Published:Updated:

ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்ட கும்பாபிஷேக விழா!

விகடன் விமர்சனக்குழு
ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்ட கும்பாபிஷேக விழா!
ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்ட கும்பாபிஷேக விழா!

புதுக்கோட்டை: கொத்தமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் கிராமத்திலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா தை 18ஆம் நாளான நேற்று நடைபெற்றது. இந்த கோவிலில் ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீவாழவந்த பிள்ளையார், ஸ்ரீகருப்பர் சாமி, ஸ்ரீஅம்பலத்த சாமி, ஸ்ரீமுருகன், ஸ்ரீபிடாரியம்மன் உள்ளிட்ட பலர் அருள்பாலிக்கின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்ட கும்பாபிஷேக விழா!

கும்பாபிஷேகத்தையொட்டி, ராஜகோபுரத்திற்கு காலை 10 மணி முதல் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்த வண்ணம் இருந்தன. சுமார் 11 மணியளவில் ராஜகோபுரத்தை சுற்றி பருந்து பறந்து வந்து வட்டம் அடித்தது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் தீர்த்தம்

சுமார் இருபதாயித்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின் கோவிலின் ராஜகோபுரத்திற்கும் ஹெலிகாப்டரிலிருந்து பூக்கள் தூவப்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் கோவிலை சுற்றி பறந்த ஹெலிகாப்டர் பூக்களை தூவிய பின்பு மீண்டும் பறந்து சென்றது.

ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்ட கும்பாபிஷேக விழா!

அதன்பின் கீழே நின்ற பொதுமக்களுக்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தெளிப்பான்கள் (sprinklers) தீர்த்த நீரை தூவி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. தீர்த்தம் தெளிக்கப்பட்ட பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானமும் இரண்டு இடங்களில் வழங்கப்பட்டதால் அங்கும் முடிந்த வரை கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் கொத்தமங்கலம், சிதம்பர விடுதி, ஆலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

கோ.க.தினேஷ்

(மாணவப் பத்திரிகையாளர்)