Published:Updated:

இந்த ஜென்மம் ஈடேறியது!

இந்த ஜென்மம் ஈடேறியது!

##~##

கஸ்ட்- 11, மறக்க முடியாத மிக அற்புதமான நாள். சக்தி விகடனும் அன்னபூரணி யாத்ரா சர்வீஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய திருக்கயிலாய புண்ணிய யாத்திரை கட்டுரைப் போட்டியில் வென்று, அதன் பலனாக நான் திருக்கயிலைக்குப் புறப்பட்ட தினம் அன்றுதான்.

சுமார் 10 மணி நேரம் விமான பயணம். நேபாள் தலைநகர் காட்மாண்டு திருபுவன் விமான நிலையத்தில் இறங்கும்போதே கன மழை எங்களை வரவேற்றது. அத்துடன், ஸ்ரீஅன்ன பூரணி யாத்ரா சர்வீஸ் நிறுவனத்தாரின் அன்பான வரவேற்பும் நெகிழவைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல்நாள், காட்மாண்டுவில் ஸ்ரீபசுபதிநாத் ஆலய தரிசனம். இங்கே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,390 அடி உயரத்தில் ஓடும் பாக்பதி நதி கங்கைக்கு இணையானது. இந்தத் தலத்துக்கு அருகிலுள்ள குக்கேஸ்வரி சக்தி பீடமும் பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய ஒன்று.

எங்களது அடுத்தகட்ட பயணம் உற்சாகத்்துடன் தொடங்கியது. நியாலம் எனும் இடத்தை அடைந்தோம். இங்கே 60 சதவிகிதம்தான் ஆக்ஸிஜன். இதற்கே பயணக்குழுவில் 2 பேர் பின்தங்கினர். நானும் என் அம்மாவும் 'எத்தனை இடர்கள் வந்தாலும் கிரிவலத்தைத் தொடர்வோம். கயிலையான் நம்முடன்  இருப் பார்’ என்று சங்கல்பித்துக் கொண்டோம்.

டோங்பா நகரை நாங்கள் அடைந்தபோது, பலருக்கும் மூச்சிரைத்தது; குளிர்நடுக்கம் வேறு! அதனால் சிலர், கிரிவலம் செய்வதை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். நாங்கள் சங்கல்பத்தில் உறுதியாக இருந்தோம். சரியாக 7 நாட்கள் கழித்து, மானசரோவர் தடாகத்தை அடைந்தோம். சக்திதேவியின் அம்சமாக, மலைக்கு மேல் சமுத்திரம் போன்று பரந்து விரிந்துகிடந்த அந்த ஏரியின் அழகும் பிரமாண்டமும் இறையின் நித்தியத்துவத்தை உணர்த்தியது. அதன் குளிர்நீரில் நீராடியதும், அதன் கரையில் நடந்த பூஜை- ஹோமங்களில் பங்கேற்றதும் சிலிர்ப்பான அனுபவம்.

இந்த ஜென்மம் ஈடேறியது!

மானசரோவரில்தான் விவரிக்க முடியாத காட்சிகள் வானில் தெரியுமாம். நாங்கள் சென்றிருந்தபோதும், திடீரென... 'நமசிவாய... நமசிவாய...’ என்று பஞ்சாட்சர கோஷம்!  வானில் சூலம் தோன்றி மறைந்ததாக பக்தர்களிடையே பரவசம். நாங்களும் அங்கே இயற்கை நிகழ்த்திய மாயாஜாலங்களைத் தரிசித்தோம். ஆமாம்!  சட்டென்று நட்சத்திர வடிவங்கள் மெள்ள தடாகத்தில் இறங்குவதைக் கண்டு சிலிர்த்துப்போனோம். தெய்வீகம் சூழ்ந்த அந்த இடத்தில்... பக்தர்களுக்கு எதைக் கண்டாலும் சிவம்தான்!

திருக்கயிலை தரிசனம் இன்னும் அற்புதம். கடல் மட்டத்திலிருந்து 22,980 அடி உயரத்தில் உள்ளது திருக்கயிலை. ஆக்ஸிஜன் 20 சதவிகிதமே உள்ள இங்கே நா வறண்டு, உதடுகள் காய்ந்து, கண்கள் செருகி, மூக்கு புடைத்து, சில இடங்களில் தவழ்ந்து சென்று கிரிவலம் வந்தோம்; கயிலையானைக் கண்ணாரக் கண்டோம். இல்லையில்லை... அந்தப் பனிமுடி பரமனுடன் இரண்டறக் கலந்தோம் என்றே சொல்ல வேண்டும். அந்தப் பரவசமும் சிலிர்ப்பும் இன்றும் எங்களுக்குள்!

- க்ருதாஜ் அஷோக்

படங்கள்: இ.ராஜவிபீஷிகா