தொடர்கள்

குருவின் திருவருள்

வேங்கடராமன் கடிதம் எழுதிவிட்டுக் கிளம்பிய பிறகு, அவர் வீடு தவித்தது. கோபித்துக்கொள்ளவே இல்லையே, எந்தவிதக் கடுமையும் காட்டவில்லையே... ஏன் போனான், எங்கே போனான் என்று அரற்றியது.

வேங்கடராமனின் தாயார் புத்திர சோகம் தாங்காமல் தவித்தார். கணவரை இழந்த நிலையில், யாரைப் போய் உதவி கேட்பது என்று ஒவ்வொரு உறவினரையும் விசாரித்தார். எல்லோருக்கும் அவரவர் கடமைகள் முக்கியமாக இருந்தன. ஆனாலும், நாலாபக்கமும் விசாரித்தபடிதான் இருந்தார்கள்.

ஒரு நாடகத்தில், ஒரு பையன் வேங்கடராமன் போலவே இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, ஓடிப்போய் நாடகம் பார்த்து, 'அவன் இல்லை' என்று திரும்பி வந்தார்கள். திருவனந்தபுரத்தில் ஒரு பையன் இருக்கிறான் என்று சொல்லக் கேட்டு, அங்கும் ஓடிப் போய்ப் பார்த்து, அவனுமில்லை என்று திரும்பி வந்தார்கள்.

இதற்கு மேல் வேறு எங்கு தேடுவது என்று தெரிய வில்லை. இப்போது இருப்பது போல், அப்போது சாலை வசதிகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லை. பயணப்படுவது சிரமமான காரியமாக இருந்தது. அதனால் தேடுதலில் முனைப்பு குறைந்தது. அழகம்மை துக்கத்தில் மூழ்கிப்போனார்.

இந்த நிலையில், திருவண்ணாமலையிலிருந்து வந்த அண்ணாமலைத் தம்பிரான், மதுரையில் ஒரு கூட்டத்தில் பாலசுவாமிகளைப் பற்றிப் பேசி, 'வேங்கடராமன், திருச்சுழி' என்று குறிப்பிட்டுச் சொல்ல, கூட்டத்தில் கலந்துகொண்ட வேங்கட ராமனின் உறவினர் பையன் ஒருவன், இதை அவர் குடும்பத்துக்குத் தெரிவித்தான். அந்தக் குடும்பம் திகைத்தது. திருச்சுழியில் வேறு வேங்கடராமன் இல்லையே... இவராகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தது. சுந்தரமய்யரின் சகோதரர், வேங்கடராமனின் சித்தப்பா கிளம்பி, திருவண்ணா மலைக்கு வந்தார்.

குருமூர்த்தத்தில் கூட்டம் அதிகமாக இருந்த தால், வேங்கடராம நாயக்கர் என்பவர் தனது மாந்தோப்பில் வந்து குடியிருக்கும்படி, பழனி சாமியை வேண்டினார். பழனிசாமி இதை பால சுவாமியிடம் தெரிவிக்க, குருமூர்த்தத்தை விட்டு அருகிலுள்ள மாந்தோப்பில் அவர்கள் இருவரும் குடியேறினர். மாந்தோப்பைச் சுற்றி பலமான வேலி போடப்பட்டிருந்தது. வாசலில் காவல்காரன் இருந்தான். எனவே, உள்ளே ஆட்கள் வருவது என்பது மிகத் தீவிரமாகக் குறைக்கப்பட்டது. பழனிசாமியின் உத்தரவு இல்லாமல், ஒருவரையும் உள்ளே விடக்கூடாது என்று காவல்காரனுக்கு வேங்கடராம நாயக்கர் கட்டளையிட்டார்.

எந்தத் தொந்தரவுமில்லாமல் ஏகாந்தமாக ஒரு மாமரத்தின்மீது பரண் அமைத்து பாலசுவாமி குடியிருந்தார். அந்தப் பரணுக்குக் கீழே பழனிசாமி அமர்ந்திருப்பார். தரிசிக்க வருபவர்கள் கொண்டு வரும் உணவை வாங்கி, அதை பாலசுவாமிக்குக் கொடுத்து, தானும் உண்டு, சுவாமியைத் தொந்தரவு செய்யாதிருக்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொண்டு, பாலசுவாமி ஏகாந்தத்தில் இருப்பதற்கு ஏற்பாடு செய்தார் பழனிசாமி.

