Published:Updated:

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!

Published:Updated:
கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!
##~##
'த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ங்கள் மனத்தை என்னிடம் நிலை நிறுத்தி, மிகுந்த சிரத்தையுடன் என்னை வழிபட்டு, எப்போதும் என்னுடன் சேர்ந்திருக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் திகழ்பவர்களை மிகச் சிறந்த பக்தர்களாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கீதையில் சொல்கிறான் கண்ணன்.

ஆமாம்... ஆத்மார்த்தமான அன்புடன் வழிபடுவோருக்கு இறையருள் துணை நிற்கும். இதோ... விக்ருதி வருடம் நிறைவடைந்து, 'கர’ வருடம் பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு, நம் வாழ்வில் ஒளியேற்ற வேண்டாமா?

நமது இன்னல்கள் யாவும் நீங்கி, வளமுடன் வாழ வரம் தரும் வல்லமை மிக்க தெய்வத் துதிகள் பல உண்டு. அவற்றில் சில இங்கே! தினமும் இந்தத் துதிப்பாடல்களை மனமுருகப் பாடி, உளமார வழிபடுங்கள். 'கர’ வருடம் முதல், உங்கள் வாழ்வே வரமாகும்!

பிணிகள் தீர்க்கும் திருநீற்றுப் பதிகம்

மந்திர மாவது நீறு வானவர் மேலதுநீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருவால வாயான் திருநீறே!

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!

கூன்பாண்டியன் எனும் மன்னனின் வெப்பு நோய் தீர, மன்னனுக்கு திருநீறு பூசி சிவனாரைப் பிரார்த்தித்து, திருஞான சம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தின் பாடல் இது. அவர் பாடி முடித்ததும், மன்னனின் நோய் குணமானது. தினமும் நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு, இந்தப் பாடலை மனமுருகிப் பாடி சிவனாரை வழிபட, பிணிகள் நீங்கும்.

மகிழ்ச்சியான வாழ்வு தரும் திருப்பாவை

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் 
  ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைந்த 
  கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை 
  அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி 
  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் மகனாக வளர்ந்தவனே! உன்னைக் கெடுக்க நினைத்த கம்சனின் வயிற்றில் நெருப்பென நின்ற பெருமானே! உன்னிடம் யாசிக்கிறோம்... நாங்கள் கேட்கும் பரிசினைத் தந்துவிட்டால், உன் துணைவி ஸ்ரீதேவிக்கு ஒப்பாக உள்ள உன் அருட்செல்வம் பற்றிப் பாடுகிறோம்; உன் தீரம் போற்றுகிறோம்; வருத்தம் தீர்ந்து மனம் மகிழ்ந்து ஆடுகிறோம் என்று பிரார்த்திக்கும் ஸ்ரீஆண்டாளின் திருப்பாவைப் பாடல் இது.

திருப்பாவையின் ஒவ்வொரு பாடலும் சிறப்பானதே! மார்கழியில் மட்டுமின்றி, தினமுமே ஒரு திருப்பாவை பாடி, பெருமாளை வழிபட, அவனருள் கிடைக்கும். பிறகென்ன... ஆண்டாள் சொல்வதுபோல, கவலைகள் மறந்து களிப்புறலாம்!

மனச் சஞ்சலம் தீர்க்கும் திருப்புகழ்

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்றுஎன்று உற்று உனைநாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்தில் அம்கண்டிக் கதிர்வேலா
தென் பரங்குன்றிற் பெருமாளே

செவ்வாய்க் கிழமைகளில் ஆறுமுகக் கடவுளுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து, மலர்கள் சமர்ப்பித்து, அருணகிரிநாதரின் இந்தத் திருப்புகழ் பாடலைப் பாடி, மனதாரப் பிரார்த்தித்து வழிபட, மனச் சஞ்சலங்கள் நீங்கும்.

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!


ஸ்ரீஆஞ்சநேய ஸ்தோத்திரம்

ஸ்ரீராமதூத மஹாதீர
ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப சம்பூதம்
வாயுபுத்ர நமோஸ்துதே!!

ஜாதகத்தில் சனிக் கிரகத்தால் பாதிப்பு எனில், வாயுமைந்தனாம் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. அனுமன் பக்தர்களுக்கு சனிபகவானால் தொந்தரவுகள் இல்லையாம். ஆகவே, சனிக் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதுடன், இந்தப் பாடலையும் பாடி தியானியுங்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்ம சனி போன்ற பாதிப்புகளும் நீங்கி நலம்பெறலாம்.

வாழ்வில் வளம் சேர்க்கும் திருவீழிமிழலை பதிகம்

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே!
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே!

தேசத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய ஒரு சூழலில், அடியார்தம் பசிப்பிணி அகற்றவும், கோயில் திருப்பணிக்காகவும் பொருள் தேவையாக இருந்தது. இதற்காக திருவீழிமிழலை இறைவனைப் பிரார்த்தித்து, திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பதிகம் பாடி வழிபட்டார்களாம். ஈசனும் அவர்களுக்கு தினமும் படிக்காசு வழங்கி அருள்புரிந்தார். நாமும் திருவீழிமிழலை பதிகத்தை பாராயணம் செய்து வழிபட, வறுமைகள் நீங்கும்; இல்லத்தில் சுபிட்சம் கூடும்.

மகாலட்சுமி ஸ்தோத்திரம்

கர வருடத்தில் வாழ்வே வரமாகட்டும்!

கல்யாணாநாம் அவிகல நிதி: காஅபி காருண்ய ஸீமா
நித்யாமோதா நிகம வசஸாம் மௌலி மந்தார மாலா
ஸம்பத் திவ்யா மது விஜயிந: ஸந்திதத்தாம் ஸதா மே
ஸைஷா தேவீ ஸகல புவந ப்ரார்த்தநா காமதேனு:

பொருள்: கல்யாண குணங்களுக்கெல்லாம் குறைவற்ற கொள்கலனாகவும், ஓர் காருண்ய நிதியாகவும், திவ்ய மணம் கமழ்பவளாகவும், வேதங்களின் சிரஸில் மந்தார மாலையாகவும், எம்பெருமானின் திருவாகவும், உலக உயிர்கள் பிரார்த்தித்து வணங்கும் காமதேனுவாகவும் உள்ள பிராட்டியார் எம்மிடம் எப்போதும் தங்கியிருக்க வேண்டும்.

ஸ்ரீஸ்வாமிதேசிகன் அருளிய இந்த ஸ்லோகத்தை அனு தினமும் பாராயணம் செய்து வழிபட, சகல சுபிட்சங்களும் கிடைக்கும். நம் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாகக் குடிபுகுவாள்; வறுமைகள் தொலைந்து வளம் பெருகும்.

தொகுப்பு: எம்.சக்திவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism