Published:Updated:

கோமாதாவைக் காக்கும் கோபிநாதா...!

கோமாதாவைக் காக்கும் கோபிநாதா...!

கிருஷ்ண... கிருஷ்ணா!

கோமாதாவைக் காக்கும் கோபிநாதா...!

கிருஷ்ண... கிருஷ்ணா!

Published:Updated:
கோமாதாவைக் காக்கும் கோபிநாதா...!
##~##

தின்மூன்றாம் நூற்றாண்டில், பெல்லாரி தேசத்தில் உள்ள நாயக்கர், தான தருமங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தார். கடவுளின்மீது மாறாப் பற்றும், ஏழைகள் மீது கருணையும் கொண்டு இனிதே வாழ்ந்து வந்தார்.

அந்தத் தேசத்தில் வறுமையும் சோகமும் சூழ்ந்திருந்த காலம் அது. ஒருமுறை, யாசகம் கேட்டு வந்த அந்தணருக்குத் தன்னால் இயன்றதை வாரி வழங்கினார் நாயக்கர். அப்போது, பாண்டிய நாட்டின் பெருமைகளைச் சொன்ன அந்த அந்தணர், 'அந்தத் தேசத்துக்குச் சென்று வாருங்கள். முடிந்தால் அங்கேயே தங்கி வாழுங்கள்; வளம் பெறுவீர்கள்!’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்படி நாயக்கர், தன் மனைவி கோப்பம்மாளுடனும் மகன் கோபிநாதனுடனும் மதுரையம்பதி நோக்கிப் பயணப்பட்டார். கூடவே, தன்னிடம் இருந்த மாடுகளையும் ஓட்டிக்கொண்டு, பாண்டிய தேசத்துக்கு வந்துகொண்டிருந்தார்.

வழியில், மலையும் பசுமையும் சூழ்ந்த இடத்தில் இளைப்பாறியது அந்தக் குடும்பம். அந்த இடமும் அமைதியும் பிடித்துப் போக, நாயக்கர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி வாழத் தொடங்கினார்.

சில காலத்துக்குப் பிறகு, அந்த ஊரில் மழை பொய்த்தது. காடு- கரையெல்லாம் வறண்டன. அப்போது ஒருநாள், மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்ற நாயக்கரின் மகன் கோபிநாதன், திடீரென மரணித்துப் போனான். அதைக் கண்டு துடிதுடித்துப் போன அவனது தாயார் கோப்பம்மாளும் அந்த அதிர்ச்சியிலேயே இறந்தாள்.

கோமாதாவைக் காக்கும் கோபிநாதா...!

இந்த நிலையில், ஊரின் பஞ்சத்தைப் போக்கவே அந்தச் சிறுவன் கடவுளிடம் வேண்டிக்கொண்டு இறந்து போனான் என்று பேச்சு கிளம்பியது. அதையடுத்து, ஊர் ஜமீன்தாரின் கனவில் தோன்றிய சிறுவன், 'இந்த ஊரில் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்குக் கோயில் கட்டி வழிபடுங்கள்; ஊர் செழிக்கும்!’ என சொன்னான்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் சாலையில் உள்ளது ரெட்டியார்பட்டி. அங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், கன்னிவாடி எனும் அழகிய கிராமத்தை அடையலாம்.

இந்த ஊருக்கு முன்னதாக அமைந்துள்ள மலையில், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகோபிநாத ஸ்வாமி. சுமார் 450 அடி உயர மலையில், 619 படிகளைக் கடந்து சென்றால், ஸ்ரீகோபிநாதரின் அற்புதமாகத் தரிசிக்கலாம்.

கோமாதாவைக் காக்கும் கோபிநாதா...!

தாங்கள் வளர்த்து வரும் ஆடு- மாடுகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டாலோ, அவற்றின் இனப்பெருக்கத்தில் குறைபாடுகள் இருந்தாலோ இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள். உடனே ஆடு- மாடுகளின் நோயைத் தீர்த்தருள்கிறார் ஸ்ரீகோபிநாத ஸ்வாமி என்பது மக்களின் நம்பிக்கை.

நோய்வாய்ப்பட்ட மாட்டில் இருந்து கிடைக்கும் பால் மற்றும் தயிர், நெய் ஆகியவற்றைக் கொண்டு ஸ்ரீகோபிநாதருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வீட்டில் உள்ள மாடு- கன்றுகளின் பிணிகள் நீங்கி, அவை நோயின்றி வாழும்; வீட்டில் சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்.

நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணம் பெற, உருவ பொம்மை காணிக்கை செலுத்துவதும் இங்கு நடைபெறுகிறது.

குறிப்பாக, கிருஷ்ண ஜயந்தி நாளில் இங்கு வந்து ஸ்ரீகோபிநாதரைத் தரிசனம் செய்தால், கல்யாண வரம் கைகூடும்; பிள்ளை பாக்கியம் வாய்க்கப் பெறுவர்; இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்கின்றனர் பக்தர்கள்.

கிருஷ்ண ஜயந்தி, மூன்று நாள் விழாவாக நடைபெறும். அப்போது, மலையடிவாரத்தில் உள்ள கன்னிவாடி முதலான மூன்று ஊர்களுக்கும் திருவீதியுலா வரும் ஸ்ரீகோபிநாத ஸ்வாமியைத் தரிசித்தபடியே இருக்கலாம்.

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism