தஞ்சாவூர்- திருச்சி சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கே உள்ள ஸ்ரீஏகௌரி அம்மன் ஆலயம், தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு வெகு பிரசித்தம்!

அம்மனுக்குப் புடவை சார்த்தி, திருப்பாதத்தில் குண்டு (குளியல் மஞ்சள்) மஞ்சளை வைத்து, தினமும் குளிக்கும் போது பூசிக்கொள்ள, திருமண பாக்கியம் தருவாள். அதேபோல், எலுமிச்சை பழத்தை, திருப்பாதத்தில் வைத்து அதன் சாற்றை அருந்தினால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும். தவிர, தீராத நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்ட கணவனுக்காக இங்கு வந்து அம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால், தாலி பாக்கியம் நிலைக்கும்; கணவர் குணம் அடைவார். அதையடுத்து இங்கு வந்து எருமைக்கன்று நேர்த்திக் கடனாகச் செலுத்துவதும் இந்தக் கோயிலின் சிறப்பு.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமியில், அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனை களும் விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொண்டு ஏகௌரியம்மனை வணங்கினால், சகல சங்கடங்களும் தீரும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். வழக்கில் நீதி கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

எட்டுக் கரங்களில் சூலம், கத்தி, நாகத்துடன் கூடிய உடுக்கை, கிளி, நாகம், கேடயம், மணி மற்றும் கபாலம் ஏந்தியபடி, வலது காலை மடித்து, இடது காலை கீழே தொங்கவிட்டு, அந்தக் காலுக்குக் கீழே அசுரனை மிதித்தபடி பத்ம பீடத்தில் காட்சி தருகிற ஸ்ரீஏகௌரியம்மனுக்கு தலைக்கு மேலே இன்னொரு தலையும் உண்டு. ஒரு முகத்தில் சாந்தம், கருணை; மற்றொரு முகத்தில் உக்கிரம் என தரிசனம் தரும் இவளுக்கு வல்லத்து மாகாளி என்று திருநாமம் உண்டு என்கிறார்கள். அதுமட்டுமா? கல்லணையைக் கட்டி வைத்துச் சிறப்பித்த கரிகால சோழன், இங்கு வந்து அம்மனை வழிபட்ட பிறகே போருக்குச் செல்வான்; வெல்வான் என்று பெருமை பெற்ற தலம் இது. கரிகாலன் வழிபட்டதால், கரிகாற் சோழ மாகாளி என்றும் இவளை அழைக்கின்றனர் பக்தர்கள்.

இத்தனைச் சிறப்புகள் கொண்ட கோயிலில், வருகிற 16.9.13 அன்று காலை 9 முதல் 10.30 மணிக்குள் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது கும்பாபிஷேகப் பெருவிழா. இந்த விழாவில் கலந்து கொண்டால், நம் இல்லத்தைச் செழிக்கச் செய்வாள் தேவி!

- வி.ராம்ஜி