விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. வைகாசி விசாக நன்னாளில் முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மாலை

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

சார்த்தி, சிறப்பு அபிஷேக தரிசனம் கண்டால், நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து வளம் சேர்ப்பான் கந்தப்பெருமான் என்கின்றனர் பக்தர்கள்.  

வைகாசி விசாக நாளில் 16 வகை அபிஷேகங்கள், சந்தனக்காப்பு அலங்காரம், ராஜ அலங்கார திருக்கோலம் என ஸ்ரீதண்டாயுதபாணி அமர்க்களமாகத் தரிசனம் தருவார். பிறகு, அலங்கரித்த மற்றும் அபிஷேகித்த விபூதி, சந்தனம் ஆகியவற்றைப் பிரசாதமாக வழங்கு கின்றனர். அந்த விபூதி, சந்தனத்தை உடலில் பூசிக்கொண்டால், நோய்கள் யாவும் தீரும்.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் விளையும் மலைப் பழம் ரொம்பவே விசேஷம்! அந்தப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தை உட்கொள்வது மிகுந்த பலனைத் தரும் என்கின்றனர்.

- க.அருண்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்

நதிக்கரை வேலவன்!

ற்றங்கரைக்குச் சென்றால், அங்கே அரச மரத்தடியில் விநாயகர் நிச்சயம் கோயில் கொண்டிருப்பார். ஓர் ஊரில் அண்ணனுக்குப் பதிலாக தம்பியான முருகப்பெருமான்

விசாக தரிசனம்! - திண்டுக்கல்

நதிக்கரையோரம் எழுந்தருளி, கோயில் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகே, புதுக்குடி என்கிற ஊரை ஒட்டிப் பாயும் தாமிரபரணி நதிக்கரையோரம் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கே சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளி- தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.

சஷ்டி தினங்கள் இங்கே மிகவும் விசேஷம்! அன்றைய தினம் விரதமிருந்து சுப்ரமணிய ஸ்வாமியைத் தரிசிக்க, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவர் என்கிறார்கள். அதோடு, எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலுக்கு எதிரில் மிகவும் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமைகளில் வந்து, இங்கே பாயும் தாமிரபரணியில் நீராடி, அந்த ஈரத்துணியுடனேயே பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் விக்கிரகங்களின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் சர்ப்பதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தப் பரிகார பிரார்த்தனையை புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் செய்வது கூடுதல் சிறப்பு என்கிறார்கள்.

- தேவிகா, திருச்செந்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism