சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!
வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!
##~##
கோ
யில்களில், உற்ஸவங்கள் நடைபெற்றால், அவை அந்த ஆலயத்தின் நன்மையைக் கருதி நடைபெறும் விழா என்றோ, 'பல விழாக்களில் இதுவும் ஒன்று’ என்பதாகவோ நினைக்கிறோம். தேர்த்திருவிழா முதலான முக்கியமான விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறோம். மற்ற உற்ஸவ விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உற்ஸவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான வைபவம் என்பதை அறிவது அவசியம்!

உத் ஸவம். இதில், ஸவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரஸவம் என்கிறோம். அதேபோல், எல்லாம்வல்ல பரம்பொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தமாக எழுந்தருளியுள்ளது. அப்படி, மூலமூர்த்தமாக இருக்கிற இறைவனை, இறைச்சக்தியை, உற்ஸவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக, கோயிலில் இருந்து ஸ்வாமி வீதியுலா வருகிற வைபவமே, உற்ஸவம்!

தீமைகள் அழிந்து, உலகில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்வதற்காகவே உற்ஸவங்கள் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன, ஆகமங்கள்! காரணாகமம் எனும் சிவாகமம், 'பரம் சாம்பவி தீஷாக்யம் உத்ஸவம் பாபநாசனம் ஸர்வ கல்யாண மித்யுக்தம் உத்ஸவம் ஞானஸம்பவம்’ என விவரிக்கிறது. திருவீதியுலா வருகிற இறைவனை, பக்தியுடனும் பரிபூரண நம்பிக்கையுடனும் சரணடைந்தால், பாபங்கள் விலகும்; மங்கலங்கள் பெரு கும்; 'சாம்பவீ தீ¬க்ஷ’ சிவஞானத்தை எளிதில் பெற்று வாழலாம்!

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!

அதாவது, இறைவனானவன் எந்த ஸ்பரிசமும் இன்றி, நம் மீது பெருங்கருணை யுடன் இந்த தீ¬க்ஷயை அளித்தருளத் தயாராக இருக்கிறான். அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?! இறைத்திருமேனி வீதியுலா வரும்போது, தெருக்களைச் சுத்தம் செய்து, நீர் தெளித்து, வண்ணக்கோலங்களால் அலங்கரித்து, இறைவனை வரவேற்க வேண்டும். இதில் மகிழும் இறைவன், நம் கர்மவினைகள் யாவற்றையும் போக்கி, நம் வாழ்வையும் வண்ணமயமாக்குவான்!

பிரம்மோற்ஸவத்தை, மகோற்ஸவம் என்றும் அழைப்பர். அதாவது, 'மஹ இதி பிரஹ்ம...’ என வேதம் கூறுகிறது. இதில், பிரம்மம் என்பது, நான்முகக் கடவுளான பிரம்மாவைக் குறிக்கவில்லை. இந்தப் பிரபஞ்சம் அனைத் துக்கும் காரணமான பரம்பொருளையே, பிரம்மம் என விவரிக்கிறது வேதம்! ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாத என்கிற பஞ்ச பிரம்மங்களைக் குறிக்கிறது, இது! இவற்றால்தான், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து காரியங்களும் நடைபெறுவதாகச் சொல்வர், ஆன்றோர்!

உற்ஸவங்கள், ஒரேயரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும். எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்ஸவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த ஒன்பது நாள் உற்ஸவத்தை, 'சௌக்கியம்’ என்று குறிப்பிடுவர்.

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!

பிரம்மோற்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி. அந்த நாளில், ஆச்சார்யர்... புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹனம் செய்து, அனைத்து ஜீவராசி களையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருளச் செய்கிறார். அப்போது, நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும் போது, மிகச் சிலிர்ப்பான இறையனுபூதி கிடைக்கும் எனச் சிலாகிக்கிறார் மணிவாசகப் பெருமான். தீர்த்தவாரி உற்ஸவம், மாதத்தின் நட்சத்திரத்தில் நடைபெறவேண்டும் என்கின்றன ஆகமங்கள். அதாவது, சித்திரை - சித்திரை; வைகாசி - விசாகம் (பௌர்ணமி) ஆகிய நட்சத்திரங்களில் அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் பிரம்மோற்ஸவம் நடைபெறும் என ஆகமங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  

நமது அனைத்துக் கர்மாக்களுக்கும் சாட்சியாக விளங்குகிறார் சூரிய பகவான். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை, 'ஸங்க்ரமணம்’ என்றும், மாதப்பிறப்பு என்றும் கடைப்பிடிக்கிறோம். சூரிய பகவான் ரிஷப ராசியில் பிரவேசிப்பதை, வைகாசி மாதப் பிறப்பு என்கிறோம். ரிஷபம் என்பது சிவபரம்பொருளின் வாகனம்; தர்மங்களின் ஸ்வரூபம். அதனால்தான், தர்மத்தின் ரூபமாக விளங்கும் ரிஷபத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, ரிஷப ராசியில் அவதரித்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அனைத்து ஆத்மாக்களின் பிரதிநிதியாக, ஈசனிடம் இருந்து வருகிறது, ரிஷபம்!

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!
வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!

ரிஷப ராசியின் அதிபதி, சுக்கிரன். நம் இல்லறத்தில், உறவுகள் ரீதியாகவும் உத்தியோக ரீதியாகவுமான அனைத்து நற்காரியங் களையும் சீரிய முறையில் நடத்தித் தருபவர், சுக்கிர பகவான்! வைகாசி மாதத்தை, சாந்த்ரமான முறையில், வைசாகம் என்பர். இந்த மாதம் முழுவதும், எவரொருவர் சூரியோதயத் துக்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றனரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பௌர்ணமி நாளிலேனும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

ஒவ்வொரு நாளுடனும் நட்சத்திரங்கள், திதிகள், வாரம் என்பதன் சேர்க்கையால், அந்த நாளின் தன்மை மாறுபடுகிறது. அந்த வகையில், நட்சத்திரங்களில் 16-வதாகத் திகழ்கிறது விசாகம். 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!’ என்று பெரியோர் ஆசீர்வதிப்பர். குரு பகவானின் நட்சத்திரமும் இதுவே! தேவர்களைக் காக்க, சண்முகக் கடவுள் உதித்ததும் வைகாசி விசாகத்தில்தான்! அதனால்தான், வைகாசி விசாக நன்னாளில், முருகக் கடவுள் குடி கொண்டிருக்கும் ஆலயங்களில்,

சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. புத்தர், காஞ்சி மகா பெரியவாள் ஆகியோர் அவதரித்ததும் புண்ணிய  வைகாசியில்தான்!

வைகாசி மாத பிரம்மோற்ஸவ விழாக்களில் கலந்துகொண்டு வழிபட... இயற்கைச் சீற்றங்கள் குறையும்; பசுமை கொழிக்கும்; உலகில் அமைதி நிலவும்; குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும்; சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

வைகாசி புண்ணியம்... பிரம்மோற்ஸவ தரிசனம்!