Published:Updated:

ஸ்ரீவிஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம்!

ஸ்ரீவிஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம்!

ஸ்ரீவிஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம்!

ஸ்ரீவிஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம்!

Published:Updated:

'உலக மக்கள் தங்கள் பாவங்களை எல்லாம் போக்க என்னிடம் வருகிறார்கள். அவர் களின் பாவக் கறைகளை நான் வாங்கிக் கொண்டதன் விளைவு... நான் மாசாகி விட்டேன்’ என்று வருத்தத்துடன் சொன்ன கங்காதேவிக்கு, கண்வ மகரிஷி ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி, கங்காதேவியை துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில், காவிரியில் நீராடச் செய்தார். அதனால் கங்கை பொலிவுற்று, காசியம்பதிக்குத் திரும்பினாள் என்கிறது மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் ஸ்தல புராணம்.  

''அத்தனைப் பெருமைக்கும் புண்ணியத்துக்கும் உரிய கண்வ மகரிஷி, காவிரிக்கரையின் வடக்குப் பகுதியில், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதேபோல், சப்தரிஷிகளையும் ஒவ்வொரு இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபடச் சொன்னார். அப்படி சப்தரிஷிகள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆலயங்கள் மயிலாடுதுறைக்குள்ளேயே அமைந்துள்ளன'' என்று கடந்த 5.2.13 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கண்வ மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆலயம், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் வள்ளலார் அகரம் எனும் பகுதியில் அமைந்துள்ளது என்றும், அங்கே ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாதர் அருள்பாலிக்கிறார் என்றும், அந்த ஆலயம் சிதிலம் அடைந்து, வழிபட வசதிகளின்றி, கும்பாபிஷேகம் காணாமல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தோம். 'பாவம் தீர்க்கும் ஈசன் ஆலயம், பரிதாப நிலை மாறட்டும்’ என்று தலைப்பிட்டு எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ஏராளமான வாசகர்கள் அந்தக் கோயிலுக்கு நிதியுதவி அளித்தார்கள்.

ஸ்ரீவிஸ்வநாதருக்கு கும்பாபிஷேகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சக்திவிகடனில் செய்தி வெளியானதை அடுத்து, அன்பர்களின் பேருதவியால் திருப்பணிகள் துவங்கின. இதோ... வருகிற 16-ஆம் தேதி, காலை 5.30 முதல் 6.15 மணிக்குள் ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது'' என்று தெரிவித்தார், கோயிலின் பரம்பரை டிரஸ்டி பாலசுப்ரமணியன் சிவாச்சார்யர்.

'வள்ளலார் அகரம் ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை எனும் நம்பிக்கையுடன் அவனை வணங்கி, அவன் தாள் பணிந்தோம்’ என்று கட்டுரையின் நிறைவில் நாம் குறிப்பிட்டிருந்தது, இதோ... இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது.  பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடச் செய்து, முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்க பேரருள் புரியும் இந்தத் தலத்துக்கு, கும்பாபிஷேக நாளில் வாருங்கள்; ஸ்ரீவிஸ்வநாதரை தரிசியுங்கள். அருளும் பொருளும் பெற்று இனிதே வாழ்வீர்கள்!

- வி.ராம்ஜி

படங்கள்: க.சதீஷ்குமார்