Published:Updated:

இந்த ஆண்டு இறுதிக்குள் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும்: சுப்பிரமணியன் சாமி

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் கண்டிப்பாக ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ''ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும். இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக இந்த பணிகள் தொடங்கப்படும். இதற்கான செயல்திட்டம் 9-ம் தேதி வெளியிடப்படும்.

ராமர் கோவில் கட்டும் பணியை விஷ்வ இந்து பரிஷத் முன்னெடுக்காது. இதை கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை. இந்து மற்றும் முஸ்லிம்களின் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும். இதற்கும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை'' என்றார்.