Published:Updated:

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர்

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர்

பிரீமியம் ஸ்டோரி
திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர்
##~##
யா
கங்களில் முதலிடம் பெறும் அக்னிதேவன், தீராத வயிற்று வலியாலும் பாவத்தாலும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு விமோசனம் அருளிய தலம், ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோயில். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள இந்தத் தலத்து நாயகியின் திருநாமம்- ஸ்ரீசௌந்தரநாயகி. 

யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்ட தால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட...

நொந்து போனார் அக்னி பகவான். சிவனாரிடம் முறையிட்டார். இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனை அபிஷேகித்து வழிபட்டார்; வரம் பெற்றார். பிறகு, சிவனாரிடம், ''இந்தத் தலத்துக்கு வந்து  வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களை யும் போக்கியருள வேண்டும்'' என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, 'அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார்.  

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர்

இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடியப்பர், அழலா டியப்பர், வன்னிவனநாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார்கொண்ட முலையாள், சௌந்தரநாயகி என்றும் திருநாமங் கள். ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப் பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது.

திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் கொள்ளை அழகு! ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று; மகாசிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது ஸ்தல புராணம். 'காமக்கோட்டம் உடைய பெரியநாச்சியார்’ என ஸ்ரீகாமாட்சியைச் சொல்வார்கள். அவை ஒன்பது காமக் கோட்டங்கள். அவற்றில், ஸ்ரீசௌந்தரநாயகி எழுந்தருளியுள்ள இந்தத் தலமும் ஒன்று.

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர்

இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகிவிட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும், மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, அற்புதத் திருமேனி. கழுத்தில் ருத்திராட்சம், சிரசில் சூரிய- சந்திரர்களோடு கையில் சின்முத்திரை காட்டி, கல்வியும் ஞானமும் அள்ளித் தருகிறார்.

இவரை, வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத் தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி  நலம் பெறலாம்.

பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடை பெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படுமாம். பத்து நாட்களும், ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.  வருகிற 19-ஆம் தேதி (19.3.11) பங்குனி உத்திரம். இந்த நாளில் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்கி வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்!

- இரா.மங்கையர்க்கரசி,
படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு