சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

கவான் பாபாவின் அன்பு தாயன்பு! ஆயிரம் தாய்மார்களின் அன்பைப் பொழியும் பெருங்கருணை அவருடையது. கனிவு... அதீதமான கனிவு. கருணை... பொங்கிவரும் பெருங்கருணை. மனங்கரைந்துருகும் பக்தருக்காக இறங்கிவந்து அருள்புரியும் தெய்விகம்... எல்லாம் இந்த சத்திய தெய்வத்தின் அருட்குணங்கள். சுவாமியிடம் உளம்கரைந்துநின்று எவர் பிரார்த்தனை செய்தாலும், அது அவர்க்கு எந்த நேரத்தில் பலித்தால் நல்லதோ, அந்த நேரத்தில் பலித்துவிடுகிறது!

எப்போதும் சுவாமி பாபாவின் பிரியத்துக்கு உகந்த அருமந்தச் செல்வங்கள்,  அவருடைய பள்ளி - கல்லூரியில் பயிலும் மாணவச் செல்வங்களே! நவபாரதத்தை உருவாக்கவல்ல அற்புதமான சிற்பிகளாக சுவாமி அவர்களை உருவாக்கிவிடுகிறார்.

சுவாமியின் கல்வி நிறுவனங்களில், கல்வி இலவசம். ஆன்மிகம், வேதம் பயிற்றுவித்தல், நல்லொழுக்கம்,  பண்பாடு, கலாசாரம், வரலாறு, உள்ளிருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்தல்... என்று பலமான அடிப்படைகளில், சுவாமியின் அருளாசியுடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு உணவு சரியாகத் தரப்படவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார் சுவாமி.

ஒருமுறை, சுவாமியின் மாணவச் சிறுவன் ஒருவன் உணவுக்கூடத்தில் மாட்டப்பட்டிருந்த சுவாமியின் திருவுருவப் படத்தின் முன்னே நின்று பிரார்த்தித்தான். அது என்ன என்கிறீர்களா?!

சனிக்கிழமை மதியம்தோறும் அங்கே 'பாலக்பன்னீர்’ பிள்ளைகளுக்குப் பரிமாறுவார்கள். மற்ற பதார்த்தங்கள் சற்றுக்கூடுதலாகவும் பாலக் பன்னீரைக் கொஞ்சமாகவும் பரிமாற... அந்தச் சிறுவனுக்கு மனக்குறை. உணவுக்கூடத்திலிருந்து சுவாமி பாபாவின் படத்துக்கு முன்னே நின்று, சுவாமியைப் பார்த்தபடி ஆதங்கத்துடன் தன்னுடையை குறையைச் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
##~##
''சுவாமி, சுவாமி... இங்கே பாருங்க சுவாமி. இங்கே சாப்பாடு பரிமாறும்போது, மத்த காய்கறிகள்னா ரெண்டு கரண்டி வைக்கிறாங்க. 'பாலக்பன்னீர்’ எங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும் சுவாமி... அதை மட்டும் ஒரு கரண்டிதான் வைக்கிறாங்க. எங்களுக்குப் பிடிச்சதைக் கொஞ்சம் கூடுதலா வைக்கச் சொல்லுங்க சுவாமி'' என்று சொல்லிப் பிரார்த்தித்து விட்டு, கப்சிப்பென்று சகமாணவர்களுடன் சேர்ந்து, சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் சென்றான்.

மாலையில் சுவாமி தரிசனத்துக்கு அத்தனை மாணவர்களும் செல்வது வழக்கம். அன்றைக்கு, பஜன் முடிந்து மங்கல ஆரத்தியானதும்தான் விடுதிக்குத் திரும்புவார்கள். அன்று அப்படி தரிசனத்துக்காக, மாணவர்கள் அமர்ந்திருந்தபோது, சுவாமி கைகாட்டி, அந்த மாணவச் சிறுவனை தன்னருகில் வரச்சொன்னார். 'சுவாமி எதற்காகக் கூப்பிடுகிறாரோ’ என்ற குழப்பத்துடனும் பயத்துடனும் போய் நின்றான் சிறுவன்.

அப்போது, ஹாஸ்டல் வார்டனையும் அங்கே வரச்சொன்னார் சுவாமி. அவர் ஓடிவந்து கைகூப்பியபடி நின்றார்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சுவாமி கேட்டார்... ''பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடும்போது, அவர்களுக்குப் பிடித்தமானதை, அவர்களுக்குத் திருப்தியாகப் பரிமாற வேண்டாமா?''

சுவாமிகள் சொன்னதும், வார்டன் நடுங்கியபடி சிறுவனைப் பார்த்தார். உடனே அவனுக்கு பயம் வந்துவிட்டது. ''ஐயையோ... சுவாமியிடம் வந்து அப்படி நான் எதுவும் ரிப்போர்ட் பண்ணலியே...’ என்று சொன்னபடி, 'சுவாமி’ என்று குரல்கொடுத்தான்.

சுவாமி, அந்தச் சிறுவனைப் பார்த்துச் சொன்னார்...

''நீ வந்து, என்னிடம் சொன்னால்தான் எனக்குத் தெரியுமா? மதியம், உணவு வேளையின்போது என் படத்துக்கு முன்னே நின்று, பிரார்த்தனை செய்தாய் அல்லவா? படத்திடம் சொன்னால் என்ன... நேரில் வந்து சொன்னால் என்ன... இரண்டும் ஒன்றுதான்!'' என்று சிரித்தபடியே சொன்னவர், ''இனி உங்களுக்குப் பிடித்ததை நன்றாகச் சாப்பிடுங்கள்'' என்று தெரிவித்தார். அத்துடன், வார்டனிடமும் பிள்ளைகளின் விருப்பப்படி பரிமாறச் சொல்லி அனுப்பினார்.

அன்றைய தினம், அடுத்தவேளை உணவு பரிமாறும்போது, பிள்ளைகளிடம் வார்டன், ''இந்தப் பாருங்கப்பா. இனிமே, ஏதாவது வேணும்னா, எங்கிட்டக் கேளுங்கப்பா. படத்துக்கிட்டபோய்,  உடனே கேட்டுடாதீங்க'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்கள், 'சாயிராம் சாயிராம் சாயிராம்’ என்று சொல்லிக்கொண்டே,  சந்தோஷமாகத் தலையாட்டினர்!

- அற்புதங்கள் தொடரும்

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ன் தந்தை கொடுத்துவைத்தவர். ஸ்ரீசாயியுடன் ஒரு நண்பரைப் போல பழகும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஸ்ரீசாயியின் அருளாடல்களையும் அற்புதங்களையும் மெய்சிலிர்க்க விவரிப்பார் அப்பா. அதைக் கேட்கக் கேட்க, ஸ்ரீசாயி பகவானை நேரில் தரிசிக்கும் ஆவல், நாளுக்குநாள் அதிகரித்தது எங்களுக்குள்.

ஒருநாள் அப்பாவுடன் புட்டபர்த்திக்குப் புறப்பட்டோம். நான் சொல்வது, சுமார் 50 வருடங்களுக்கு முன்!  இப்போது உள்ளது போன்ற வசதிகள் எல்லாம் புட்டபர்த்தியில் அன்று கிடையாது. வானமே கூரையாக... தரையில் ஜமுக்காளம் விரித்துப் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாங்கள் சென்றதற்கு மறுநாள் வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீசாயி பகவானின் தரிசனமும், அவரது திருக்கரங்களால் அம்ருதம் பெறும் பாக்கியமும் கிடைக்க... நெக்குருகிப் போனேன். அன்று நான் அடைந்த ஆனந்தம் அளவிட முடியாதது. அதன்பிறகு ஏராளமான அனுபவங்கள் எனக்கு. ஸ்ரீசாயி பஜனையும், வியாழக்கிழமை விரதமும் என் வாழ்வின் அங்கமாயின!

திருமணத்துக்குப் பிறகு ஒருமுறை கணவருடன் புட்டபர்த்திக்குச் சென்றேன். என் கணவருக்கு, அப்போது பாபாவிடம் நம்பிக்கை இல்லாமலிருந்தது. புட்டபர்த்தியில் பகவானை தரிசித்தபோது, அவர் என் கணவரிடம் கேட்ட முதல் கேள்வி...  'நேற்று ஏன் அவளைக் கோபித்துக் கொண்டாய்?’ என்றுதான்.

சிலிர்த்துப் போனேன் நான்! முதல் நாள், என் கணவர் சிறு விஷயத்துக்காக என்னைக் கடிந்துகொண்டார். ஆனால், இது எப்படி பாபாவுக்குத் தெரியும்?!

'பாபா! அவகிட்டே நான் பிரியமாத்தானே இருக் கேன்? எல்லாம் வாங்கித்தரனே?’ என்றார் என் கணவர். அதேநேரம், தன் கைகளால் பாபாவின் கன்னங்களைத் தடவுவதுபோல் வைத்துக்கொண்டு, நாசூக்காக பாபாவின் தலைமுடி நிஜமானதா, டோப்பாவா என்று சோதித்துக் கொண்டிருந்தார் என்னவர். பாபா அதைத் தடுக்கவில்லை. ஆனால் சிரித்தபடியே....

''நாக்கு தெலிசுனு. அவ என்னோட பக்தை. அவளை ஒன்றும் சொல்லாதே'' என்றார்.

பாதி தெலுங்கிலும் பாதி தமிழிலுமாக ஸ்ரீசாயி பகவான் சொன்ன வார்த்தைகள், இன்றும் என் காதில் ஒலிப்பது போல் உள்ளது. தாயுமாகி நிற்கும் அந்தத் தெய்வத்தின் அன்பும் அருளும் என்றென்றும் நம்மை காத்து நிற்கும்! ஜெய் சாயிராம்!

- விமலா தியாகராஜன், சென்னை-92

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!