Published:Updated:

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

Published:Updated:
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

ந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து க்ஷேமங்களும் கிடைப்பதற்கு, பகவான் நாராயணனை மனதாரப் பிரார்த்திக்கிறேன். சகல புண்ணியங்களையும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகப் பெரிய வேள்வி நடத்த வேண்டுமா? கங்கை, காவிரி முதலான புனித நதிகளில் நீராடவேண்டுமா? நித்யானுஷ்டானங்களைச் சரிவரச் செய்து, எங்கேனும் மலையுச்சியிலோ அடர்ந்த வனத்திலோ கடும் தவம் இருக்கவேண்டுமா? தினமும் ஒரு மணி நேரம் அல்லது வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் அனுஷ்டித்தால் சகல புண்ணியங்களும் கிடைத்துவிடுமா? வேறு என்னதான் செய்யவேண்டும்?

மிகவும் எளிதான காரியம்தான்.

சகல புண்ணியங்களும் பெறவேண்டும் என்றால், பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

மகாபாரதம், மிகப் பிரமாண்டமானது. அதில் உள்ள எண்ணற்ற அத்தியாயங்களில், சகஸ்ரநாம அத்தியாயம் என்பதும் ஒன்று. பகவானின் நாமங்களைச் சொல்வதால் விளையும் நன்மைகளைச் சொல்கிற அத்தியாயம். அத்தனைப் பிரம்மாண்ட மகாபாரதத்தில், அத்தியாயம் என்பது ரொம்ப ரொம்பச் சின்னதுதான்!

ஆனால் என்ன... ஒரு சின்ன விதையில் இருந்துதானே மிகப் பெரிய ஆலமரம் உருவாகிறது?! ஒரு சின்ன கருத்தில் இருந்துதானே, பலப்பல அர்த்தங்கள் உண்டாகின்றன. இறைவனின் திருநாமங் களுக்கு, அதுவும் ஸ்ரீகண்ணனின் திருநாமங் களுக்கு அத்தனை வலிமை உண்டு!

ஒரு குழந்தைக்கு என்ன தரவேண்டும் என இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நல்ல, சத்தான உணவில் இருந்துதான் நாம் கொடுக்கத் துவங்குகிறோம். 'சுவர் இருந்தால் தான் சித்திரம்’ என்பது போல், உடம்பு தெம்பாக இருந்தால்தானே ஓடியாடி விளையாட முடியும்!

அடுத்து, அந்தக் குழந்தைக்கு கல்வியைத் தருகிறோம்; இந்தப் பள்ளியில் சேர்க்க

வேண்டும்; இன்ன படிப்பைப் படிக்க வேண்டும்; பெரியவனானதும் இப்படிப் பட்ட பதவியில் அந்தக் குழந்தை அமர வேண்டும் என யோசித்து யோசித்து, அனைத்தையும் செய்கிறோம்.

ஆக, உடம்பைக் கவனித்துக் காப்பாற்

றுகிறோம்; கல்வியை வழங்குகிறோம்; குறிப்பாக, கை நிறைய சம்பளம் வாங்குவதற்கு உண்டான கல்வியை அளிக்கத் தயாராக இருக்கிறோம். இந்த இரண்டு விஷயங்களை மட்டும் செய்தால் போதுமா? மூன்றாவதாக ஒன்று இருப்பதையே நம்மில் பலர் கவனிக்கத் தவறுகிறோம்.

என்ன அது? ஆத்மா! அந்தக் குழந்தையின் ஆத்மா நல்லவிதமாக வளர்வதற்கு, நல்ல விஷயங் களைச் சிந்திப்பதற்கு, நல்ல காரியங்களில் ஈடுபடு வதற்கு நாம் ஏதாவது செய்கிறோமா? எதுவுமே செய்வதில்லையே?!

உடல் நன்றாக இருந்தால்தான் ஆத்மா ஒழுங்காக வேலை செய்யமுடியும் என்பது சரிதான். ஆனால், உடல் நன்றாக இருக்கிற அதேநேரத்தில் ஆத்மாவும் நன்றாக இருக்கவேண்டுமே! இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தானே ஓசை! ஆகவே, ஆத்மா வைக் கவனிப்பது மிகவும் அவசியம்.

சரி... கர்மயோகமும் ஞானயோகமும் கைகூட வேண்டும் என்றால், இன்றைக்கு விதையாக இருக்கிற குழந்தை, நாளைக்கு நிழல் தரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்க வேண்டுமெனில், வேதங்களையும் சாஸ்திரங்களையும், புராணங்களையும் இதிகாசங் களையும் சிறுவயதிலேயே சொல்லித் தரவேண்டும்; முக்கியமாக பகவத் விஷய ஞானம் என்பது சிறுவயதிலேயே ஏற்பட்டால்தான், பின்னாளில் அவர்களால் அவர்களுக்கும் இந்தச் சமூகத்துக்கும் நன்மைகள் விளையும்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

வேதங்கள் சகல உயிர்கள் மீதும் பிரியம் கொண் டவை. தராசின் தட்டுகளில், தாய்-தந்தையரையும் வேதங்களையும் வைத்தால்,  குழந்தைகள் மீது பெற்றோர் செலுத்துகிற அன்பைவிட ஒருசதவிகித மேனும் கூடுதலான அன்பையும் அக்கறையையும், வேதங்கள் காட்டுகின்றன என்பது சத்தியம்! அதாவது, வேதங்களைப் பயில்வது ஆத்மாவுக்கு நல்லது!

