Published:Updated:

ஜெயலலிதா, கருணாநிதி ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு துன்பம் நீக்குமா... துயரம் தருமா?

ஜெயலலிதா, கருணாநிதி ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு துன்பம் நீக்குமா... துயரம் தருமா?
ஜெயலலிதா, கருணாநிதி ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு துன்பம் நீக்குமா... துயரம் தருமா?
ஜெயலலிதா, கருணாநிதி ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு துன்பம் நீக்குமா... துயரம் தருமா?

ஜெயலலிதாவின் சிம்மம் ராசிக்காரர்களே...

இந்த துர்முகி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும், துன்பங்களை நீக்கி, நோய் நொடியில்லாத நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்குமா? எனப் பார்ப்போம்.
 
"தமிழ் புத்தாண்டு பிறக்கும்போது, உங்களின் யோகாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் 8-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 1.8.16 வரை ஜென்ம குரு தொடர்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால், ஒரே நாளில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும்.

4.12.16 முதல் 29.12.16 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், நரம்புச் சுளுக்கு, சோர்வு, வீண் செலவு, வாகன விபத்து, கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வருடம் முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

வருடம் முழுவதும் உங்கள் ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி முன்கோபம் வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 16.1.17 முதல் 26.2.17 வரை 8-ல் மறைவதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள், எதிலும் நம்பிக்கையின்மை, வீடு, மனை வாங்குவது, விற்பதில் சின்னச் சின்ன இழப்புகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பீர்கள். என்றாலும் 4-ம் வீட்டில் சனி நிற்ப தால், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சில விஷயங்களுக்கு நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகை களால் ஆதாயம் உண்டு. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். வங்கிக் கடன் கிடைத்து உங்கள் ரசனைக்கு ஏற்ற இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டு. என்றாலும் ஆனி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும். சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து விடுபடுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் அலட்சியம் வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக் கூடும். கவனமாக இருக்கவும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெற வேண்டி வரும்.

கலைத்துறையினர் விடா முயற்சியால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களுடைய படைப்புத் திறன் வளரும்.

மொத்தத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு, முற்பகுதியில் சின்னச் சின்ன சங்கடங்களை தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி,  வருங்காலத் திட்டங்களை நிறைவேற்ற உகந்த வாய்ப்புகளைத் தருவதாக அமையும்.


பரிகாரம்

திருநள்ளாறு அருகிலுள்ள அம்பகரத்தூரில் அருளும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியை, வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். அல்லல்கள் நீங்கும்."
 
பஞ்ச்:

தன்னம்பிக்கை பிறக்கும்! ( அதுதானே நமது பலம்...)
வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்! (குமுதா ஹேப்பி அண்ணாச்சி...)
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்! (நிச்சயமாக...)
புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள்! (அது கைவந்த கலையாச்சே...)
போராடி வெற்றி பெற வேண்டி வரும்! (எப்படியோ வெற்றி கிடைச்சா சரிதான்..)
 
                                                                                                     

ஜெயலலிதா, கருணாநிதி ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு துன்பம் நீக்குமா... துயரம் தருமா?


கருணாநிதியின் ரிஷபம் ராசிக்காரர்களே...

உங்களுக்கு துர்முகி புத்தாண்டு,  துன்பங்களை நீக்குமா, சிம்மத்தை வென்று புதிய சிம்மாசனத்தை பிடிப்பீர்களா என பார்ப்போம்.

"ரிஷப ராசிக்காரர்களே கொள்கை மாறாதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். வெளிநாடு வெளிமாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

9.9.16 முதல் 25.10.16 வரை செவ்வாய் 8-ல் மறைவதாலும் 19.9.16 முதல் 13.10.16 வரை உங்களின் ராசிநாதனான சுக்ரன் 6-ல் மறைவதாலும் வீண் அலைச்சல், தொண்டை வலி, சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும்.

வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் தொடர்வதால், தாயின் உடல் நலன் பாதிக்கப்படும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் செய்ய நேரிடும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு உரிமையாளரால் சிற்சில பிரச்னைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் தரவேண்டாம். சின்னச் சின்ன அவமானங்கள் வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

1.8.16 வரை குரு பகவான் 4-ல் அமர்வதால், வேலைச் சுமை அதிகரிக்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சிலர், சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால், வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், வேலைச் சுமை அதிகரிக்கும். உங்களுடன் பழகும் சிலரே உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும்.

வருடம் முழுவதும் சனி,  உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாகத் தொடர்வதால், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். திருமண முயற்சிகள் தாமதமாக முடியும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். முக்கியமான பணிகளை நீங்களே நேரடியாகச் செய்து முடிப்பது நல்லது. பாஸ்போர்ட், வாகனத்துக்கான லைசென்ஸ், ஆர்.சி புத்தகங்களை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளவும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படவும். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வது மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆலோசிப்பது நல்லது. ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

வருடம் முழுவதும் கேது 10-ல் தொடர்வதால், உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி, உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில், சிலர் உங்களுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் செயல்படுவர். உங்களில் சிலருக்கு அயல்நாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மாணவ-மாணவியர், படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும்.கலைத் துறையினரே! வீண் வதந்திகள் இருக்கவே செய்யும். மனம் தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும்.

மொத்தத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு, இடமாற்றத்தையும் வேலைச் சுமையையும் தந்தாலும், நல்லவர்களை இனம் கண்டு கொள்ள ஏதுவாக அமையும்.

பரிகாரம்

கோவை- பொள்ளாச்சி சாலையில் அமைந்ந்துள்ள ஈச்சனாரி எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிநாயகரை,  சதுர்த்தி திதி நாளில் வழிபட்டு வாருங்கள்.  நிம்மதி கிடைக்கும்."
                                                                                                        
பஞ்ச்:

சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை (அச்சச்சோ..!)
கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக ஆலோசிப்பது நல்லது. (அப்படியா..?)
சிலர் உங்களுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் செயல்படுவர். ( நிஜம்தானே..!)
வீண் வதந்திகள் இருக்கவே செய்யும். மனம் தளராமல் இருங்கள். ( இன்னுமா..)
நல்லவர்களை இனம் கண்டு கொள்ள ஏதுவாக அமையும்! ( ஓஹோ..)
 
வெயிட் ப்ளீஸ்...

ரஜினி ராசிக்காரர்களுக்கு கபாலி யோகம் பட்டையைக் கிளப்புமா? 

மோடி ராசிக்காரர்களுக்கு ஃபாரின் டூர் யோகம் இருக்கா?

நாளைக்குப் பார்க்கலாம்..!