சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

மதிப்புக்குரிய வாசகர்களே

மதிப்புக்குரிய வாசகர்களே

மதிப்புக்குரிய வாசகர்களே

ணக்கம்.

சக்தி விகடன் எட்டாம் ஆண்டை எட்டிப் பிடித்திருக்கும் இந்த இனிய தருணத்தில், எல்லையில்லாத ஆன்மிக சக்தியை எங்களோடு சேர்ந்து அள்ளிப் பருகும் உங்களுக்கு எங்களின் இதயங்கனிந்த நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'எட்டு’ என்ற சொல்லில் இலக்கை எட்டு, இன்னும் மேலே செல் என்பன போன்ற அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. எட்டு என்ற எண்ணும் சிறப்பு வாய்ந்தது.

சைவத் திருமுறைகள் 12. அவற்றில் எட்டாம் திருமுறைதான் திருவாசகம். புலன்களுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல் அது. வைஷ்ணவ சம்பிரதாயத்திலும் எட்டாம் எண்ணுக்கு முக்கிய இடம் உண்டு.

##~##
மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது என்கிறது விஞ்ஞானம். உங்களின் அன்புத் தாலாட்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, 'சக்தி’ பெற்றிருக்கும் பொலிவும் அத்தகையதே!

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஊறித் திளைத்த உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணனை அறியாதவர்கள் இருக்கமுடியாது. 'முதலில் வேளுக்குடி; பிறகு காபி குடி’ என்று சொல்லு மளவுக்குக் காலை நேரங்களைத் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகச் சிறப்பாக்கி வருகிறார் வேளுக்குடி கிருஷ்ணன். உலகில் அவர் பாதம் படாத ராமர் கோயில்கள் இல்லை; கிருஷ்ணன் கோயில்கள் இல்லை! 'ஸ்ரீமத் பாகவதம்’, மற்றும் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்’ போன்ற அவரது ஆன்மிகச் சொற்பொழிவுகள் அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளிலும் பிரபலமானவை.

சக்தி விகடன் வாசகர்களுக்காக, வேளுக்குடி கிருஷ்ணனின் கண்ணன் நாமம் சொல்லும் கதைகளை இந்த இதழிலிருந்து தொகுத்து வழங்குகிறோம். ஆன்மிக அன்பர்களுக்கு இது தலைவாழை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய கணினி யுகத்தில், சின்னஞ்சிறுவர்களிலிருந்து முதியவர்கள் வரை அத்தனை பேருக்குமே ஏராளமான பொறுப்புகள்... கடமைகள்! அதனால் இயல்பாக எழும்  ஒருவித மன அழுத்தம்! அந்த மன அழுத்தத்தைப் போக்கி, ஒரு சிறகைப் போல பாரமின்றி, மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுகிறது உலக சமுதாய சேவா சங்கம் நடத்தும் மனவளக் கலை மற்றும் உடற்பயிற்சி முகாம்.

சக்தி விகடன் வாசகர்களுக்கென்றே பிரத்யேகமாக, எந்தவிதக் கட்டணமும் இன்றி, முற்றிலும் இலவசமாக இந்த மனவளக் கலை முகாம்களை நடத்தித் தர இசைந்திருக்கிறது உலக சமுதாய சேவா சங்கம். அதற்கான விவரங்கள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. உங்கள் பெயரையும் பதிவு செய்துகொண்டு, பலன் பெறுங்கள்!

மதிப்புக்குரிய வாசகர்களே

இன்னும் பல புதிய அம்சங்களும் இந்த இதழில் தொடங்கியுள்ளன. படியுங்கள்; ரசியுங்கள். உங்கள் மேலான கருத்துக்களை உடனுக்குடன் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களின் வழிகாட்டுதலோடு இன்னும் பல சிகரங் களை சக்தி விகடன் எட்டப்போவது திண்ணம்!

- ஆசிரியர்