. பு.துக்கோட்டை என்றதும் நினைவுக்கு வருவது ஸ்ரீபிரகதாம்பாள் திருக்கோயில்தான்! சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தில், ஒவ்வொரு சந்நிதியிலும் அழகு ததும்பி நிற்கிற இறைத் திருமேனிகளைக் கண்குளிரத் தரிசிக்கலாம்..
இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் - ஸ்ரீகோகர்ணேஸ்வரர். இவரைத் தரிசிப்பதற்கு முன்னதாக கங்காதீஸ்வரரையும் தரிசிக்கலாம். 'இந்தக் கோயிலுக்கு வந்து, சாமி கும்பிட்டுப் போனா, நம்ம குடும்பமே செழிக்கும்; நாம நினைச்சதெல்லாம் நடக்கும்’ எனச் சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்... ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதானே, ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வழக்கம்.

ஆனால், இங்கே... ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு அருகில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. முழுமுதற் கடவுளும் ஆனைமுகனுமான ஸ்ரீவிநாயகருடன், ஞானகாரகனாக ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதால், செட்டிநாடு எனப்படும் காரைக்குடி, திருச்சி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர் எனப் பல ஊர்களில் இருந்தெல்லாம் வியாழக்கிழமைகளில் வந்து வணங்கிச் செல்கின்றனர்!

குருப்பெயர்ச்சி நாளில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லைப் பூவால் மாலை அணிவித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருளைக் கிடைக்கப் பெற்று, கல்வி- கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வருவார்கள் என்கின்றனர் பக்தர்கள்!

புதுக்கோட்டை மன்னருக்கு குருவருள் கிடைத்த தலமும் இதுவே! எனவேபுதுக் கோட்டைக்கு வந்து, ஸ்ரீவிநாயகருடன் காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வளம் பெறுங்கள்!

- இ.லோகேஸ்வரி
படங்கள்: பா.காளிமுத்து