ஆனால், வேதங்களைக் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சம்ஸ்கிருதத்தை சரிவர உச்சரிக்கவேண்டும். அதன் அர்த்தங்களை ஆழப் புரிந்து கொள்ளவேண்டும். உச்சரிப்பில் கொஞ்சம் பிழை ஏற்பட்டாலும், அர்த்தங்களைப் புரிந்து கொள்ளமுடியாத நிலை வந்தாலும் குழந்தைகள் ஆடிப்போவார்கள்; அயர்ந்துவிடுவார்கள்!

அப்படியெனில் குழந்தைகளுக்கு, அவர்களின் ஆத்மாக்களின் நலனுக்கு, எதைப் பயிற்றுவிக்க வேண்டும்?! அப்படிப் பயிற்றுவிப்பது எளிமையான தாக இருக்க வேண்டுமே?!

ஆமாம். எளிமையானதும் இனிமையானதுமான ஒன்று இருக்கிறது; சக்தி வாய்ந்ததும் சத்து மிகுந்ததுமான அதை எவரும் புரிந்துகொள்ளலாம். அது, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம். அதாவது, பகவானின் திருநாமங்கள்!

உச்சரிக்க உச்சரிக்க, உள்ளம் பூரிக்கும்; அந்தப் பூரிப்பு, அகத்திலும் முகத்திலுமாக சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும்; இத்தனை சத்காரியங்களும் நிகழும்போது, ஆத்மாவானது எத்தனை குதூகலத்துடன் இருக்கும் என சற்றே நினைத்துப் பாருங்கள்!

'பிரம்ம சூத்திரம்’ படைத்தார் வேதவியாசர். வித்வான் களுக்கும் பண்டிதர்களுக்குமான விஷயமாக இதைப் படைத்திருக்கிறோமே, கொஞ்சம் எளிமையாக இருந்தால், சகல மனிதர்களும் புரிந்து, அறிந்து, உணர்ந்து, பலன் பெறுவார்களே... என வருந்தினாராம்! இந்த வருத்தத்திலும் ஏக்கத்திலும் பிறந்ததுதான், சகஸ்ரநாம அத்தியாயம்!

வாழ்க்கையில் சங்கடமும் சந்தோஷமும் மாறி மாறித்தான் வரும்! சங்கடத்தில் மட்டுமே சிக்கித் தவிப்பவர்களும் இல்லை; சந்தோஷத்தை மட்டுமே அனுபவிப்பவர்களும் கிடையாது! ஆனால் ஒன்று... சங்கடம் - சந்தோஷம் என எந்தச் சூழ்நிலையிலும், நம்மில் பலரும் இறைவனின் திவ்விய நாமங்களைச் சொல்லி வருகிறோம். 'கிருஷ்ணா... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுடாப்பா’ என்றோ, 'ராமா... நீதான்டாப்பா பாத்துக்கணும்’ என்றோ பலரும் சொல்கிறோம், அல்லவா?! அதுதான் திவ்விய நாமத்தின் மகிமை!

##~##
மகாபாரதத்தில்... யுதிஷ்டிரருக்கு ஒரு சந்தேகம். அந்தச் சந்தேகத்தை யாரால் தீர்த்து வைக்க முடியும்? நல்ல ஆச்சார்யர் ஒருவரால்தான் சந்தேகத்தைத் தீர்க்கமுடியும்.

ஒவ்வொருவருக்கும் ஆச்சார்யர் எனப்படும் குரு மிகவும் அவசியம்! அதேபோல், ஆச்சார்யர்களுக்கு சிஷ்யர்கள் தேவை. ஒரு ஆச்சார்யர் என்பவர், மடி கனத்துக் கிடக்கிற பசுவுக்குச் சமமானவராம்! அதாவது, மடி கனத்த நிலையில், பசுவானது, கன்று பால் குடித்ததா இல்லையா என்று பார்க்காமல், கனத்த மடியிலிருந்து பாலைப் பீய்ச்சி விடும்.

அதேபோல், ஆச்சார்யர் எந்த எதிர்பார்ப்புமின்றி, தனக்குத் தெரிந்தவை அனைத்தையும் தனது சிஷ்யர்களுக்கு போதித்து விடுவார்!

பீஷ்மர், அப்படிப்பட்ட ஆச்சார் யர்தான்! அவரிடம் யுதிஷ்டிரர் சென்று, 'என்னுடைய சந்தேகத்தை தாங்கள்தான் தீர்த்துவைக்க வேண்டும் குரு!’ என்றார். பீஷ்மரும் சந்தோஷத்துடன் பதில் சொல்லத் தயாரானார்.

''குருவே! பிறவியின் நோக்கம் நிறைவேற, அதாவது மோட்ச லாபம் கிடைப்பதற்கு ஏதேனும் வழி உண்டா?’' என்று கேட்டார் யுதிஷ்டிரர்.

மெள்ளப் புன்னகைத்த பீஷ்மர் சொன்னார்... ''நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடு; மோட்ச லாபம் நிச்சயம்!'' என்றார்.

இறைவனது திருநாமங் களுக்குத்தான் எத்தனை வலிமை, பாருங்கள்!

- இன்னும் கேட்போம்