சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தஞ்சாவூர் திருவிளக்கு பூஜை

தஞ்சாவூர் திருவிளக்கு பூஜை

தஞ்சாவூர் திருவிளக்கு பூஜை

'குரு பார்க்க கோடி நன்மை கிடைக்குமே! எனக்கும் கிடைக்குமா குரு பார்வை!’ எனும் ஆதங்கம் கலந்த பிரார்த்தனை யாருக்குத்தான் இல்லை?! குரு ஸ்தலம் எனப் போற்றப்படும் தஞ்சாவூர்- தென்குடித்திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் தலத்தில், கடந்த 26.4.11 அன்று, சக்தி விகடனின் 59-வது திருவிளக்கு பூஜை சிறப்புற நடைபெற்றது. இதில், பக்தியுடனும் பிரார்த்தனைகளுடன் கலந்து கொண்டனர் வாசகிகள்.

##~##
''என் பையனுக்கு வெளிநாட்டுல படிக்கணும்னு ஆசை. அது நிறைவேறணும்கிற வேண்டுதலோடதான் இங்கே வந்து பூஜைல கலந்துக்கிட்டிருக்கேன்'' என்றார் திருச்சி வாசகி மீனாட்சி.

''கருவுண்டாகியிருக்கிற என் பொண்ணுக்கு நல்ல படியா சுகப்பிரசவம் நடக்கணும். ஒரு கஷ்டமும் இல்லாம, பேரனோ பேத்தியோ பிறக்கணும். இதான் என் பிரார்த்தனை'' எனச் சொல்லி நெகிழ்ந்தார் ஸ்ரீரங்கம் வாசகி அமுதா.

''எங்க குடும்பத்துல, கொஞ்ச காலமாவே குழப்பம்; பிரச்னைகள். அதனால, வீட்ல நிம்மதியும் இல்லை; சந்தோஷமும் கிடைக்கலை. இதெல்லாம் சரியாகணும்; எங்க குடும்பத்துல ஒற்றுமை மேலோங்கணும்கற வேண்டுதலோட வந்திருக்கேன்'' என்றார் தஞ்சாவூர் வாசகி ஷகிலா கணேசன்.  

''இப்ப, கொஞ்ச நாளைக்கு முன்னால ஜப்பான்ல சுனாமியும் பூகம்பமும் வந்து தாக்கிச்சே தெரியுமா? அப்ப அங்கே இருந்த எங்க பையன் இன்னும் அந்த அதிர்ச்சி யிலேருந்து மீளலீங்க. அவன் பழைய நிலைக்கு வரணும்; ஜாம்ஜாம்னு அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்கணும். குரு யோகம் கூடி வர, எல்லாரும் என் பையனுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்க'' என நெக்குருகிச் சொல்லும் போதே அழுதுவிட்டார் வாசகி புஷ்பவல்லி.  

''நல்லாப் படிச்சிருக்கற என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்'' என்று வேண்டிக்கொண்டார் வாசகி ராஜேஸ்வரி. ''பிளஸ் டூ எழுதியிருக்கேன். நல்ல ரிசல்ட் கிடைக்கணுங்கறதுதான் என் பிரார்த்தனை'' என்கிறார் வாசகி சந்தியா.

''எங்க அப்பாவுக்கு ரொம்ப நாளாவே உடம்பு சரியில்லை. அவர் பரிபூரணமா குணமாகணும். அதுக்கு குரு பகவானும் வசிஷ்டேஸ்வரரும் கருணை காட்டணுங்கற வேண்டுதலோடு வந்திருக்கேன்'' என்று சொல்லிக் கண்கள் மூடிப் பிரார்த்தித்தார் ஷியாமளா தேவி.

குருவருள் இருக்க, திருவருள் நிச்சயம்!

- ச.ஸ்ரீராம்
படங்கள்: ந.வசந்தகுமார்