Published:Updated:

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

Published:Updated:
திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!
##~##

விஜய வருடம் வைகாசி மாதம் 14-ஆம் தேதி, 28.5.13 செவ்வாய்க்கிழமை கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதியில், மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம், ஏழாம் ஜாமத்தில், உத்தராயன புண்ய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு பிரகஸ்பதி எனும் குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை, இங்கே அமர்ந்தபடி தன் கதிர்வீச்சைச் செலுத்துகிறார். இதையே குருப்பெயர்ச்சி என்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த வருடத்தைப் போலவே, ராஜகுரு கோலோச்சும் தென்குடித் திட்டை தலத்தில், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயிலில் ஸ்ரீராஜகுரு பகவான் திருச்சந்நிதியில், நம் சக்தி விகடன் வாசகர்களுக்காகவும் அவர்கள்தம் குடும்ப க்ஷேமத்துக்காகவும் மற்றும் உலக மக்களின் சௌக்கியத்துக்காகவும் சிறப்பு பூஜைகள், விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் செய்வது என முடிவு செய்து, 2.5.13 அன்று, குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் பூஜைகள் செய்தோம்.

ஆதிப்பரம்பொருள் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று அம்சங்களாக்கியது. இந்த மூன்று சக்திகளில் ஒருவரான பிரம்மா, தன் படைப்புத் தொழிலின் உதவிக்காக ஏழு ரிஷி பெருமக்களை உருவாக்கி, அமர்த்திக் கொண்டார். இவர்களை 'சப்தரிஷிகள்’ என்று போற்றுகிறோம். இவர்களில் 'ஆங்கிரஸ’ முனிவரும் ஒருவர்.

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

அவரின் மைந்தனுக்கு ஒரேயரு ஆசை... மிக உயர்ந்த, உன்னதமான இடத்தை அடையவேண்டும் என்பதே அவர் விருப்பம். எல்லாக் காலத்திலும் எல்லோராலும் போற்றுதலுக்கு உரியவராக இருப்ப வர் குருநாதர்தான். ஓர் ஊரில் இருந்து அடுத்த ஊருக்குச் செல்வதில் இருந்து, கடவுளை

அடைவதற்கான வழிகள் வரை... எல்லாச் செயல்களுக்கும் குருநாதரின் வழிகாட்டலும் ஆசியும் அவசியம். எனவே, அப்படியரு உயர்ந்த நிலையை அடைவதையே தன் லட்சியமாகவும் விருப்பமாகவும் கொண் டிருந்தார் அவர். வேதங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்; ஞான யோகங்களை அறிந்து தெளிந்தார்; யாகங்கள் வளர்த்தார். குறிப்பாக, யாகங்களிலேயே மிகப் பிரமாண்டம் எனச் சொல்லப்படும் அஸ்வமேத யாகத்தை நூறு முறைக்கும் மேல் செய்தார்.

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

சூரியோதயத்திலும் சந்திரோதயத்திலும் இடைவிடாது ஜப தபங்களில் மூழ்கினார். அந்த எண்ண அலைகள் அவரைச் செம்மைப் படுத்தின. புத்தியும் மனமும் ஒரு புள்ளியில் இணைந்தன. நல்லது கெட்டது, விருப்பு வெறுப்பு, வேண்டுவது வேண்டாதது என்கிற பாகுபாடுகளைக் கடந்தார். பாகுபாடுகள் இல்லாதவர்தான் குருநாதராக இருக்கமுடியும் என்பதால், உலகம் முழுவதையும் ஒரே மாதிரி யான குணத்துடன், ஒரே பார்வையுடன் பார்க்கிற நிலைக்கு உயர்ந்தார். இதற்கும் மேலானதோர் உயர்ந்த பதவியும் இடமும் அவரைத் தேடி வந்தது.

