திருச்சி- லால்குடிக்கு அருகில் உள்ளது மணக்கால். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.

பொதுவாக, ஆலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

அழகிய திருக்குளம் கோயிலுக்கு எதிரில் இருக்க, ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீநங்கையார் கோயில். ஸ்ரீகௌமாரி அம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். கோயிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில் இது. இங்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.

பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்த கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம். கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும்; குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்க்கு விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

நவராத்திரித் திருவிழாவும் ஆடித் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பத்து நாள் விழாவாக நடைபெறும் நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு வெகு பிரசித்தம்.

அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங் களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்பர்.

மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்க, வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்னைகள் நீங்க, திருமண யோகம் பெற, குழந்தை பாக்கியம் பெற ஸ்ரீசப்தமாதர்களை வணங்கி வளம் பெறுவோம்.

- த.பிரியங்கா

படங்கள்: தே.தீட்ஷித்