தன் நண்பர் நாராயணசாமி ஐயரோடு மாந்தோப்புக்குத் தேடிக்கொண்டு வந்த, சுந்தரமய்யரின் தம்பி நெல்லையப்பரை அந்தக் காவல்காரன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். நெல்லையப்பர் தன்னைப் பற்றிய குறிப்பை எழுதி அனுப்ப, பாலசுவாமி அவர்களை உள்ளே வரச் சொன்னார். பாலசுவாமியைப் பார்த்த நெல்லையப்பருக்கு, 'இது தனது அண்ணன் மகன் வேங்கடராமன்தானா' என்ற பெரிய சந்தேகம் வந்துவிட்டது. நீண்ட நகங்கள், சடாமுடி, மெலிந்த தோற்றம். வேங்கடராமனுக்கு உள்ளங் காலில் ஒரு பெரிய மச்சம் உண்டு. அந்த மச்சம் இருக்கிறதா என்று உன்னிப்பாகப் பார்த்து, இருப்பது தெரிந்ததும், 'இது வேங்கடராமன்தான்' என்று நெல்லையப்பர் உறுதி செய்துகொண்டார். அவருக்கு பாலசுவாமியின் நிலைமை புரியவில்லை. ஏதோ ஒருவிதமான ஹடயோகத்தைப் பிடிவாதமாகப் பயின்று உட்கார்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றியது.

''நீ ஏன் இங்கு கஷ்டப்படுகிறாய்? வீட்டுக்கு வந்துவிடு. அங்கு உனக்கு ஒரு நல்ல இடத்தை, நீ தொடர்ந்து சமாதி நிலையில் இருக்க நான் ஏற்பாடு செய்கிறேன். மதுரைக்கு வந்துவிடு'' என்று மன்றாடினார்.

பாலசுவாமி பதிலேதும் சொல்லவில்லை. நெல்லையப்பர் பரம சாது. மிருதுவாகப் பேசுபவர். யாரையும், எதற்கும் வற்புறுத்தக்கூடாது என்ற கொள்கை உடையவர். 'இந்தப் பிள்ளை ஏன் இப்படி உட்கார்ந் திருக்கிறது? இப்படி உட்கார்ந் திருப்பது முறையல்லவே! வேத விஷயங்களைத் தெளிந்து, தத்துவங்களைக் கரைத்துக் குடித்த பிறகல்லவா இந்த நிலைமை வரும். இது ஒரு, பேசாத வைராக்கிய நிலைமைதானே! இது எங்கே கொண்டு போய் விடப்போகிறதோ தெரியவில்லையே!' என்ற எண்ணத் தில் தவித்தார்.

அருகே உள்ள ஒரு மடத்தில், பெரியவர் ஒருவர் சொற்பொழி வாற்றிக்கொண்டிருக்க, அவரிடம் போய் பாலசுவாமியைப் பற்றி விசாரித்தார் நெல்லையப்பர். ''பாலசுவாமிதானே! அது வெறுமே ஒரு வைராக்கியத்தில் உட்கார்ந்திருக்கிறது. அதற்கு ஒன்றும் தெரியாது. வேதமயமான விகாரங்கள் தெரியாத எவரும் இந்த மாதிரியான தபஸில் ஈடுபட முடியாது. சும்மா பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப்போல ஒரு பாவனை'' என்று குறைவாகப் பேசினார். நெல்லையப்பருக்கும் அதுதான் சரியோ என்று பட்டது. பட்டும் பவிஷூமாய், ருத்திராட்சமும் மொட்டைத் தலை யுமாய், திருநீற்றுப்பட்டையும் கமண்டலமுமாய் உட்கார்ந்திருந் தால் 'இவர் வேதவித்து' என்று இந்த உலகம் வெகு சீக்கிரம் நம்பிவிடும். இப்படிச் சடை முடியும், அழுக்கு உடம்பும், மெலிந்த தேகமும், நீண்ட நகங்களும், எந்தப் பேச்சுமில்லாத வெறித்த பார்வையும் கொண்டிருந்தால், அது பார்ப்பவர் கண்களுக்கு மனப்பிறழ்ச்சிக்கு ஆளான ஒரு நபராகத்தான் தெரியும்.

