கர வருட ராசிபலன்கள்
தொடர்கள்
Published:Updated:

அருப்புக்கோட்டையில் திருவிளக்கு பூஜை

மாமியாரின் உருக்கமான பிரார்த்தனை!

அருப்புக்கோட்டையில் திருவிளக்கு பூஜை
##~##
ருப்புக்கோட்டை மாநகரில், கேட்டதையெல்லாம் அள்ளித் தரும் ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் ஆலயத் தில், கடந்த 1.3.11 அன்று சக்தி விகடனின் 55-வது திருவிளக்கு பூஜை இனிதே நடந்தது. ஏராளமான வாசகியர் கலந்துகொண்டனர்.

''அப்பாவுக்குக் குடிப்பழக்கம்; அம்மாதான் குடும்பத்தைக் காப்பாத்தறாங்க. போன வருஷம் டென்த்ல அதிக மார்க் எடுத்தும், தொடர்ந்து படிக்க வசதியில்லை. எங்க குறை அத்தனையும் காணாமப் போகணும்; எங்க குடும்பத்துல இனி எப்பவும் சந்தோஷம் குடிகொண்டிருக்கணும்!'' என்று கண்ணீருடன் தெரிவித்தார் சித்ரா.

''குடும்பம் நல்லா இருக்கணுங்கறதுக்காக, கடல் தாண்டி, சிங்கப்பூர்ல வேலை பாக்கறாங்க என் இரண்டு பசங்களும். அவங்க ஒரு குறையுமில்லாம இருக்கணும். இதுதான் என்னோட பிரார்த்தனை!'' என்று சொல்லி நெகிழ்கிறார் விருதுநகர் வாசகி சுமதி.

''இந்தக் கோயில்ல விளக்கேத்தி வழிபட்டா எல்லாப் பிரச்னையும் தீரும்னு சொன்னாங்க. என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கலை. எங்க மாப்பிள்ளைக்கு அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வந்து, படுத்தி எடுக்குது. பையனுக்கு நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கணும்; மாப்பிள்ளை நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்; மூத்த பொண்ணுகிட்ட பழைய சிரிப்பைப் பாக்கணும்னு வேண்டிக்கிட்டு, விளக்கேத்தியிருக்கேன். இந்த வாய்ப்பைத் தந்த சக்தி விகடனுக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன்'' என்று கண்கலங்கிய தூத்துக்குடி வாசகி பாக்கியலட்சுமியை, அருகில் உள்ள வாசகியர் தேற்றினர்.

அருப்புக்கோட்டையில் திருவிளக்கு பூஜை

''எங்களுக்குக் குழந்தை பாக்கியம் கொடுத்த தலம் இது. அமுதலிங்கேஸ்பரருக்கு நன்றி சொல்றதுக்காகத்தான் விளக்கு பூஜையில கலந்துக்கிட்டேன்'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார், வாசகி சுந்தரி. ''என் மகள் பிளஸ் டூ எக்ஸாம்ல நல்லா மார்க் எடுத்து, பாஸ் பண்ணணும்'' என்று அருப்புக்கோட்டை வாசகி முத்துச்செல்வி தெரிவித்தார்.

''குடும்பத்துல நிம்மதி துளியும் இல்லாம தவிச்சுக் கிடந்தப்பதான், இந்தக் கோயிலுக்கு வந்து, சாமி கும்பிட்டோம். அடுத்தடுத்த நாட்கள்ல, பிரச்னைகளெல்லாம் மறைஞ்சுது. அற்புதமான இந்தக் கோயில்ல, விளக்கு பூஜை நடத்தின சக்தி விகடனுக்கு அருப்புக்கோட்டையே கடமைப் பட்டிருக்கு'' என நெகிழ்ந்தார் வாசகி மீனாட்சி.

அமுதலிங்கேஸ்பரரின் பேரருளை வியந்தபடி, விடைபெற்றோம் வாசகியரிடமிருந்து.

   - பூ.ஜெயராமன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்