Published:Updated:

தேனியில் திருவிளக்கு பூஜை

தேனியில் திருவிளக்கு பூஜை

தேனியில் திருவிளக்கு பூஜை

தேனியில் திருவிளக்கு பூஜை

Published:Updated:
தேனியில் திருவிளக்கு பூஜை
##~##
தே
னி மாவட்டம் மேலப்பேட்டை ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில், சக்தி விகடனின் 58-வது திருவிளக்கு பூஜை, 15.4.11 அன்று விமரிசையாக நடந்தேறியது.

''தேனியில இருக்கறப்ப இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்து சாமி கும்பிட்டுட்டுப் போவேன். 'என் பொண்ணுக்கு கல்யாண மாலையைக் குடும்மா, தாயே’ங்கற வேண்டுதலோட, இப்ப இந்த விளக்கு பூஜைல கலந்துக்கிட்டேன். சக்தி விகடனுக்கு நன்றி!'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் உசிலம்பட்டி வாசகி பஞ்சவர்ணம்.  

பெங்களூரு வாசகி ஞானாம்பாள், ''எட்டு வருஷமா, தொடர்ந்து சக்தி விகடன் வாங்கிட்டிருக் கேன். பெங்களூருல எப்ப விளக்கு பூஜை நடக்கும்னு ஆசை ஆசையா காத்துக்கிட்டே இருந்தவ, யதேச்சையா சின்னமனூர்ல இருக்கிற என் தங்கச்சி வீட்டுக்கு வந்திருக்கிற இந்த நேரத்துல, தேனியில விளக்குபூஜைன்னு அறிவிப்பைப் பார்த்ததும், சந்தோஷமாயிட்டேன். இதைவிட வேற எனக்கு என்ன வேணும், சொல்லுங்க!'' என்று ஆனந்தக் கண்ணீரும், மனம் கொள்ளாத மகிழ்ச்சியுமாகத் தெரிவித்தார்.

''சித்திரைப் பிறப்புக்கு அடுத்த நாள், சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜையில கலந்துக்கிட்டதை ரொம்பவே நல்ல சகுனமா உணர்றேன். இதோ... இந்த வருஷம் என் பையனை எல்.கே.ஜி-ல சேர்க்கப்போறோம். அவனுக்கு கல்வி ஞானத்தைக் கொடுத்து, நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வரணுங்கறதுதான், என் பிரார்த்தனை!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் ஆசிரியை சுபரேகா.

தேனியில் திருவிளக்கு பூஜை

''வாழ்க்கை முழுக்கவே கஷ்டத்தோட வளர்ந்தவ நான். என் மனசுல இருக்கிற காயங்களுக்கு மருந்து போடுறது, சக்தி விகடன்தான்! இப்ப சக்தி விகடனோட திருவிளக்கு பூஜைல கலந்துக்கிட்டதை நினைச்சா, மொத்த காயமும் ஆறிட்டதுபோல ஓர் உணர்வு; ஒரு நிம்மதி!'' என்று சொல்லும் போதே போடிநாயக்கனூர் வாசகி ஜெயந்தியின் கண்கள் கலங்கியிருந்தன.

''நான் விகடன் வாசகின்னு சொல்லிக்கறதுல பெருமைப் படறேன். சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக் கிட்டது, சந்தோஷமாவும் நிறைவாவும் இருக்கு. ஐ.ஏ.எஸ். படிக்கணுங்கறதுதான் என் எதிர்காலக் கனவு. அது நனவாகணும்னுதான் வேண்டிக்கிட்டேன்'' என்று கண்கள் மின்னச் சொல்கிறார் பெரியகுளம் வாசகி கோமதி ஆர்த்தி.

நினைத்ததை நிறைவேற்றித் தர... பத்ரகாளியம்மனை நாமும் பிரார்த்திப்போம்!

- தி.முத்துராஜ்
படங்கள்: இரா.முத்துநாகு