கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கடிச்சம்பாடி. இந்த ஊரின் நடுவே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்.

பிரமாண்டமான இந்தக் கோயில் குறித்தும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலின் பெருமைகள் குறித்தும் சக்தி விகடனில், கடந்த 14.4.13 இதழில் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

''கும்பாபிஷேகம் நடந்து சுமார் 150 வருடங்களாகி விட்டன. மிகப்பெரிய பிராகாரம், பிரமாண்டமான மதில் என விமரிசையாக இருந்த ஆலயத்தில், அன்னாபிஷேக விழா அமர்க்களப்படும். சித்திரை 16 முதல் 18-ஆம் தேதி வரை, கதிரவன் சிவனாரின் லிங்கத் திருமேனியை வழிபடும் காட்சி அற்புதமானது!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கும் கைங்கர்ய சபாவின் பொருளாளர் கணேசனின் கருத்தையும் பதிவு செய்திருந்தோம்.

''அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதிரிபுரசுந்தரி. பக்தர்களின் குறைகளைச் சட்டெனக் களைந்துவிடும் சக்தியும் கருணையும் கொண்டவள். 'கல்யாணம் கட்டிக் கொடுத்த இடத்துல நிம்மதியாவே வாழலை என் பொண்ணு. அவள் வாழ்க்கை சீராகணும்!’ என்று இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் பலன் நிச்சயம்'' என்று எழுதியிருந்தோம். இத்தனைப் பெருமைகள் கொண்ட கோயில், கும்பாபிஷேகம் காண வேண்டாமா என வேதனையுடன் கேட்டிருந்தோம்.

படித்துவிட்டு, வாசகர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்பத் துவங்கினார்கள். அதைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் சுறுசுறுப்படைந்து, இதோ... வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி, சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகம் நடைபெறப் போகிறது என்று பெருமிதம் பொங்கத் தெரிவிக்கின்றனர், கடிச்சம்பாடி மக்கள்.

''அடியார்களாகிய நாம் மனம் வைத்தால் சிவனாரின் கோயிலில், சீக்கிரமே கும்பாபிஷேகம் நடக்காதா என்ன? கட்டாயம் நடக்கும். விரைவிலேயே சக்தி விகடனில், 'நல்லது நடந்தது’ என்னும் தலைப்பில், ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் எனும் செய்தியும் வரும்!'' என்று கட்டுரையின் கடைசிப் பாராவில் நாம் குறிப்பிட்டிருந்தது இப்போது நிறைவேறிவிட்டது.

ஊருக்கே படியளக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரரும், கருணையே உருவெனக் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாளும் குடியமர்ந்திருக்கும் கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, தென்னாடுடைய சிவனின் பேரருளைப் பெறுங்கள், அன்பர்களே!

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்