மாயை என்பது அலங்கார மானது; பொய்யானது; தன் இயல்பை மறைத்து, வேறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்கிற எதுவும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதல்ல. சத்தியம், எந்தவித அலங்காரத்துக்கும் கட்டுப்பட்டதல்ல. அலங்காரங் களையே பார்த்து ஏமாந்து போகின் றவர்களால் சத்திய சொரூபத்தைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். உரத்த குரலில் இடி முழக்கமாய் சொற்பொழிவாற்றுபவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகள், ஞானவான்கள் என்று பலர் நினைத்துக்கொள்கிறார்கள். அடுக்கடுக்கான உவமானங்கள், ஆரவாரமான பாடல்கள் போன்ற வற்றை வெளியிட்டால், அவருக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள் கிறார்கள். மௌனமாய், பேச்சு மூச்சற்று இருந்த பாலசுவாமியை யாருக்கும் புரியவில்லை.

தொடர்ந்து கூட்டம் வந்தது. எப்போதும் வாசலில் பத்து இருபது பேர் நின்றவண்ணம் இருந்தார்கள். சின்ன அசைவு கேட்டாலும், 'அண்ணாமலைக்கு அரோகரா!' என்று கூவினார்கள். கூவலை, இறங்கச் சொல்லி வற்புறுத்த வேண்டியிருந்தது.

ஐயன் குளத்துக்கருகே அருணகிரி நாதர் கோயில் இருந்தது. சில காலம் வரை அந்தக் கோயிலில் பாலசுவாமி தங்கினார். அழகான, தொன்மையான, குளுமையான கோயில் அது. அருகேயுள்ள வீடுகளுக்குப் போய் கை தட்டி, பிச்சை கேட்டு, அங்கேயே உண்டு கை அலம்பி வருவார். பழனிசாமியை 'நீங்கள் தனியே போய்ப் பிச்சை எடுங்கள்' என்று வேறு பக்கம் அனுப்பிவிட்டார். நன்கு பழகிய, தனக்கு இதமான நண்பரையேகூட அவர் சற்று விலக்கித்தான் வைத்திருந்தார். எதனோடும் பின்னிப் பிணையாமல், எவரோடும் கலந்து மூழ்காமல் தனியே வாழும் தன்மை அவருக்கு இருந்தது.

மைத்துனர் நெல்லையப்பர், வேங்கடராமனைக் கண்டபிறகும், கையோடு அழைத்து வராமல், விட்டுவிட்டு வந்ததில் அழகம் மைக்கு மிகப் பெரிய வருத்தம்.உடனே கிளம்பிப் போய், தன் பிள்ளையைப் பார்த்து வரவேண்டும்; வற்புறுத்திக் கூப்பிட வேண்டுமென்ற பேராவல் அவருள் எழுந்தது. வேறு யாரையும் நம்பாமல், தன் மூத்த மகன் நாகசாமியை தன்னோடு வரப்பணித்தார். நாகசாமிக்கு லீவு கிடைக்கவில்லை. அடுத்து வந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது, நாகசாமியும் அழகம்மையும் திருவண்ணாமலை வந்து இறங்கினார்கள்.

அவர்கள் வருவதற்கு முன்பே, பாலசுவாமி மீண்டும் இடம் மாறியிருந்தார். திருவண்ணாமலையின் கிழக்குப் பக்கம் பவழக்குன்று ஒன்று இருந்தது. குன்றின் உச்சியில் கோயிலும், குகை போன்ற அறையும் இருந்தன. பாலசுவாமி அந்தக் கோயிலுக்குள் போய் உட்கார்ந்துகொண்டதும், அவர் இருப்பது தெரியாமல், அங்கே பூஜை செய்பவர் பூட்டிவிட்டுப் போய்விடுவது உண்டு. மாந்தோப்பைவிட பவழக்குன்று இன்னும் அமைதியாக இருந்தது. அங்கும் சிலர் வந்தார்கள். ஆனால், கூட்டம் குறைவு. ஏகாந்தத்தின் இனிமையை பாலசுவாமி நன்கு அனுபவித்தார். அந்த அனுபவத்துக்கும் சோதனை வந்தது.

பாலசுவாமியின் தாயார் அழகம்மையும், தமையன் நாகசுவாமியும் திருவண்ணாமலை வந்து, மாந்தோப்பில் தேடி, குருமூர்த்தத்துக்கு வந்து விசாரித்துக்கொண்டு பவழக்குன்றுக்கு வந்தார்கள். பஞ்சு பட்ட நெருப்பு போல, பார்த்த உடனேயே, 'இது தன் பிள்ளை' என்று அழகம்மைக்குத் தெரிந்தது. வெடித்துக் கதறினாள். மிகுந்த சந்தோஷத்தோடும் மிகுந்த வேதனையோடும் அந்த அழுகை இருந்தது. காது கொடுத்த யாரும் கலங்கித் தான் போவார்கள்.