ஆமாம்! ஞானவானும், வேதங்களைக் கற்றறிந்தவருமான இவரைத் தேடிவந்து வணங் கிய தேவர்கள், தங்களின் குலகுருவாக ஏற்றுக் கொண்டனர். தேவர்களுக்குக் குருவாக மிக உயர்ந்த நிலையில், பீடத்தில் அமர்ந்த அவரை எல்லோரும் ராஜகுரு என்று போற்றி வணங்கி நமஸ்கரித்தார்கள். அவர்தான் பிரகஸ்பதி!

ஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள திட்டை கிராமத்தில், தீர்த்தக்குளத் துடனும் கோபுரத்துடனும் அற்புதமாக அமைந் துள்ளது ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம்.

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

தேவர்களின் குரு என்றும், ராஜகுரு என்றும் உயர்ந்த ஸ்தானத்துக்கு வந்தாலும், எந்தக் கர்வமும் அலட்டலும் இல்லாமல், சிவபூஜை செய்வதிலேயே ஈடுபட்டு வந்தார் பிரகஸ்பதி. இதோ... இந்த திட்டை தலத்துக்கு வந்து, அங்கே இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு தினமும் அபிஷேகம் செய்தார்; வில்வம் சார்த்தினார்; நமசிவாய மந்திரம் ஜபித்தார். அதில் குளிர்ந்து போன சிவபெருமான், பிரகஸ்பதிக்குக் காட்சி தந்தருளினார். அதுமட்டுமா? 'உலகைத் தன் அசைவில் வைத்திருக்கும் ஒன்பது கிரகங்களில் நீயும் ஒருவன்’ என்றும் அருளினார். பிரகஸ்பதி எனும் ராஜகுருவுக்குக் குரு பதவியையும் குரு யோகத்தையும் தந்தருளிய புண்ணியம் நிறைந்த தலம்- திட்டை! இந்தப் புனிதமான தலத்தில்... வாசகர்களே, உங்களுக்காகச் சிறப்பு ஹோமங்கள் இனிதே நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீகணபதி ஹோமமும், பிறகு நவக்கிரக ஹோமமும் குரு ப்ரீதி ஹோமமும் செய்யப்பட்டன. குரு பகவானின் உத்ஸவ மூர்த்தம் அலங்கரிக்கப்பட்டு, அவருக்கு முன்னே விபூதி குங்குமப் பிரசாதங்கள் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டன. அதேபோல், கருவறை யில் உள்ள ராஜகுரு மூலவருக்கு, அனைத்து வகையான அபிஷேகங்களும் செய்யப்பட்டன. ஹோமத்தின்போது பூஜிக்கப்பட்ட கலச நீரை பிராகார வலமாக எடுத்து வந்தனர். மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த கலச நீரால் ராஜகுரு பகவானுக்கு அபிஷேகம் நடந்தேறியது கண்கொள்ளாக் காட்சி!

திட்டை ராஜகுருவுக்கு ஹோமம்-பூஜை!

''குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 6.6.13 அன்று லட்சார்ச்சனையும், 7.6.13 முதல் 10-ஆம் தேதி வரை சிறப்புப் பரிகார ஹோமங்களும் நடை பெறுகின்றன. லட்சார்ச்சனையிலும் பரிகார ஹோமத்திலும் பங்குபெற விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திட்டை குருபகவான் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான திருப்பணிகளும் நடந்து வருகின்றன'' என்றார் செயல் அலுவலர்.  

கோயிலின் செயல் அலுவலர் கோவிந்தராஜு, சிவாச்சார்யர் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் ஹோமம் மற்றும் பூஜைகள் சிறப்புற நடைபெறப் பெரிதும் உதவினார்கள்.

இதோ... ராஜகுருவின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட விபூதி- குங்குமப் பிரசாதம் உங்கள் கரங்களில். குருவரும் திருவருளும் உங்களுக்குக் கூடி வந்து, உங்களை இன்னும் இன்னும் செழிக்கச் செய்யட்டும்!

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism