ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!
பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!
##~##
ர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது பிலிகிரி ரங்கண பெட்டா எனும் மலைப்பிரதேசம். இதனை பி.ஆர்.ஹில்ஸ் என்றும், ஸ்வேதாத்திரி என்றும் குறிப்பிடுவார்கள். ஸ்வேதம் என்றால் வெண்மை என்று அர்த்தம். அங்கே, வெள்ளைப் பாறைக் குன்றுகள் இருப்பதால், இந்தப் பெயர் அமைந்ததாம்! மைசூரில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,091 அடி உயரத்தில் உள்ளது பிலிகிரி மலை.

வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள இந்த மலையில் யானை, சிறுத்தை, மான்கள், கரடி, காட்டெருமை, காட்டுப்பூனை, மிகப் பெரிய அணில்கள் மற்றும் 254 வகைப் பறவைகள் உள்ளன. தவிர, 17 புலிகள் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மலையுச்சியில், ஸ்ரீநிவாசர் திருக்கோயில் அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் காட்சி தரும் பெருமாளை, வசிஷ்ட மகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்வர்.  திருமலைராஜ நாயக்கரின் மகன் முட்டுராஜுவுக்குச் சொந்தமான செப்புப் பட்டயம் ஒன்று (1667-ஆம் வருடம்) ஆலயத்தில் உள்ளது.  

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!

திப்புசுல்தான் வேட்டையாடுவதற்காக ஒருமுறை இந்த வனத்துக்கு வந்தார். அப்போது பெருமாளைத் தரிசித்த அவர், 'ரங்கநாதா’ என்று குறிப்பிட, அதன்பிறகு இந்த இடம் 'பிலிகிரி ரங்கணபெட்டா’ என அமைந்ததாகச் சொல்கின்றனர். பிலிகிரி கோயிலின் மூலவர் ஸ்ரீநிவாசர் (ஸ்ரீரங்கநாதர்); தாயாரின் திருநாமம்- ஸ்ரீரங்கநாயகி.

மலையுச்சியில் பெருமாள் கோயிலும், அடிவாரத்தில் சாம்ராஜ் நகர் சாலையில் ஸ்ரீகனகதாசரின் குகையும் உள்ளன. குகைக்கு அருகில் சிறிய ஏரி மற்றும் பிருந்தாவனம் உள்ளது. இங்கே வாழ்ந்த குரு ஹரிதாஸ கனகா என்பவர், ஸ்ரீநிவாசரைப் போற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.  

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!

பிலிகிரி ஸ்ரீரங்கநாதர் கோயிலில், மிகப்பெரிய அளவிலான காலணி களைத் தரிசிக்கலாம். இவற்றை அணிந்து கொண்டுதான், காட்டுக் குள் அலைவாராம் ஸ்ரீநிவாச பெருமாள். இவரது பாதரட்சையைத் தரிசிப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர், பக்தர்கள்! மேலும் பக்தர்களின் தலையில் பெருமாளின் பாதரட்சையை வைத்து ஆசீர்வதிக் கும் வழக்கம் இங்கே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில், வைகாசித் திருவிழாவின்போது ரத உத்ஸவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திரளாகக் கலந்துகொள்கின்றனர். மலையில் வசிக்கும் சோளிகர் எனப்படும் ஆதிவாசி கள் (மலைவாழ் மக்கள்), ரத உத்ஸவத்தின்போது ஒண்ணே முக்கால் அடிநீளத்தில், தோலால் ஆன பெரிய காலணிகளைச் செய்து, அதை ஜிகினா வேலைப்பாடுகளால் அலங்கரித்து (2 வருடங்களுக்கு ஒரு முறை), பிலிகிரி ரங்கநாதருக்குப் பரிசாகத் தருகின்றனர். இந்த பாதரட்சையைத்தான், பக்தர்களின் சிரசில் வைத்து ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!

பிலிகிரி பெருமாள் கோயிலை அடைவதற்கு... பேருந்தில் வந்தால், சுமார் 150 படிகளும், கார் முதலான வாகனங்களில் சென் றால் சுமார் 50 படிகளும் ஏறினால் போதும். மைசூரில் இருந்து நிறைய பஸ் வசதி உண்டு. மதியம் 12 முதல் கோயிலில் பூஜைகள்

நடைபெறும். பிறகு 1.30 மணிக்கு பேருந்து நிலையத்துக்குச் சென்றால், 2 மணிக்கு மைசூர் செல்லும் கடைசி பஸ்ஸைப் பிடித்துவிடலாம்.

படங்கள்: கே.கார்த்திகேயன்

பிலிகிரி ஸ்ரீநிவாசா சரணம்!

''நரேந்திர மகாராஜாவிடம் சேனாதிபதியாக இருந்த ஆலம்பாடி சுஞ்சய் கவுடாங்கறவர், சுமார் 800 வருஷத்துக்கு முன்னால இந்தக் கோயிலைக் கட்டினார். காலை 7 மணியிலேருந்து மதியம் 2 மணி வரைக்கும்; மாலை 4 மணியிலேருந்து இரவு 8 மணி வரைக்கும் கோயில் நடை திறந்திருக்கும்'' என்கிறார் இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் ரவிக்குமார்.

''விஸ்வாமித்திரருக்குக் கோபம் வந்து, வசிஷ்டருக்கு வாரிசு பிறக்கக் கூடாதுன்னு சாபம் கொடுத்தார். அதுல மனம் வருந்தின வசிஷ்டர், பிலிகிரி மலைக்கு வந்து, அத்தி மரத்தின் கீழே அமர்ந்து, தபஸ் பண்ணினார். அவருக்குக் காட்சி தந்த திருமால், புத்திர சந்தானத்தை வழங்கி அருளினார்னு சொல்லுது ஸ்தல புராணம்! கோயிலின் தல விருட்சம் அத்தி மரம். அதனால, அத்தி மரத்தைச் சுத்தி வந்து, மனசாரப் பிரார்த்தனை பண்ணிட்டு, பெருமாளை சேவிச்சா, குழந்தை பாக்கியம் சீக்கிரமே கிடைக்கும்கறது நம்பிக்கை!'' எனப் பெருமிதம் மாறாமல் சொல்கிறார் அர்ச்சகர் ரவிக்குமார்.