Published:Updated:

சிவன் கோயில் சிலம்பம்!

பொன்னேரி சுட்டிகளின் அசத்தல்

##~##

கிரிக்கெட், டென்னிஸ், என மேற்கத்திய விளையாட்டுகளை அங்கீகரிக்கும் நாம், பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி போன்றவற்றைப் புறக்கணிக் கிறோம். ஆனால், சிலம்பத் தின் மீது தீராதக் காதல் கொண்டு, சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கி வருகி றார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த ஹரி.

''இந்தப் பகுதியில் சிலம்பக் கலையை வளர்த்தவர்களில் சுப்பிரமணிய ஆசான் குறிப்பிடத்தக்க வர்.என்னைப்போல சுப்ரமணிய ஆசானின் மாணவர்கள் பல்வேறு இடங்களில் சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறோம். நான் பொன்னேரி சிவன் கோயில் வளாகத்தில் 'சாமுக்யானா சிலம்பப் பயிற்சிக் கூடம்’ என்ற பெயரில்  சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறேன். திருவிழாக் களிலும், சாவுகளிலும் மட்டுமே விளையாடிக் கொண்டு இருந்த இந்தச் சிலம்பம், 2007-ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரத்தால் பள்ளிகளிலும் ஒரு பாடம்ஆனது.

சிவன் கோயில் சிலம்பம்!

ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்து குழந்தைகளைக் குங்ஃபூ, கராத்தே கற்க அனுப்புபவர்கள் சிலம்பத்தை இலவசமாகக் கற்றுத் தருகிறேன் என்றால்கூட வர மறுக்கிறார்கள். மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த, மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிலம்பத்தின் பெருமைகளை விளக்கி வருகிறோம். அதே சமயம் வெறுமனே பொழுதுபோக்குக்காகத் திருவிழாக்களில் விளையாடுவதைத் தவிர்த்துவிடுகிறோம்!'' என்று சொல்லும் ஹரி, பயிற்சிக் கட்டணமாக மாதம் வெறும்

சிவன் கோயில் சிலம்பம்!

50 மட்டுமே வசூலித்து வருகிறாராம்.

சிவன் கோயில் சிலம்பம்!

''நடுத்தர வயதினர் மட்டுமே கற்றுவந்த சிலம்பத்தை இளைஞர்கள், சிறுவர், சிறுமியரிடம் எடுத்துச் செல்கிறோம். ஐந்தில் தொடங்கி ஏழு வயதுக்குள் ளேயே சிலம்பத்தின் நுணுக் கங்களைக் கற்றுக்கொள் ளலாம். பொன்னேரி கல்லூரியில் படிக்கும் சந்தியா என்ற எங்கள் மாணவி, சர்வதேச அளவில் பல விருதுகளை தட்டி வந்து இருக்கிறார். எங்கள் வீரர், வீராங்கனைகள் 16 பேர் தேசிய அளவில் ஒட்டுமொத்த பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய அளவில் வேறு எந்தக் குழுவுக்கும் இந்தச் சிறப்பு இல்லை. எதிர்கால நலன் கருதி நல்ல பயிற்சியாளர்களை யும், வீரர்களையும் உருவாக்குவதே எங்கள் இலக்கு!'' என்கிறார் பயிற்சியாளர் சேகர்!

- க.நாகப்பன், படங்கள்: அ.ரஞ்சித்