தொடர்கள்

குரு தரிசனம்!

மகா பெரியவாளுடன் பல இடங்களுக்கும் போய் வந்திருக்கிறார் பட்டாபி சார். பெரியவருக்கு ஆசை ஆசையாகப் பணிவிடைகள் செய்திருக்கிறார். அது காஞ்சி மடத்திலாக இருக்கும்; அல்லது, யாத்திரை போன இடத்திலாக இருக்கும்.

''பெரியவாளோட குரு மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை ஷஹாபாத் நகரில், நதிக்கரையில் நடந்தது. அந்த ஆராதனையை குரு ஆராதனைன்னு சொல்லுவா. அந்த நதியிலே தான் அப்பெல்லாம் ரெண்டு வேளையும் ஸ்நானம் பண்ணுவா பெரியவா.

மேட்டூர் கெமிக்கல் ரமணின்னு ஒருத்தர். இன்ஜினீயர் வைத்திய நாதய்யர் பேரன். அவரோடு நிறைய பம்பாய்க்காராளும் அப்போ அங்கே வருவா; வேஷ்டி, துண்டு, பழங்கள் எல்லாம் வாங்கிண்டு வருவா.

பெரியவா எங்கே இருந்தாலும், அங்கே இந்த குரு ஆராதனை கோலாகலமாக நடக்கும். அப்படி நடக்கிறதுக்குக் காரணம், அதுக்கெல்லாம் இன்சார்ஜ் மாதிரி இருந்த மேட்டூர் ராஜகோபால்தான். ஒரு குறையும் இல்லாமல், ஆராதனை சம்பிரதாயப்படி நடக்க சகல ஏற்பாடுகளையும் அவர் செய்து கொடுத்துடுவார். அவர் இப்போ கோவிந்தபுரத்துல, மகா பெரியவாகிட்டே சந்நியாசம் வாங்கிண்டு, அங்கேயே இருந்துண்டிருக்கார்.

குரு ஆராதனைன்னா நிறைய வேலைகள் இருக்குமில்லியா? தட்சணை, வேஷ்டி எல்லாம் எடுத்துக் கொடுக்க, ராஜகோபாலுக்கு நான் ஒத்தாசை பண்ணுவேன்.

ஆராதனை முடிஞ்சப்புறம், சாயங்காலம் அனுஷ்டானம் பண்ணுவா பெரியவா. அது ஆனவுடனே, ராஜகோபாலைக் கூப்பிட்டா. ''ஒரு ஜோடி வேஷ்டியும், 101 பணமும் எடுத்துண்டு வா'ன்னார் அவர்கிட்டே.

அவர் எடுத்துண்டு வந்ததும், அதை வாங்கி, ''இது குருவோட பிரசாதம். நீ என்னிக்கும் க்ஷேமமா இருப்பே!'' என்று எனக்கு ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்தார்.

சந்தோஷத்துல எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே! குருவோட பிரசாதம்கிறது எத்தனைப் பாக்கியம்! அதைப் பெரியவா, தாமாகவே என்னைக் கூப்பிட்டுக் கௌரவிக்கிற மாதிரி அல்லவா கொடுத்திருக்கார்!

வஸ்திரத்துக்கு மட்டுமில்லே, எதுக்குமே நான் இன்னியவரைக்கும் கஷ்டப்பட்டது இல்லே. பெரியவா அருளால எனக்கு வேண்டியது எல்லாமே கிடைச்சிண்டிருக்கு!

'அடியார்க்கும் அடியார்க்கும் அடியவன் நான்'னு என்னைச் சொல்லிப்பேன். அப்படித்தான் பெரியவாகிட்டே மடத்துலே இருக்கிற போதும் சரி, வெளியிலே யாத்திரை போறபோதும் சரி... நான் நடந்துண்டிருக்கேன்.

'தடுத்தாட்கொள்வது'ன்னு ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்கு. பகவான், பக்தனைத் தடுத்தாட்கொள்வார்; குரு, சிஷ்யனைத் தடுத்தாட் கொள்வார். அது மாதிரி பிரபுவான பெரியவா, என்னைத் தடுத்தாட் கொண்டார்; என்கிட்டே விளையாடினார்; லீலை பண்ணினார்னுதான் சொல்லுவேன். இப்போகூட, பெரியவா என் தலையை அவரோட தண்டத்தால தொட்டு, ஆசீர்வாதம் பண்ற மாதிரி தோண்றது.

ரிஷிகேசத்துல, கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, தினமும் சஹஸ்ர (ஆயிரம்) காயத்ரி பண்ணுவேன். ஆனா, மனசை ஒருநிலைப்படுத்த முடியாது. ஏன்னா, கங்கைக்குன்னு ஒரு வீர்யம் இருக்கு. அது மனசைத் தன்னோட வசத்துல இழுக்கும்.

''நீ செத்துப்போற வரைக்கும் காயத்ரியையும், கங்கா சஹஸ்ர காயத்ரியையும் விடாதே!''ன்னு என்கிட்டே ஒருமுறை சொன்னா பெரியவா. அதை இன்னிய வரைக்கும் விடாம காப்பாத்திண்டு வரேன். அதுக்கும் ஒரு சக்தி இருக்கில்லையா? அது என்னைக் காப்பாத்திண்டு வரது.''

இதைச் சொல்லும்போது, பட்டாபி கண்களில் லேசாக நீர் தளும்புகிறது.

- தரிசனம் தொடரும்