திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பூண்டி நீர்த்தேக்கம். இங்கே, பூண்டி கூட்ரோட்டில் இருந்து, சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது நெல்வேலி எனும் நெய்வேலி என்கிற சிறிய கிராமம். இங்கே, கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும் ஸ்ரீலலிதாம்பிகையையும் குறித்து, கடந்த 19.3.13 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில், 'சித்தர்கள் வழிபட்ட சிவாலயம்... சீரமைக்க உதவுவோம்’ எனும் தலைப்பில் எழுதியிருந்தோம்.

கோயிலின் சிறப்பு... கல்லால மரம். இங்கே, கல்லால மரத்தடியில் அழகிய லிங்க வடிவமாகக் காட்சி தருகிறார் சிவனார். தவிர, ராகு- கேது பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது இந்தக்

கோயில். முள்ளும் புதருமாக சிதிலமடைந்திருக்கிற கோயிலை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலய சேவா கமிட்டியினர் ஊர்மக்களின் உதவியுடன் சீரமைத்துத் திருப்பணியில் ஈடுபட்டு வருகிறனர் என்பதை அந்தக் கட்டுரையில் தெரிவித்திருந்தோம்.

கருவூர்ச் சித்தர் மற்றும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் முதலான சித்தர்கள் பலரும் வழிபட்ட தலம் என்கிறார்கள். இங்கு வந்து ஸ்வாமியைத் தரிசித்து வேண்டினாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம். ஆனால் அன்பர்களின் உதவியை, பொருளுதவியை நம்பியே இருக்கிறோம் என்று கண்ணீருடன் தெரிவித்திருந்தனர் ஊர்மக்கள்.

''ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீலலிதாம்பிகை ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைத்து விட்டோம். புதிதாக ஸ்ரீஅக்னீஸ்வரரின் மூர்த்தத்தைச் செய்து பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம்'' என்று சேவா கமிட்டியினர் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தோம்.

''மாங்கல்ய பாக்கியம் தந்தருளும் ஸ்ரீலலிதாம்பிகை குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நிதி தாருங்கள். கல்லால மரத்தடியில் குரு தட்சிணாமூர்த்தி போல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீஆதி அக்னீஸ்வரருக்கு அள்ளிக்கொடுங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் சிவனார்'' என்று எழுதியிருந்தோம்.

''இதோ... சக்திவிகடன் வாசகர்களின் பேருதவியால், வருகிற 26.6.13 அன்று புதன்கிழமை காலை 9.30 முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது'' என்று பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர் சேவா கமிட்டியினர்.

கோயில் திருப்பணிக்கும் கும்பாபிஷேகத்தும் உதவி செய்த அத்தனை வாசக அன்பர்களுக்கும் எல்லா நன்மைகளும் வந்தடையட்டும். அவர்களின் சந்ததிகள் செழித்து சீரும் சிறப்புமாக, வாழ தென்னாடுடைய சிவனார் துணை நிற்கட்டும்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா