ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!
கலகலப் பக்கம்!

திருமழிசை ஆழ்வார் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க, கொங்கண தேசத்திலிருந்து ஒரு யோகி வந்திருந்தார் ('பார்க்க’ என்றால், ஒரு கை பார்க்க!).

'இந்த ஆழ்வாரைப் பற்றிப் பிரமாதமாக இந்தத் தேசம் புகழ் பாடுகிறதே... அப்படி என்னதான் செய்து இவர் கிழித்துவிட்டார்!’ என்பதைத் தெரிந்துகொள்ளும் எண்ணத்தில்தான் கொங்கண முனி, ஆழ்வாரைச் சந்தித்தார்.

ஆழ்வார் நீண்ட நேரம் குளித்துக்கொண்டிருந்தார். கொங்கண முனி பொறுமையாகக் காத்திருந்தார்.

குளித்துவிட்டு வந்த ஆழ்வார், கொங்கணரை வணங்கி, ''தாங்கள் எழுந்தருளியிருப்பது என் பாக்கியம். தங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார், குளித்துவிட்டு வந்த தன் ஈர உடம்பைத் தேய்த்துவிட்டுக்கொண்டே.

##~##
அப்படி அவர் செய்யும்போது திரித் திரியாக அழுக்கு திரண்டது. குளித்தும்கூடப் போகாத அழுக்கு!

ஆழ்வார் அந்த அழுக்கைத் திரட்டி, ஒரு கொட்டாங்கச்சியில் போட்டார். கொங்கணருக்கு அந்தக் காட்சி மகா அருவருப்பையும் எரிச்சலையும் தந்தது. தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு உடனே திரும்பிவிட நினைத்தார்.

தமது சக்தியை பிரகடனப்படுத்திக்கொள்ளும் வகையில், தாம் கொண்டுவந்திருந்த அபூர்வமான ஒரு மந்திரக் கல்லை ஆழ்வாரிடம் தந்தார். ''துறவியைப் பார்க்கப் போவதென்றால் வெறுங்கையுடன் போகலாகாது என்பார்கள். ஆகவே, ஒரு சிறு கல்லைக் கொண்டு வந்திருக்கிறேன். இது சாதாரணக் கல் அல்ல. நான் பல ஆண்டுகள் கடுந் தவம் செய்து, பல்வேறு சக்தியுள்ள கற்களை என் தவ வலிமையால் உருக்கி எடுத்த கலவைதான், இந்த ரசவாதக் கல். இந்தக் கல் உங்களைப் பெரும் செல்வந்தராக்கிவிடும். இதைக் கொண்டு எதைத் தொட்டாலும், அந்த வஸ்து தங்கமாகிவிடும்!'' என்றார்.

இதைக் கேட்டு ஆழ்வாருக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ''தங்கள் அன்புக்கு நன்றி!'' என்று கூறி, அந்தக் கல்லை வாங்கி ஒரு பாறை மீது வைத்தார். உடனே, அந்த பெரிய பாறை முழுவதும் தங்கமாக மாறிவிட்டது. ஆனால், அப்போதும் ஆழ்வார் முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை.

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, கொங்கண முனி விடைபெற்றுக் கொண்டார்.

''சற்று இருங்கள்'' என்று சொன்ன ஆழ்வார், பக்கத்தி லிருந்த கொட்டாங்கச்சியை எடுத்தார். தன் தேகத்தில் திரண்ட அழுக்கைச் சற்றுமுன் ஒரு கொட்டாங்கச்சியில் போட்டிருந்தாரல்லவா, அதே கொட்டாங்கச்சிதான். அந்த அழுக்கை எடுத்து நிதானமாக உருட்டி, உருண்டை பிடித்தார். கொங்கணருக்கு அந்தக் காட்சி குமட்டலை ஏற்படுத்தியது.

''இந்தாருங்கள்... இவ்வளவு தூரம் தேடி வந்து என்னைப் பார்த்த உங்களை வெறுங்கையாக அனுப்பலாமா? இதோ, என் அன்புப் பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று அந்த அழுக்கு உருண்டையை கொங்கண முனியிடம் தந்தார் ஆழ்வார்.

எரிச்சலும் கோபமுமாக கொங்கணர் அதை வாங்கி, பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தார். அது போய் விழுந்து, உருண்டு சென்ற இடமெல்லாம் வைரக் கற்களாக மாறின. கண்ணைப் பறிக்கும் வைரக் கம்பளத்தை விரித்து வைத்தாற்போன்று, அந்தப் பகுதி முழுவதும் ஜொலிஜொலித்தது.

'ஆழ்வாரின் தேக அழுக்குக்கே இத்தனை சக்தியா!’ என்று எண்ணி வெட்கப்பட்டார் கொங்கணர்.

'தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்று அக மகிழ்க
தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக
கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு நாம்’

- என்கிறது பழந்தமிழ்ப் பாடல் ஒன்று.

அந்தக் கொங்கண முனி வேறு யாருமல்ல! 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’ புகழ் வாசுகி அம்மையிடம் முன்பொருமுறை வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான்!