Published:Updated:

திட்டை குரு பகவான் கோயிலில் ஜூலை 15 கும்பாபிஷேகம்!

திட்டை குரு பகவான் கோயிலில் ஜூலை 15 கும்பாபிஷேகம்!

திட்டை குரு பகவான் கோயிலில் ஜூலை 15 கும்பாபிஷேகம்!

திட்டை குரு பகவான் கோயிலில் ஜூலை 15 கும்பாபிஷேகம்!

Published:Updated:
##~##

ஞ்சாவூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் தென்குடித் திட்டை . இங்கே, ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. கோடி நன்மைகளை அள்ளித் தரும் ஸ்ரீராஜகுரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இது!

பிரளய காலத்தில், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் அழியாமல் திட்டு போலக் காட்சி அளித்ததாம். அந்தப் பகுதியே இந்தத் திருத்தலம். அதனால்தான் ஊருக்குத் திட்டை எனும் திருநாமம் அமைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவனாருக்கு இணையாக மிக உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. அவளின் திருச்சந்நிதிக்கு மேலே, விதானத்தில் 12 ராசிக் கட்டங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அனைத்து ராசிக்காரர்களின் கஷ்டங்களையும் நீக்கி அருள்கிறாள் தேவி.

திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவனாருக்குத் திட்டையில் தன் நன்றியைச் செலுத்துகிறார் சந்திரபகவான் என்பர். அதாவது, சிவலிங்கத் திருமேனிக்கு மேலே சந்திரகாந்தக் கல்லாக இருந்து, காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நித்யாபிஷேகம் செய்கிறார் சந்திர பகவான்.

திட்டை குரு பகவான் கோயிலில் ஜூலை 15 கும்பாபிஷேகம்!

ஐந்தெழுத்து மந்திரத்தை அடியவர்களுக்குச் சூட்சுமமாக உணர்த்தும் தலம் இது. அதேநேரம், பஞ்சபூதங்களுக்குமாக ஐந்து சிவலிங்கங்கள் இருப்பது இங்குதான். நான்கு மூலைகளில் நான்கு லிங்கங்களும், கருவறையில் ஸ்ரீராமபிரானின் குலகுரு ஸ்ரீவசிஷ்டர் வழிபட்ட ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என ஐந்து சிவலிங்கத் திருமேனிகளை இங்கே தரிசிக்கலாம்.

பரிவார தெய்வங்களான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகுரு பகவான், ஸ்ரீபைரவர் ஆகியோர் பிரமாண்ட மூர்த்தங்களுடன் தனிச் சந்நிதிகளில் அருளும் சிறப்பு பெற்ற தலம்... திட்டை. இங்கே கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகியவை கருங்கல்லால் அமைக்கப்பட்டிருப்பது மிக அரிதான ஒன்று!  

ஸ்ரீபைரவரின் பிரமமஹத்தி தோஷம் நீங்கி ஸ்ரீகால பைரவராக, பைரவ க்ஷேத்திரமாகத் திகழும் பெருமை திட்டைக்கு உண்டு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள், தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால், விரை வில் தோஷங்கள் நீங்கும்; சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களால் உண்டாகும் தோஷங்களைத் தன் பார்வையாலேயே நீக்கியருளும் சக்தி கொண்ட ஸ்ரீராஜகுரு கோலோச்சுகிற அற்புதமான திருத்தலம் இது. இத்தனைப் பெருமைகள் கொண்ட திட்டைத் திருத்தலத்தில், வரும் 15.7.13 திங்கட்கிழமை அன்று காலை 9 முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், குரு பகவான் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, குருவருளையும் திருவருளையும் பெறுங்கள்.

- வி.ராம்ஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism