சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

'இந்தியா, ஆன்மிகம், வைணவம்!'

'இந்தியா, ஆன்மிகம், வைணவம்!'

'இந்தியா, ஆன்மிகம், வைணவம்!'

கூரத்தாழ்வானின் 1001-ஆம் ஆண்டு திருநட்சத்திர விழா, 'தினம் ஒரு திவ்ய பிரபந்தம்’ டி.வி. தொடரின் 750-வது நாள் கொண்டாட்டம், 2-வது இளைஞர் எழுச்சி மாநாடு என முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது சென்னை மயிலாப்பூரில்.

ஸ்ரீஅனந்தபத்மநாபாச்சார்யரின் 'சரன்’ (சம்பிரதாய அனுஷ்டான ரக்ஷண அபிமான்) அமைப்பின் மூலம், 27.2.11-ஆம் தேதி, மயிலை ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான நிகழ்ச்சிகள்! திண்டிவனம் பாகவதர்களின் நாம சங்கீர்த்தன பஜனை, சிறுவர்கள் நிகழ்த்திய தசாவதார நாடகம், ஸ்ரீராமானுஜ சம்பிரதாயம் எனும் தலைப்பில் கலந்துரையாடல்... என ஒவ்வொன்றும் பிரமாதம்!

'இந்தியா, ஆன்மிகம், வைணவம்!'
##~##
வைணவத்தின் பெருமைகள், வைணவக் கொள்கை யால் கற்ற பாடம்... என இளைஞர்கள் பலரும் மேடையில் விவரித்த விதம், வருங்கால உபந்யாசகர்களாக அவர்களை நம் கண் முன் நிறுத்தியது. உபந்யாசகர் அனந்த பத்மநாபாச்சார்யரின் உரை, விழாவின் ஹைலைட்! ''வருங்கால இந்தியாவும் சரி, வைணவமும் சரி... இரண்டுமே இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. வைணவ சம்பிரதாயங்களை நாமும் உணர்ந்து, நம் சந்ததியினருக்கும் தெளிவுபடுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை'' என்றார்.

உண்மைதான். தேசம் வளர்வதும், தெய்வீகம் வளர்வதும் இளைஞர்கள் கையில்தான்!

- செ.கார்த்திகேயன்
  படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்