சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!

திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!

ஜெய்காளி!
திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!
...............
திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!
##~##
தி
ண்டுக்கல் நகருக்கு, அரணாகத் திகழ்கின்றனர் அஷ்ட காளிகள்! இங்கே நகரின் மையப் பகுதியில், கோயில் கொண்டிருக்கும் அபிராமியம்மனின் பரிவார தெய்வங்களாகவும், எல்லையைக் காக்கும் காவல் தெய்வங்களாகவும் இருந்து, அவர்கள் அருளாட்சி செய்து வருகின்றனர்;  இந்த நகரின் எட்டுத் திசையிலும் இருந்தபடி, ஊரையும் மக்களையும் காத்தருள்கின்றனர், எட்டுக்காளிகள் என்பதை அறிந்ததும் வியந்தோம்.

சக்தி விகடனின் 8-வது ஆண்டுச் சிறப்பிதழில், எட்டு காளிகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போமா?

திண்டுக்கல் நகரில், வடுகு மேட்டுராசப்பட்டி (பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ளது), யாதவ மேட்டு ராசப்பட்டி (நகரில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு), மேட்டு ராசப்பட்டி (சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவு) பூச்சி நாயக்கன்பட்டி (சுமார் 3 கி.மீ. தொலைவு), குடை பாரப்பட்டி  (சுமார் 5 கி.மீ. தொலைவு), பழநி செல்லும் சாலையில்  உள்ள வடக்கு காளியம்மன் கோயில் தெரு (சுமார் ஒரு கி.மீ. தொலைவு), செல்லாண்டி அம்மன் கோயில் தெரு (சுமார் 2 கி.மீ. தொலைவு), கணபதி அக்ரஹாரம் (சுமார் ஒரு கி.மீ. தொலைவு) ஆகிய இடங்களில் எட்டுக் காளியரும் கோயில் கொண்டிருக்கின்றனர்.

திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!
திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!

ஸ்ரீஅபிராமியம்மனின் பரிவார தெய்வங்களாகத் திகழும், இந்தக் எட்டுக் காளிகளையும் ஒரேநாளில் தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்; எதிரிகள் தொல்லை மற்றும் மனோபயம் ஆகியவை அகலும் என்கின்றனர், பக்தர்கள்!

அந்தக் காலத்தில், இந்த ஊரில் வழிப்பறி அல்லது வீட்டுக்குள் புகுந்து திருடுவது அதிகரித்து வந்ததாம். அப்போது ஸ்ரீகாளியிடம், 'நாங்க ஊருக்குப் போறோம்; எங்க வீட்டை நீதாம்மா பாத்துக்கணும்’ என்று சொல்லிவிட்டு, சூடமேற்றி, வணங்கிச் சென்றால், அந்தத் தெருவில் நள்ளிரவில் வலம்  வந்து காவல் இருப்பாளாம், காளி! ஊரின் வடமேற்கில் ஸ்ரீசெல்லாண்டி அம்மனும் வடக்கில் ஸ்ரீவடகாளியம்மனும் அருளாட்சி செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு காளியம்மன் ஆலயமும் சுமார் அரை கி.மீ. முதல் அதிகபட்ச மாக சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் அம்மனைத் தரிசித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் வீட்டில் சுபகாரியங்கள் நடந்தேறும் என்கின்றனர், திண்டுக்கல் நகர மக்கள்!

திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!
திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!
திண்டுக்கல்லை காக்கும் எட்டு காளிகள்!

மண்பாண்டங்கள் செய்பவர் களிடம் ஒரு காளி, சேர தேசத்தில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த தேவி, புற்றில் இருந்து வெளிப் பட்ட காளி, பெரம்பலூர் அருகேயுள்ள காரை கிராமத்தில் இருந்து வந்து குடியேறிய காளி, ஆடுகளை மேய்க்கும் இடத்தில் கிடைத்த தேவி என ஒவ்வொரு அம்மனும் இங்கே கோயில் கொண்டதற்கு, தனித் தனிக் கதைகள் உண்டு.  

மேட்டுராசப்பட்டியில் உள்ள ஸ்ரீகாளியம்மன் ஆலயத்தின் சிறப்பு, அதன் பிரமாண்ட ராஜகோபுரம்! அதேபோல், யாதவ மேட்டுராசப்பட்டியில் அருளாட்சி புரியும் ஸ்ரீகாளியம்மன், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவள். இன்னொரு விஷயம்... இங்கு வந்து பிரார்த்தனை செய்த பிறகே, மற்ற காளி கோயில்களில் காப்புக்கட்டி, திருவிழா துவங்கப்படுகிறது.

திண்டுக்கல் வாழ் மக்கள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் எட்டுக்கோயில்களுக்கும் வந்து, அம்மனை கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். நிறைவாக, நகருக்குள் இருக்கிற ஸ்ரீஅபிராமியம்மனைத் தரிசித்துச் சென்றால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை!

  - உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார், க.கார்த்திக்