'இது என் புள்ள. இது என் புள்ள. எம்புள்ளதான்! வேங்கடராமா, என் புள்ளடா நீ... என் புள்ள நீ' என்று அழகம்மை கதறியழ, சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அச்சத்துடன் பின்வாங்கினார்கள். ஆனால், பாலசுவாமி சற்றும் அசையாது, கற்சிலையென உட்கார்ந்திருந்தார்.

வேறு சில மகான்களுக்கும் இந்தச் சோதனை வந்திருக் கிறது. 'எங்கே வேணா போ, எது வேணா பண்ணு! ஆனா, நான் சாகறபோது, பக்கத்துல நீ இருக்கணும். என்னை நீதான் கரையேத்தணும். நான் அநாதைப் பிணமாகப் போகக்கூடாது, சங்கரா!' என்று தாய் கேட்க, அந்தத் தாய்க்கு வாக்கு கொடுத்து, வான்வழியே வந்து இறங்கி, அவள் விருப்பப்படியே விறகிட்டுத் தீ மூட்டி, சமஸ்காரங்களை அந்த ஞானி செய்தார்.

எவர் கோரிக்கையையும் அந்த சந்நியாசி ஏற்றுக் கொள்ளாமல் புறந்தள்ளலாம். ஆனால், தாயின் கோரிக்கையை எப்படிப் புறந்தள்ள முடியும்! கேட்கும் சத்தியத்தைத் தர முடியாது என்று எப்படி உதற முடியும்? மார் மீதும் தோள் மீதும் போட்டு வளர்த்த தாயை, இடுப்பிலும் மடியிலும் அணைத்துக் கிடந்த தாயை, நிற்கவும் நடக்கவும் பழகச் செய்த தாயை, உறங்கும்போதும் தானுறங்காமல் உடனிருந்த தாயை, உணவு ஊட்டியவரை, உயிருக்கு உயிராக நேசித்தவரை எப்படி விலக்க முடியும்?

தாய் எதிரே நின்று, ''எம்புள்ளடா நீ! வேங்கடராமா, ஆத்துக்கு வாடா. நான் சாதம் போடறேன்டா. என் ரூம்ல உட்கார்ந்துண்டேயிரு. உன்னை யாரும் தொந்தரவு பண்ணமாட்டா. நம்மாத்துக்கு நீ வரணும். என் புள்ளையோன்னோ... அம்மாவை இப்படித் தவிக்கவிடலாமா? நான் என்னடா தப்பு பண்ணேன்... என்ன பாவம் பண்ணேன்... எதுக்காக என்னைப் பிரிஞ்சு போனே? உன்னைக் கோச்சுண்டு நா ஒரு வார்த்தை சொன்னதில் லையே! படிக்கவேண்டாம் வேங்கடராமா, பள்ளிக்கூடம் போகவேண்டாம். உனக்கு பிடிச்ச அரைச்சுவிட்ட குழம்பு, கத்தரிக் காய் கறியெல்லாம் பண்ணிப்போடறேன்.

ஒரு மலைமேல உட்கார்ந்து இப்படி சடையாண்டியா இருக்கியே! பெத்த வயிறு பத்தி எரியறதே! ஏன்னா... இந்தக் கொடுமையெல்லாம் பார்க்கச் சொல்லிட்டு, நீங்க சௌக்கியமாய் போய்ச் சேர்ந்துட் டேளே..! உங்க புள்ள இருக்கிற இருப்பைப் பார்த்தேளா! அவனுக்கு நீங்க சொல்லித் தர மாட்டேளா! அப்பா இல்லாம வளர்ந்த புள்ள... அதனால தான் இப்படிப் போயிட்டான்னு உங்களை ஊரார் பழிச்சுச் சொல்வாளே..! உங்களுக்கு இழுக்கு வந்தா, அது எனக்கு வந்ததில்லையா..!'' என்று புலம்பினாள்.

ஒரு சிறிய ஊசலாட்டம்கூட இல்லாமல், கண்ணில் ஒரு சின்ன சலனம்கூட இல்லாமல், பாலசுவாமி சிலையென அமர்ந்திருந்தார். உள்ளே, முற்றிலும் அறுந்துபோய் தனித்துக் கிடப்பவருக்குத்தான் இப்படி சலனமற்று இருக்க முடியும்.

அழகம்மையின் ஆத்திரம் வேறு விதமாக மாறியது.

- தரிசிப்போம்...