சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

'ஓம் நமசிவாய!' இப்படியும் ஓர் ஆன்மிகச் சேவை!

சிவநாமம் எழுதுவோம்...

 
'ஓம் நமசிவாய!' இப்படியும் ஓர் ஆன்மிகச் சேவை!
.........
'ஓம் நமசிவாய!' இப்படியும் ஓர் ஆன்மிகச் சேவை!
##~##
'ஓ
ம் நமசிவாய!’ - இந்த ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொன்னாலும் எழுதினாலும், இம்மை மற்றும் மறுமையில் நமக்குப் புண்ணியம் வந்துசேரும் என்பார்கள். பிரதோஷ காலங்களில், ஆலயங்களில் அமர்ந்து 'ஓம் நமசிவாய’ மந்திரம் எழுதுவதற்காகப் பக்தர்களுக்கு தனிக் காகிதங்களை விநியோகித்து, எழுதிய பிறகு அவற்றைச் சேகரிக்கிற சிவனடியார்கள் பலர் உண்டு. அவர்களில் சிவா ஐயப்பனும் ஒருவர்!

'ஓம் நமசிவாய உலக மக்கள் நலன் பிரார்த்தனை’ எனும் அமைப்பினர், இதுவரை 400 கோயில்களில், பிரதோஷ வேளையில் பக்தர்களுக்குத் தாள்களைத் தந்து, சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமாக 'ஓம் நமசிவாய’ மந்திரங்களை எழுதி வாங்கி, அவற்றை சென்னையைச் சுற்றியுள்ள ஏழு கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்

''உண்மையைச் சொல்லணும்னா, ஆரம்பத்துல எனக்குக் கடவுள் நம்பிக்கை பெரிய அளவுக்கெல்லாம் இல்லை. வாழ்க்கைல நம்ம வேலை உண்டு, குடும்பம் உண்டுன்னு இருந்துட்டா போதும்னு வாழ்ந்திட்டிருந்தவன் நான். செய்யாத தொழில் இல்லை; பண்ணாத வியாபாரம் இல்லை. ஆனா, அடுத்தடுத்து நான் பார்த்ததெல்லாம் தோல்விகளும் நஷ்டங்களும்தான்! சந்தோஷமோ துக்கமோ... எதுவா இருந்தாலும், ஆறுதல் தர்ற இடம், கடற்கரைதானே?! வெறுமையும் விரக்தியுமா, மணல்ல உக்கார்ந்து கடலையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தேன். அப்ப, அங்கே ஒரு ஆன்மிக நிகழ்ச்சி நடந்துச்சு; போனேன். 'அடடா... பூ வாங்கித் தரலாமே’னு யோசனை. ஆனா, பூக்காரங்களையே காணோம். என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, என் பக்கத்துல வந்த பெரியவர் ஒருத்தர், 'கவலைப்படாதே தம்பி, கொஞ்சம் ஈடுபாட்டோட தேடினா, கண்டிப்பா பூ கிடைக்கும்!’னார். அதிர்ந்து போயிட்

டேன். அப்புறம் பூவும் கிடைச்சுது; என் வாழ்க்கைல மணம் வீசவும் ஆரம்பிச்சுது!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் சிவா ஐயப்பன்.

'ஓம் நமசிவாய!' இப்படியும் ஓர் ஆன்மிகச் சேவை!

''ஒருகாலத்துல கடவுளைப் பெருசா நம்பாதவன், அப்புறம், கடவுளைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். தியானப் பயிற்சிகள்ல ஈடுபட்டேன். 'ஓம் நமசிவாய’ என்று அச்சிடப்பட்ட தாள்களை எடுத்துக்கிட்டு, ஊர்ஊரா, கோயில் கோயிலாப் போனோம். பக்தர்கள் தங்களோட பிரார்த்தனை களையும், 108 முறை நமசிவாய மந்திரத்தையும் எழுதிக் கொடுத்தாங்க. அதை அப்படியே எடுத்துக்கிட்டு வந்து அவங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். பிறகு, மெள்ள மெள்ள ஓர் அமைப்பு உருவாகி, நிறைய சிவனடியார்கள் அதில் உறுப்பினர்கள் ஆனாங்க!'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் சிவா ஐயப்பன். தற்போது 'ஓம் நமசிவாய உலக மக்கள் நலன் பிரார்த்தனை’ எனும் அமைப்பில் ஏராளமான அன்பர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

'ஓம் நமசிவாய’ மந்திரத்தை 108, 1008, 10008 என்ற எண்ணிக்கையில் எழுதி வைத்திருக்கும் அன்பர்களைத் தேடிச் சென்று, அவர்களிடமிருந்து அவற்றைச் சேகரித்து வைத்து, பூஜைகளும் கூட்டுப் பிரார்த்தனையும் செய்கின்றனர். பிறகு மேள-தாளங்கள் முழங்க, 'ஓம் நமசிவாய’ பேப்பர் கட்டுகளை தலையில் வைத்துக் கொண்டு, ஊர்வலமாக வருகின்றனர். அவற்றை ஏதேனும் சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, அந்த ஆலயத்தின் சக்தியையும் சாந்நித்தியத்தையும், கூடவே மக்களிடம் ஆன்மிகத்தையும் வளர்க்கின்றனர்.  

''சுமார் 600 கோடி 'ஓம் நமசிவாய’ தாள்களைப் பிரதிஷ்டை செய்யணும்னு ஆசை. பல மாநிலங்கள்லேருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கைன்னு பல நாடுகள்லேருந்தும் ஆயிரக்கணக்கான அன்பர்கள் மந்திரங்களை எழுதி அனுப்பிச்சுக்கிட்டிருக்காங்க! இதுல பங்கெடுத்துக்கற அன்பர்கள் எல்லாரும் நல்லாருக்கணும்; நல்லா இருப்பாங்க'' என்று தீர்க்கமாகச் சொல்கிறார் சிவா ஐயப்பன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

- க.நாகப்பன்  
படங்கள்: பு.நவீன்குமார்