Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Published:Updated:
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு ஒருமுறை, வாழைப்பழம் சாப்பிட வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது.

அவளது ஆசையை நிறைவேற்றுவதற்காக, பூலோகம் வந்து, சென்னை, மயிலாப்பூரில் ஒரு பழ வண்டிக் காரனை அணுகினார் பிரம்மா. முன் ஜாக்கிரதையாக, நம்மைப் போல ஒற்றைத் தலை மனிதனாக ரூபம் எடுத்து வந்திருந்தார்.

வண்டிக்காரனை நெருங்கி, ''பழம் என்ன விலைப்பா?'' என்று விசாரித்தார். ''ஒண்ணு அரை ரூபா'' என்றான் அவன். ''சரி, எனக்கு இரண்டு டஜன் வேணும். கொஞ்சம் நல்லா சுற்றிக் கொடு. தொலைதூரம் கொண்டு போகணும்'' என்றார். அவன் பழங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொடுத்தான்.

##~##
பிரம்மா, இரண்டு டஜன் வாழைப்பழத்துக்கான தொகையாக 12 ரூபாயை சில்லறையாக எடுத்து நீட்டிவிட்டு, நகரத் தொடங்கினார். கப்பென்று அவரது அங்கவஸ்திரத்தைப் பிடித்துவிட்டான் வண்டிக்காரன்.

''யோவ் பெர்சு! நீ பாட்டுல என்னா பன்னண்டு ரூபா கொடுத்துட்டு நழுவறே? மீதி 24 ரூபாயை உம் முப்பாட்டனா வந்து தருவான்?'' என்றான்.

பிரம்மா அசந்து போய்விட்டார். ''என்னப்பா... ஒண்ணு அரை ரூபாய் என்றால், ரெண்டு டஜன் பன்னிரண்டு ரூபாய்தானே?'' என்றார்.

''இன்னாது... ஒரு பழம் அரை ரூபாயா? தோடா! உனுக்கு இன்னா காது டப்ஸாவா? ஒண்ணரை ரூபான்னு சொன்னேன்யா!'' என்றான்.

பிரம்மாவுக்குத் தலை சுற்றியது. 'நல்லவேளை! ஒரு தலையோடு வந்தோம். மூன்று தலைகளோடு வந்திருந்தால் என் கதி என்ன ஆவது!’ என்று நினைத்தவராய், ''இல்லையில்லை. நீ ஒண்ணு அரை ரூபாய்னுதான் சொன்னே! தெளிவாக ஒரு பழம் ஒன்றரை ரூபாய்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?'' என்றார் பழக்காரனிடம். அதற்குப் பதில் சொல்லாமல், ''காலங்காலைல பழம் வாங்க வந்த மூஞ்சியைப் பாரு! நகருய்யா அப்பால!'' என்று சிடுசிடுத்தான் அவன்.

பிரம்மா நொந்து நூடுல்ஸாகி, அங்கிருந்து வெளியேறி, தன் பிரம்மலோகத்தை அடைந்தவர், வண்டிக்காரனிடம் தான் பட்ட ஏமாற்றத்தையும் அவமானத்தையும் மனைவி சரஸ்வதிதேவியிடம் சொல்லி வருந்தினார். பிறகு, ''சேச்சே! பூலோகம் ரொம்பத்தான் கெட்டுப் போய்விட்டது. அரசியல் தலைவர்களிலிருந்து சாதாரண வாழைப்பழ வண்டிக்காரன் வரை ஏதாவது தில்லுமுல்லு பண்ணுகிறார்கள். பக்தர்கள்கூடப் பல சமயம் பண்ணுகிற

ஆர்ப்பாட்டத்தில் ஏமாந்துவிடுகிறோம். இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் தேவி!'' என்றார்.

''ஒரேயடியாக நொந்து போய்விடாதீர்கள். நியாய விலைக்கடை என்று பூலோகத்தில் பல கடைகள் திறந்திருக்கிறார்கள். அந்த மாதிரி, நிஜமான பக்தி உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கி றார்கள். நாம்தான் நமது சக்தியால் அசல் பக்தர்களைக் கண்டு பிடித்து, அருள்புரிய வேண்டும்'' என்றாள் சரஸ்வதிதேவி.

''அதெப்படிக் கண்டுபிடிப்பது?'' என்று கேட்டார் பிரம்மா.

''என்ன நீங்கள்... ரமண மகரிஷி சொல்லியிருக்கும் ஒரு சுலபமான வழி மறந்துவிட்டதா உங்களுக்கு?''

''அப்படியா... என்ன சொன்னார்?''

''எவனொருவன் கடவுளிடத்தில் தன்னையே தியாகம் செய்கிறானோ, அவனே உண்மையான பக்தன். ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவர் ஒருவரே அவ்வளவை யும் தாங்கிக் கொள்கிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேஸ்வர சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறபடியால், நாம் அதற்கு அடங்கியிராமல், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று சதா சிந்திப்பதேன்? ஒரு ரயில் வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போகிறது. அதில் ஏறிக்கொண்டு போகும் நாம், நமது மூட்டைகளையும் அதில் போட்டுவிட்டுச் சுகமாய்ப் பயணிக்காமல், அவற்றை நம் தலையில் சுமந்துகொண்டு ஏன் கஷ்டப்படவேண்டும் என்று சொன்னாரா, இல்லையா?'' என்று புன்சிரித்தாள் சரஸ்வதிதேவி.

''அட, ஆமாம்!'' என்று தன் நான்கு தலைகளிலும் மென்மையாகத் தட்டிக்கொண்டார் பிரம்மா.