Published:Updated:

கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்!

 கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்!
கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்!

 கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்!

திமுகவுக்கும், பரிகார பூஜைகளுக்கும் எப்போதுமே பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருந்து கொண்டே வருகிறது. வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தொடங்கி  ' வால்கா முதல் கங்கை வரை ' என்று பயணக் கட்டுரை போல்  இவர்கள் பயணப்படும் பரிகாரக் கோயில்களின் பட்டியலே ஒரு நெடுந்தொடராகப் போகும். ஆன்மீக விஷயங்கள் அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதில் அதிகாரத்தை பயன்படுத்தும்போதுதான் சிக்கல் எழுகிறது.

ஆமாம், யார் , எங்கே , என்ன செய்தார்கள்?

பதவி பறிப்புக்கு ஆளாகி மீண்டும் மந்திரி பதவிக்குள் வந்ததோடு,  அதிமுகவின் மாநில மகளிரணிச் செயலாளராகவும்  பொறுப்பில் இருப்பவர் கோகுல இந்திரா. இவருக்கும் அமைச்சர் வளர்மதிக்கும், எப்போதும் ஏழாம்பொருத்தம்.

முடிந்தால் முரண்களை களையவும் அல்லது முரணான எதிரியே இல்லாது தொலையவும் (அதுவும் கார்டனிலிருந்து வேட்பாளர் லிஸ்ட் வருவதற்குள்) குறுகிய காலத்தில் ஒரு நல்ல நாள், நேரம்  என்பதுபோல்  நேற்றைய (22.03.2016) தினம் பௌர்ணமி கூடிவர, உரிய பரிகாரத்துக்காக, சென்னையிலிருந்து  மந்திரி கோகுல இந்திரா, காரிலேயே  புறப்பட்டிருக்கிறார், அந்தக் கோயிலுக்கு.

அந்தக் கோயில், திருப்போரூர் கந்தசாமி (முருகர்) திருக்கோயில். ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலின் நடையானது (தரிசன காலம்) பகல் 12.30-க்கு அடைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் மாலைதான் கோயில் நடை திறக்கப்படும்.

 கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்!

சென்னையிலிருந்து  திருப்போரூர் கோயிலுக்குப் போகும் நேரம்,  பயணப் பாதையில் தாமதப்பட்டுக் கொண்டே போகவே ' நான் வந்துக்கிட்டே இருக்கேன்' என்று கோயில் நிர்வாகத்தாரிடம் செல்போனில் தகவலைக் கொடுத்துக் கொண்டே கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தார் கோகுல இந்திரா.
திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் மூலவர் கோயில் நடையை அடைக்க விடாமல், முருகரையும், கோயில் நிர்வாகத்தினரையும் 1.45- வரை காக்க வைத்த கோகுல இந்திரா,  சரியாக 1.46-க்கு  கோயிலைத் தொட்டிருக்கிறார்.

முன்னரே தயாராக கோயில் நிர்வாகத்தினர் வாங்கி வைத்திருந்த மலர்களை அள்ளிக் கொண்டு ஓடோடிப் போய் கந்தசாமி பாதங்களில் வைத்து விட்டு நெக்குருக தன்னுடைய ' அந்த ' வேண்டுதலை நிறைவேற்றி வைத்து விட்டு, அங்கிருந்து பின்னர் புறப்பட்டிருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் சன்னிதானம் என்பது முதலமைச்சரான ஜெயலலிதாவின் இஷ்ட கோயில்களில் ஒன்று என்கிறார்கள். அதே போல் சசிகலா, சுதாகரன் போன்றோரும் அடிக்கடி இங்கே வந்து பயபக்தியுடன் வணங்கி விட்டுச் செல்வார்களாம்.

 கோகுல இந்திராவுக்காக காத்திருந்த திருப்போரூர் முருகர்!

இந்த சன்னிதானத்தில்  சூது, வாது, களவு போன்ற அழுக்கு மனதுடன் வருகிறவர்கள் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வது உறுதி என்கின்றனர், திருப்போரூர் கந்தசாமி மீது மிகுந்த பக்தி கொண்ட ஊர் மக்கள்.
அதற்கு அவர்களே சொல்லும் சில உதாரணங்கள் " தமிழக மந்திரிகளாக இருந்த கே.பி. முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோர் இங்கு வந்து போன மறுநாளே பதவியை பறி கொடுத்தார்கள். அண்மைய உதாரணம் ஓ.பி.எஸ். நீங்க வேண்டும்னா வெளியில விசாரிச்சுக்கிடுங்க தம்பீ, நல்ல மனசோட இங்கே வந்துட்டுப் போனவங்க அழிஞ்சதா வரலாறே இல்லை..." என்றனர்.

ஆமாம், வேட்பாளர் லிஸ்ட் என்று ரிலீஸ் ஆகிறது?

- ந.பா.சேதுராமன்

அடுத்த கட்டுரைக்கு