Published:Updated:

வீரபத்திரர் கோயிலில் கும்பாபிஷேகம்...

மகிழ்ச்சியில் தாராசுரம் அன்பர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

சிவனாரின் ருத்ர தாண்டவத்தின்போது, வியர்வைத் துளி பூமியில் விழ, அதில் இருந்து வெளிப்பட்டவர் வீரபத்திரர் என்பர். சிவனார் சடையின் இரண்டு முடிகளில் இருந்து பத்ரகாளியும் வீரபத்திரரும் தோன்றியதாகவும் சொல்வர்.

 தட்சனை அழித்த வீரபத்திரருக்குச் சில சிவாலயங்களில் மட்டுமே சந்நிதி உண்டு. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரத் தில், ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்தில் வீரபத்திரருக்குத் தனியே ஓர் ஆலயமே அமைந்துள்ளது விசேஷமல்லவா? ஆனால், இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து சுமார் 400 வருடங்களுக்கும் மேலாகி விட்டது என்பதை, 4.9.2009 இதழில் 'ஆலயம் தேடு வோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். ராஜேந்திர சோழன் கட்டிய இந்த ஆலயம் சிதிலம் அடைந்து, கிடப்பதையும் அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம்.

இன்னொரு விஷயம்... விக்கிரம சோழன் மற்றும் 2-ஆம் குலோத்துங்க சோழனுக்கு ராஜகுருவாக இருந்த ஒட்டக்கூத்தர், வீரபத்திரரைப் போற்றி 'தக்கயாகப் பரணி’ பாடியதும் இந்தத் தலத்தில்தான்! அதுமட்டுமா, இங்கேதான் ஒட்டக்கூத்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள் ளது. இத்தனைப் பெருமை வாய்ந்த கோயில், இன்றைக்கு வழிபாடுகளின்றி, கம்பீரத்தைத் தொலைத்து நிற்கிறது என எழுதியிருந்தோம். இதை அறிந்த நம் வாசக அன்பர்கள் தங்களால் இயன்றதை நன்கொடையாகக் கோயிலுக்கு அனுப்பி வைத்தார்கள். தவிர, 'இங்கே உள்ள வீரபத்திரரை செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில், எட்டு எலுமிச்சை தீபமேற்றி, எட்டு முறை வழிபட, வாழ்வில் எட்டாத உயரத்தையும் எட்டலாம்’ என்பதை அறிந்து, வந்து வணங்கிச் சென்று பலன் பெற்றவர்களும் மனம் உவந்து நிதியை அள்ளிக் கொடுத்தார்கள். வருடந்தோறும் ஆவணி மாத உத்திராட நாளான ஒட்டக்கூத்தர் ஆராதனை விழாவில் கலந்துகொண்டு வணங்கிச் சென்றார்கள்.

வீரபத்திரர் கோயிலில் கும்பாபிஷேகம்...
வீரபத்திரர் கோயிலில் கும்பாபிஷேகம்...
வீரபத்திரர் கோயிலில் கும்பாபிஷேகம்...

பிறகு திருப்பணிகள் துவங்கப்பட்டு, இப்போது புதுப்பொலிவுக்குத் தயாராகி வருகிறது ஆலயம். இதோ... வரும் 13.6.13 வியாழக்கிழமை காலை 9 முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் தாராசுரம் மக்கள். சிறப்புமிகு தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் கோயிலின் கும்பாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு, உங்களால் முடிந்ததைச்

செய்யுங்கள். எதிரிகள் தொல்லையில் இருந்து நம்மை விடுபடச் செய்வார் வீரபத்திரர்.

- வி.ராம்ஜி

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு