Election bannerElection banner
Published:Updated:

சந்தான வரம் தரும் ஆலிலைக் கிருஷ்ணர்!

கிருஷ்ண... கிருஷ்ணா!நாகை முகுந்தன்

நூத்தெட்டு வைணவ திவ்விய தேசங்களில் ஒன்று, சோழ வள நாட்டின் 19-வது திவ்விய தேசம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் என்றெல்லாம் போற்றப்படும் திருத்தலம்- நாகப்பட்டினம் ஸ்ரீசௌந்தர்யராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயிலின் அபிமான ஸ்தலமாகத் திகழ்வது ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோயில்.  

இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீகிருஷ்ணபிரான் வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நடனமாடும் திருக்கோலத்தில், நவநீத நடனனாகக் காட்சி தருகிறார். அருகில், ஸ்ரீருக்மிணியும் ஸ்ரீசத்யபாமாவும் சேர்ந்து அருள்பாலிக்கும் அருமையான திருத்தலம் இது.

அந்தக் காலத்தில், டச்சுக்காரர்களின் அமைச்சராகவும் பிரதிநிதியாகவும் இருந்த சக்குனு நாயக்கர் என்பவர்தான் நாகப்பட்டினத்தில் இந்தக் கிருஷ்ணன் கோயில் அமைவதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தவராம். தவிர, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோயிலின் வழிபாடுகள் தடையின்றி நடைபெறுவதற்காக, நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை இவர் தானமாக அளித்துள்ளார்.

சந்தான வரம் தரும் ஆலிலைக் கிருஷ்ணர்!

''இங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீநவநீத கிருஷ்ணன், பேசும் தெய்வம். பக்தர்களின் கனவில் தோன்றி, தனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்வார்'' என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீகிருஷ்ண பகவானே கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பெங்களூரு அன்பர் ஒருவர் வருடந்தோறும் பவித்ரோத்ஸவத்தை இங்கு நடத்தி வருகிறாராம்.  

இங்கே, ஸ்ரீநவநீத கிருஷ்ணருடன் ஸ்ரீஆலிலைக் கிருஷ்ணனும் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கலங்கிக் கண்ணீர் விடுபவர்களின் கண்ணீரைத் துடைத்து, சந்தானச் செல்வத்தை வழங்கும் வள்ளலெனத் திகழ்கிறார் ஆலிலைக் கிருஷ்ணர். ஸ்ரீநவநீத கிருஷ்ணரையும் ஸ்ரீஆலிலைக் கிருஷ்ணரையும் தரிசித்து வணங்கினால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்!

''குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி, குளித்து ஈரத் துணியுடன் கோயிலுக்கு வரவேண்டும். அவர்கள் தங்கள் கைகளில் ஆலிலைக் கிருஷ்ணரை ஏந்திக் கொள்ளவேண்டும். மடியில் அமர்த்தி, ஸ்ரீஆலிலைக் கிருஷ்ணரை குழந்தையாக பாவித்துத் தாலாட்ட வேண்டும். அப்போது அவர்களுக்காக பால முகுந்தாஷ்டகம் சொல்லிப் பிரார்த்திப்பார் கோயிலின் பட்டாச்சார்யர். பால முகுந்தாஷ்டகத்தின் எட்டு ஸ்லோகங்களையும் சொல்லி வேண்டுதல் செய்ய, அடுத்த வருடத்துக்குள் கண்டிப்பாகக் குழந்தை பிறக்கும்'' என்று உறுதியுடன்  சொல்கிறார்கள் பக்தர்கள்.

சந்தான வரம் தரும் ஆலிலைக் கிருஷ்ணர்!

லண்டனில் உள்ள ஸ்ரீமகாலக்ஷ்மி கோயிலில், கடந்த 2001-ஆம் வருடத்தில் ஓர் உபன்யாசத்தின்போது, நாகை ஸ்ரீஆலிலைக் கிருஷ்ணரின் மகோன்னதம் பற்றிச் சொன்னேன். அதையடுத்து, அங்கே பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் ரங்காச்சாரி என்பவர் நாகப்பட்டினத்துக்கு வந்து, ஸ்ரீநவநீத கிருஷ்ணரையும் ஆலிலைக் கிருஷ்ணரையும் வணங்கிச் சென்றார். பிறகென்ன... அடுத்த வருடமே அந்தத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அதையடுத்து, அவர் ஆலிலைக் கிருஷ்ணருக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி, தன் நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.  

சந்தான வரம் தரும் ஆலிலைக் கிருஷ்ணர்!

ஸ்ரீகண்ணபிரான், வெண்ணெயை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, அந்தப் பானையை உடைத்துவிடுவான். வெண்ணெய் வைத்துப் பழக்கிய பானையை உடைத்து விடுகிறானே என்று யசோதை வருந்துவாளாம். அதில் ஒரு தத்துவமே அடங்கியிருக்கிறது. அதாவது, வெண்ணெய் என்பது ஆத்மா; பானை என்பது சரீரம். ஆத்மாவை கண்ணபிரானே எடுத்துக்கொள்கிறான். ஆத்மா இறைவனுடன் கலந்துவிடுவதால், பானையாகிய சரீரத்தை மரிக்கச் செய்துவிடுகிறான். அதனால்தான் ஆத்மா எனும் வெண்ணையை விரும்புபவனாக கையில் வெண்ணெயை ஏந்தியபடி காட்சி தருகிறான் கிருஷ்ணன். நாகைக்கு வந்தால் ஸ்ரீநவநீதனைத் தரிசியுங்கள்; எல்லா நலன்களையும் தந்தருள்வான்.

படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்

ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம்

வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
   தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
அதஸீ புஷ்பஸங்காசம் ஹாரநூபுர சோபிதம்
   ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
    விலஸத் குண்டலதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
    பர்ஹி பிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீ மூத ஸந்நிபம்
    யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
ருக்மிணீ கேலிசம்யுக்தம் பீதாம்பர ஸ¨சோபிதம்
    அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்!
    ஸ்ரீநிகேதம் மஹேஸ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வந்மாலா விராஜிதம்
   சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
   கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி

பால முகுந்தாஷ்டகம்

கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தே வினிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே
சயான மாத்யந்த விஹீனரூபம்
ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

இந்தீவர ச்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்சித பாதபத்மம்
ஸந்தான கல்பத்ருமமாச்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம்
ச்ருங்கார லீலாங்கித தந்தபங்க்திம்
பிம்பாதரம் சாருவிசால நேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

சந்தான வரம் தரும் ஆலிலைக் கிருஷ்ணர்!

சிக்யே நிதாயாத்ய பயோததீநி
பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம்
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

களிந்தஜாந்தஸ்தித காளியஸ்ய
பணாக்ரரங்கே நடனப்ரியந்தம்
தத்புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

உலூகலே பத்தமுதார சௌர்யம்
உத்துங்கயுக்மார்ஜுன பங்கலீலம்
உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஆலோக்ய மாதுர் முக மாதரேண
ஸதன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம்
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு