சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!

அருள் தரும் ஆலயங்கள் - 8
புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!
.....................
புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!
##~##
பு
துச்சேரி எனப்படும் பாண்டிச்சேரி, மிகச்சிறிய  மாநிலம்தான். ஆனால் அங்கேயுள்ள கோயில்கள், ஒவ்வொன்றும் அத்தனைப் பிரமாண்டங்கள்! கருங்கல் திருப்பணிகள்; சிற்ப நுட்பங்கள்;தொல்லியல் துறையின் நிர்வாகம்... என கோயில்கள் அழகு கூட்டி நிற்கின்றன! புதுச்சேரி மாநிலத்தின் எட்டுக் கோயில்களைத் தரிசிப்போமா?

குண்டாங்குழி ஸ்ரீமகாதேவர்!

புதுச்சேரியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது மதகடிப்பட்டு. இங்கேயுள்ள குண்டாங்குழி ஸ்ரீமகாதேவர் ஆலயம், தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய கோயிலாம்! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.

வருடத்தின் சில மாதங்களில், அந்தி சாயும் வேளையில், சூரியக் கதிர்கள் மூலவரின் திருமேனி மீது விழுந்து, கருவறையையே பிரகாசிக்கச் செய்யும் அழகைத் தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வருவார்களாம்! அதேபோல், சித்திரை மாதப் பிறப்பின்போது, இங்கே நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு தரிசித்தால், திருமணத் தடை அகலும்! நெய் தீபமேற்றி வழிபட் டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பெண்கள். மகாசிவராத்திரி நாளில், ஸ்ரீமகாதேவரை தரிசித்தால், மோட்சம் நிச்சயம் என்கின்றனர், சிவபக்தர்கள்!  

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!


திருபுவனை வரதராஜ பெருமாள்!

புதுச்சேரி- விழுப்புரம் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருபுவனை ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில். பராந்தக சோழனால் கட்டப்பட்ட ஆலயம்! மூலவர் - ஸ்ரீதோத்தாத்ரி நாதர்; உத்ஸவர் - ஸ்ரீவரதராஜபெருமாள். தஞ்சை பெரியகோயிலில், இந்த ஆலயம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம்!

சுக்கிரனும் குருவும் வழிபட்டு, அருள் பெற்ற தலம்; இங்கு வந்து பிரார்த்தித்தால், தோஷங்கள் நிவர்த்தியாகும்; கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்! திருமணத் தடை உள்ளவர்கள், இங்கு நெய்தீபமேற்றி, மூன்று வாரம் ஏதேனும் ஒரு நாளில் இங்கே பிராகார வலம் வந்தால், விரைவில் மணமாலை கிடைக்கும் என்கின்றனர். இதேபோல், தங்கள் வயதின் எண்ணிக்கையில் தீபமேற்றி வழிபட, நினைத்தது நடக்கும்; ஆயுள் கூடும் என்பர்.

பாகூர் திருமூலநாதர்

புதுச்சேரி - கடலூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில், பாகூர் எனும் ஊரில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீதிருமூலநாதர். இதுவும் பராந்தக சோழன் கட்டியதே! தொல்லியல் துறைக் கட்டுப் பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், ஏராளமான சிற்பங்களும் கல்வெட்டுகளும் உள்ளன! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீவேதாம்பிகை. ஆலயத்தின் சிறப்பு, பொங்கு சனீஸ்வரருக்கு இங்கே தனிச்சந்நிதி அமைந்துள்ளது. கார்த்திகையில் 1008 சங்காபிஷேகம் விசேஷம்! சரும நோய் உள்ளவர்கள், இங்கு வந்து சிறப்புப் பூஜை செய்து பிரார்த்தித்தால், விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை!

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!


அபிஷேகபாக்கம் சிங்கிரி கோயில்

புதுச்சேரியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது அபிஷேகப்பாக்கம். இங்கேயுள்ள சிங்கிரி கோயில் வெகு பிரசித்தம். பதினாறு திருக்கரங்களுடன் மேற்கு நோக்கி அருள்கிறார் நரசிம்மர். தாயார் - ஸ்ரீகனகவல்லித் தாயார்.

வசிஷ்டர் வழிபட்ட இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீநரசிம்மரைத் தரிசிக்க பாவமெல்லாம் பறந்தோடும்; வெல்லம், நெய் மற்றும் செவ்வரளி கொண்டு தாயாரை வழிபட, கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை! சுவாதி நட்சத்திரம், பிரதோஷம், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு வந்து நெய் தீபமேற்றித் தரிசித்தால், கடன் தொல்லை தீரும்; பதவி உயர்வு கிடைக்கும்!  

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!


திருக்காஞ்சி ஸ்ரீகெங்கவராக நதீஸ்வரர்

புதுச்சேரி - கடலூர் செல்லும் வழியில் உள்ளது தவளக்குப்பம். இங்கிருந்து வில்லியனூர் செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்காஞ்சி ஸ்ரீகெங்கவராக நதீஸ்வரர் கோயில். நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது. 16 பட்டைகள் கொண்ட லிங்கத் திருமேனி சிலிர்க்கச் செய்கிறது.  

அகத்தியர் வழிபட்ட சிவனார் இவர்! தவிர, காசியம்பதிக்கு நிகரான தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு வந்து பிரார்த்திக்க, பித்ருக்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்;  நெய்விளக்கேற்றி, பிராகாரத்தை 11 முறை வலம் வந்தால், தீராத நோயும் தீரும் என்கின்றனர்.

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!


ஸ்ரீமணக்குள விநாயகர்    

புதுச்சேரி- ஸ்ரீமணக்குள விநாயகர்... பிரெஞ்சுக்காரர்கள் நுழைவதற்கு முன்பே இங்கே கோயில் கொண்டிருக்கிறார் இவர். மணக்குள விநாயகரை மனதார வழிபட, கல்வி சிறக்கும்; வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட, பதவி உயர்வு, நல்ல இல்லறம் அமையப் பெறலாம் என்கின்றனர்.

ஸ்ரீவரதராஜ பெருமாள்

புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில். மூலவர் - ஸ்ரீநரசிம்மர்; உத்ஸவர் - ஸ்ரீதேவாதிராஜன். ஆலயத் தில் உள்ள விக்கிரகத் திருமேனிகள் கொள்ளை அழகு. இவை, சோழர்கள் காலத்தவை என்கின் றனர் ஆய்வாளர்கள். கோயிலின் வசந்த மண்டபம், நாயக்க மன்னர்கள் காலத்தவை! வருடத்தின் 12 மாதங்களும் உத்ஸவம், திருவிழா என களைகட்டி இருக்கும் ஆலயம் இது. தாயாரின் திருநாமம் - ஸ்ரீபெருந்தேவித் தாயார். புதன்கிழமைகளில் இங்கு வந்து அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பாசிப்பயறு பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கினால், வேண்டியது நிறைவேறும்!

புதுச்சேரியில்... புராதனக் கோயில்கள்!


ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம்

ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகி லேயே அமைந்துள்ளது ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருக் கோயில். கிட்டத்தட்ட, புதுவையின் நாயகன் இவர்தான்! ஒருகாலத்தில், இந்த ஊரின் பெயர் வேதகிரி என்றிருந்ததாகச் சொல்வர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதிரிபுரசுந்தரி.  

புதுச்சேரியில் எந்தக் கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடந்தாலும், அந்தந்தக் கோயிலில் இருந்து ஸ்வாமி மற்றும் அம்பாள், ஸ்ரீவேதபுரீஸ்வரரின் தலத்துக்கு வருவார்களாம்! வேதபுரீஸ்வரரை வணங்கினால், கல்வி ஞானம் பெறலாம். ஸ்ரீதிரிபுரசுந்தரிக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால், கடன் தொல்லை தீரும்; கல்யாண மாலை தோளில் விழும் என்கின்றனர் பக்தர்கள்.

கட்டுரை, படங்கள்:  நா.இள.அறவாழி