மனதைச் செம்மைப்படுத்தி, உடலை வலுப்படுத்துகிற வித்தை யைக் கற்றுக்கொள்வது குறித்த விழிப்பு உணர்வும் ஆர்வமும் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணம்... வாசகர்களாகிய நீங்களேதான்! ஆமாம், உங்களின் சக்தி விகடன், உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைந்து, மனவளக் கலை யோகா- உடற்பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பைப் பார்த்துவிட்டு, ஏராளமான பேர் பதிவு செய்திருந்தீர்கள். சென்னையில், இந்த முகாமை இரு கட்டங்களாக நடத்த வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டீர்கள்!

. ''சுவாமிகள் மீது கொண்ட பிடிப்பால், எங்க வீட்டுக்கே 'வாழ்க வளமுடன்’னுதான் பேரு வைச்சிருக்கோம். ஏற்கெனவே, மனவளக் கலைப் பயிற்சி எடுத்துக்கிட்டவ நான். திரும்பவும் தொடரணும்னு ஆசைப்பட்டேன். சக்தி விகடன், உலக சமுதாய சேவா சங்கத்தோடு சேர்ந்து நடத்தற இந்தப் பயிற்சி முகாம், பத்திரிகை உலகில் புது முயற்சி. இதுல கலந்துக்கறதை பாக்கியமா நினைக்கறேன்'' என்று உற்சாகமும் பூரிப்புமாக சொன்ன வாசகி வான்மதி, சென்னை- தண்டையார்பேட்டையிலிருந்து வந்திருந்தார்..
''இந்த அறிமுகப் பயிற்சியே, எங்கள் உடலுக்கும் மனசுக்கும் புத்துயிர் தந்ததை அனுபவப்பூர்வமா உணர முடிஞ்சது'' என ஒருமித்த குரலில் தெரிவித்தனர், வாசகர்கள். ''வாழ்க்கைல அடுத்தடுத்து தோல்விகள்; நஷ்டங்கள். மனசளவுல ஏற்பட்ட பாதிப்பு, மெள்ள மெள்ள உடம்புக்கும் பரவி, லோ பிபி வரைக்கும் வந்து ஆட்டிப் படைச்சுது. இப்ப லட்சக்கணக்கான பண இழப்பிலேருந்து மீண்டு வந்துட்டேன். ஆனால், உடலளவில் எப்படி மீண்டு வர்றதுன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான், 'யோகா, தியானம்னு ஈடுபட்டால், நல்ல மாற்றங்கள் ஏற்படும்’னு டாக்டர் சொன்னார். இதையெல்லாம் எங்கே கத்துக்கறது, எப்படிக் கத்துக்கறது, யார் நமக்கு வழிகாட்டுவாங்கன்னு ஒண்ணுமே புரியலை. அந்த நேரத்துலதான், இந்த அறிவிப்பைப் பார்த்தேன். இதோ...வந்துட்டேன். எனக்கொரு புதிய பாதையைக் காட்டின சக்தி விகடனுக்கு நன்றி'' என ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கத் தெரிவித்தார் சென்னை, கோடம்பாக்கம் வாசகி உமாஸ்ரீ.

''எனக்கு கால் மூட்டு ஆபரேஷன் நடந்திருக்கு. டாக்டர்கள் நடக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா, வேதாத்திரி மகரிஷியோட கருணையாலயும், அவங்க கொடுத்த பயிற்சியாலயும் ஆறே மாசத்துல பழையபடி நடக்கத் துவங்கினேன். அதுக்கப்புறம் பல வருஷம் 'டச்’ விட்டுப்போச்சு! சக்தி விகடனோட இந்த அரிய முயற்சியால, எனக்கும் உலக சமுதாய சேவா சங்கத்துக்குமான பந்தம் மறுபடியும் தொடர ஆரம்பிச்சிருச்சு'' என நெகிழ்ச்சியுடன் சொன்னார் வாசகி சாந்தி சூர்யா.

மொத்தத்தில், சக்தி விகடன் இதழும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து ஒரு பெரிய சமூக நன்மைக்கான விதையை ஊன்றியிருப்பதான சந்தோஷம், இந்த முகாமில் கலந்துகொண்டவர்களின் முகங்களில் பளிச்சிட்டது.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

- வி.ராம்ஜி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்