சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திருவிளக்கு பூஜை: கூடலழகர் கோயில்

திருவிளக்கு பூஜை: கூடலழகர் கோயில்

திருவிளக்கு பூஜை: கூடலழகர் கோயில்
##~##
தூ
ங்காநகரமாம் மதுரையில், துயரங்களைப் போக்கி அருளும் ஸ்ரீகூடலழகர் பெருமாள் கோயிலில், 15.2.11 அன்று மாலை, சக்தி விகடன் வாசகிகள், பெருமளவில் கூடியிருந்தனர். அந்த நாளில்தான், வாசகியரது குடும்பங்கள் குறையின்றி வாழ்வதற்கான திருவிளக்கு பூஜை நடந்தது. இது, சக்தி விகடன் நடத்தும் 54-வது திருவிளக்கு பூஜை!

''திருப்பரங்குன்றம் திருவிளக்கு பூஜைல கலந்துக்கிட்டப்ப, கல்யாண வரம் கேட்டுப் பிரார்த்தனை பண்ணினேன்; சீக்கிரமே கல்யாணம் முடிஞ்சுது. இப்ப, கூடலழகர் பெருமாள் கோயில் விளக்கு பூஜைல, 'அருமையான குழந்தையைக் கொடுப்பா, கடவுளே’ங்கறதைத் தவிர, வேறென்ன கேக்கப் போறேன்!'' - வெட்கமும் சந்தோஷமும் மிளிரச் சொல்கிறார், மதுரை வாசகி ஆண்டாள்.

திருவிளக்கு பூஜை: கூடலழகர் கோயில்

''என் மகளுக்குக் கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கலை. அவளுக்குச் சீக்கிரமே அந்த பாக்கியம் கிடைக்கணும். தவிர, என் மருமகள், நிறைமாசமா இருக்கா. அவளுக்குச் சுகப்பிரசவம் நடக்கணும். இந்தப் பிரார்த்தனைகளோடு பெருமாளைச் சேவிச்சுட்டு, பூஜைல கலந்துக்கிட்டேன்'' என நெகிழ்கிறார், விருதுநகர் வாசகி சுபலட்சுமி. ''எந்தத் தொழில் தொடங்கினாலும் தோல்வி; கஷ்டத்துக்கு மேல கஷ்டம்! எங்க துக்கமெல்லாம் மறையணும்; தொழில்ல வெற்றி கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று கலங்கிய குரலில் தெரிவித்தார், மேலூர் வாசகி கீதாலட்சுமி.  

''கல்யாணமாகி அஞ்சு வருஷத்துல, மூணு முறை அபார்ஷன் ஆயிருச்சு. இப்ப நான் மூணு மாச கர்ப்பம். 'கடவுளே... இந்த முறையாவது எனக்குக் குழந்தையைக் கொடு. அந்தக் குழந்தைக்கு நல்ல ஆயுளைத்தா!’ன்னு வேண்டிக்கிட்டேன். கூடலழகர் அருளால, இந்த முறை வாரிசு தங்கிடும்னு நம்பிக்கை வந்திருக்கு'' எனக் கண்ணீர் கலந்த நம்பிக்கைக் குரலில் தெரிவிக்கிறார் தேனி வாசகி மீனாள்.

''மனசுல ஏதாவது கஷ்டம்னா பெருமாள்கிட்டதான் ஓடி வந்து முறையிடுவேன். என் கஷ்டத்தை சடுதியில் தீர்த்து வெச்சுடுவார் இந்த கூடலழகர். 'எனக்கு மட்டுமில்லே; எல்லாருக்குமே ஏதாவதொரு கஷ்டம் இருக்குமே! அத்தனை பேருடைய கஷ்டங்களும் தீர கூடலழகர் அருள்புரியணும்'' கரம்கூப்பி பிரார்த்திக்கிறார் வாசகி சுபலட்சுமி. அவரது பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும்.

  - பூ.ஜெயராமன்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி