Published:Updated:

உலகின் குரு பாரதம்!

உலகின் குரு பாரதம்!

உலகின் குரு பாரதம்!

உலகின் குரு பாரதம்!

Published:Updated:
உலகின் குரு பாரதம்!
##~##

க்னி வெயில் ஒருபுறம் தகித்துக்கொண்டிருக்க, பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபா. அங்கே நடைபெற்ற, சென்னை மேற்கு மாம்பலம் யோக சாந்தி குருகுலத்தின் 18-ஆம் ஆண்டு விழாவில்... இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் 60 இந்து இயக்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அயோத்தி, மதுரா, காசி, சோம்நாத், காஞ்சிபுரம், ராமேஸ்வரம், ஹரித்துவார் ஆகிய க்ஷேத்திரங்களில் இருந்து வந்திருந்த ஆச்சாரியர்கள், 'உலகின் குருவாக பாரதம் மாற நாம் என்ன செய்ய வேண்டும்’ என்கிற தலைப்பில் பேசினார்கள். யோக சாந்தி குருகுலத்தின் நிறுவனர் சுவாமி பிரம்ம யோகானந்தா ஆசியுரை வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நாம் எல்லோரும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கக்கூடாது. நம்மிடம் வாக்கு சுத்தம் வேண்டும். நான் சொல்வதையே நான் செய்வேன் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. நம் கடமையை நாம் செய்தே ஆகவேண்டும். நம் குடும்பம் நன்றாக இருந்தால், நாடும் நன்றாக இருக்கும்.

உலகின் குரு பாரதம்!

இதெல்லாம் நடைபெற வேண்டும் என்றால், நம் கைகள் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும். வாய் ராமநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பக்தி நூல்களைப் படிக்க வேண்டும். இந்தப் பணியை, 'நான்’ என்கிற அகங்காரத்தால் செய்யாமல், ஈஸ்வர சிந்தையுடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் 12 ஆண்டுகளில் அயோத்தியில் ஸ்ரீராமருக்குக் கோயில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுவிடும். என்றைக்கு இது நனவாகிறதோ, அன்றுதான் இந்து கலாசார சுதந்திர நாள். அதற்காக 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்னும் ராமநாமத்தை தினமும் சொல்வோம். லட்சியத்தை அடைவோம்'' என்றார், சுவாமி பிரம்ம யோகானந்தா.

உலகின் குரு பாரதம்!

பொற்றாமரை அமைப்பின் நிறுவனரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான இல.கணேசன் பேசுகையில், 'சுவாமி விவேகானந்தரை நாம் எல்லோரும் 'தேசபக்த துறவி’ என்கிறோம். கன்னியாகுமரியில் பாரதத் தாயை நோக்கித் தவம் இருந்து, பாரத அன்னையை தரிசித்தவர் என்கிற ஒரே காரணத்தால்தான் நாம் அப்படிச் சொல்கிறோம். பாரதம் என்பது வெறும் மண் அல்ல. பாரதத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றால், அங்கே வாழும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பாரத மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் சொல்லி இருக்கிறார் விவேகானந்தர். பராசக்தியாக, ராஜராஜேஸ்வரியாக சிம்மாசனத்தில் நம் பாரத அன்னை அமர வேண்டும் என்றார் அவர். அதுதான் அவரது லட்சியமாகவும் இருந்தது. 'நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆவாய்’ என்று சொன்னவர் அல்லவா அவர்! அதனால், பாரதம் உலகின் குருவாக வேண்டும் என்கிற சிந்தையுடன் உழைப்போம்' என்றார்.

முன்னதாக, விழாவில் சுவாமி பிரம்ம யோகானந்தாவின் சொற்பொழிவுகள் அடங்கிய 5 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. விழாவில் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன், மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் சூரியநாராயணராவ், முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- எம்.ஜெயமுருகானந்தம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism