தொடர்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

இறைவன் நேசித்த இனிய கவிஞர்

''பாகவதர்களுக்குப் பணி செய்வதே எனக்குத் தொழில்; ஊதியம் வேண்டாம்; உணவு மட்டும் போதும். முகம் சுளிக்காமல் வேலை செய்வேன். அடியேனை, கண்டியா கிருஷ்ணன் என அழைப்பார்கள்'' என்று அந்த இளைஞன், உபந்யாசகர் முன்னே வந்து நின்றான். அவனைத் தன் மகனாகவே பாவித்து ஏற்றுக்கொண்டார் உபந்யாசகர்.

காய்கறிகள் வாங்குவது, சமைப்பது, துணி துவைப்பது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான் அவன். அத்துடன் ராமாயண, பாகவதங்களை உபந்யாசகர் சொல்லத் துவங்கியதும், அருகில் நின்று அவருக்கு விசிறிவிட்டபடியே, கதை கேட்பான். சில இடங் களில், உபந்யாசகர் சொல்லும் விஷயங்களால், அவனது கண்களில் இருந்து கரகரவென நீர் பெருக்கெடுக்கும். 'அட... இடைச்சாதியைச் சேர்ந்த இவனுக்குத்தான் என்ன பக்தி! என்ன ரசனை!' என்று உபந்யாசகர் நெகிழ்ந்து போவார்.

அன்று, உபந்யாசகருடைய தந்தையின் திதி. அவரது வீட்டில் சமைக்கப்பட்டிருந்த உணவின் மணம், வெளியேயும் பரவியது. அக்கம்பக்கத்தில் இருந்த ஏழை மக்களுக்கு, நாவில் உமிழ்நீர் சுரந்தது. 'வாசனையே இப்படி இருந்தால், சாப்பாடு எப்படி இருக்கும்! ஹூம்... இப்பேர்ப்பட்ட பதார்த்தங்கள், நமக்கு எங்கே கிடைக்கப் போகின்றன!' என்று ஏக்கத்துடன் பேசிக்கொண்டனர். அவர்களின் மனத்தை அறிந்த உபந்யாசகர், சமைத்து வைத் திருந்த உணவு மொத்தத்தையும் அவர்களுக்கு அன்போடு வழங்கச் சொன்னார். அதன்படி, அவர்களுக்கு வயிறார உணவு பரிமாறிய கண்டியா கிருஷ்ணன், பிறகு திதிக்கு வேண்டிய சாப்பாட்டை மீண்டும் புதிதாகச் சமைக்கத் துவங்கினான்.

திதி உணவை வேற்றுச் சாதியினருக்கு வழங்கிய அந்த உபந்யாசகரின் மீது அந்தணர்கள் கோபமுற் றனர். திதியை நடத்தித் தரமுடியாது என மறுத் தனர். 'எளியவர்களுக்கு அன்னதானம் செய்தது ஒரு பாவமா?!' என்று எண்ணியபடி, தியானத்தில் ஆழ்ந்தார் உபந்யாசகர்.

அப்போது, சிவனாரும் விஷ்ணுவுமே அங்கு வந்து, திதிச் சடங்கு செய்வதற்காக அமர்ந்தார்கள். கண்டியா கிருஷ்ணனின் மேற்பார்வையில் திதிச் சடங்குகள் நடைபெற்றன. இதைக்கண்டு அந்தணர்கள் திகைத்தனர். உபந்யாசகர் வீட்டில், அத்தனைப் பணிவிடைகளையும் அதுநாள்வரை செய்து வந்த அந்த இளைஞன், தனது சுயஉருவை வெளிப்படுத்தும் தருணம் வந்தது. அவன் வேறு யாருமல்ல... பண்டரிபுரத்தில் கோயில் கொண்டி ருக்கும் பாண்டுரங்கனேதான்!

பாண்டுரங்கனே வந்து சேவை செய்த கொடுப் பினையைப் பெற்ற அந்த உபந்யாசகர், ஏகநாதர். பக்தி மற்றும் சமுதாய நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் அவர்.

அந்நியப் படையெடுப்புகளால் ஏற்பட்ட அழிவா லும், சாதி மற்றும் குலத்தின் ஏற்றத் தாழ்வுகளாலும் பிளவுபட்டுக் கிடந்தது மகாராஷ்டிரம். அந்தக் கால கட்டத்தில், தனது தேனினும் இனிய பக்திக் கவிதைகளாலும், சீரிய சீர்த்திருத்தக் கருத்துக் களாலும் தேசத்தைச் செழிக்கச் செய்த பெருமை, ஏகநாதருக்கு உண்டு.

1533-ஆம் வருடம், மகாராஷ்டிரத்தில், பைடனி புரம் எனும் கிராமத்தில் வசித்த, அந்தணர் குலத்தைச் சேர்ந்த சூர்யநாராயணா- ருக்மிணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஏகநாதர். இவரின் இளம் வயதிலேயே பெற்றோர் இறந்து விட, தாத்தா சக்ரபாணியும், பாட்டி சரஸ்வதிபாயும் இவரைச் சீராட்டி வளர்த்தனர். சிறு வயதிலிருந்தே இறை பக்தி, உயிர்களிடம் கருணை ஆகிய பண்பு களுடன் வளர்க்கப்பட்டார், ஏகநாதர்.

12-ஆம் வயதில், ஆன்மிகத்தில் இன்னும் உள்ளேபோக, இறை வழியைக் காட்டுகிற குருவைத் தேடி அலைந்தார் ஏகநாதர். தௌலதாபாத் என இன்றைக்கு அழைக்கப்படும் தேவகிரியில் வாழ்ந்த ஜனார்த்தன் சுவாமி எனும் மகானைச் சந்தித்துச் சரணடைந்தார். விளையாட்டில் பொழுதைக் கழிக்கும் வயதில், நல்வழி காட்டும் குருவைத் தேடி, பாலகன் ஒருவன் தனியே இவ்வளவு தூரம் வந்தது கண்டு சிலிர்த்த ஜனார்த்தன் சுவாமி, ஏகநாதரைத் தனது சீடனாக்கிக் கொண்டார்.

வேதாந்தம், உபநிஷத்துகள், யோகம் முதலான சமயம் மற்றும் தத்துவங்களை குருநாதரிடம் கற்றறிந்தார் ஏகநாதர். கடும் தவம், அனுஷ்டானம் ஆகியவற்றில் ஈடுபட்ட ஏகநாதருக்கு, குருவின் கருணையால் பகவான் தத்தாத்ரே யரின் பேரருள் கிட்டியது; ஞானம் பெற்றார் ஏகநாதர்.

பிறகு, புண்ணியத் தலங்கள் பலவற்றுக்கும் குருவும் சீடரும் பயணித்தனர். நாசிக் அருகில் உள்ள ஸ்ரீதிரியம்பகேஸ்வரரைத் தரிசித் தனர். அப்போது, 'நம் சீடன் மகா ஞானி! தன்னை மட்டும் கடைத் தேற்றிக் கொள்ளப் பிறந்தவன் அல்ல; உலகுக்கே நல்வழி காட்ட அவதரித்தவன். பக்தியில் பழுத்தவன் மட்டுமின்றி, பாமாலைகளாலும் இறைப் புகழைச் சொல்பவன்' என உணர்ந்து சிலிர்த்த ஜனார்த்தன் சுவாமி, பாகவத புராணத்துக்கு உரை எழுதும்படி ஏகநாதரைப் பணித்தார். குருவின் தூண்டுதலால், கவித்திறன் பிரவாகமெடுத்தது. ஸ்ரீமத் பாகவதத்தை மராட்டிய மொழியில், 'ஒவீ'க் கள் எனப்படும் விசேஷ கவிதைகளாக (1036 பாடல் கள்) இயற்றினார் ஏகநாதர். பக்தியும் கவிதையும் கலந்திருந்த 'சதுஷ்லோகி பாகவத்' எனும் அந்த நூல், இன்றைக்கும் பக்தியுடன் பாராயணம் செய்யப் படும் அற்புதமான நூலாகத் திகழ்கிறது.

பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, புனிதத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று தரிசித்துத் திரும்பிய ஏகநாதரை, சொந்த ஊரான பைடனிபுரம் உற்சாகத்துடன் வரவேற்றது உறவினர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க, கிரிஜா என்பவளைத் திருமணம் செய்துகொண்டார் ஏகநாதர். அன்புடனும் கனிவுடனும் வாழ்ந்த இல்லறத்துக்குச் சாட்சியாக, இரண்டு பெண் குழந்தைகளும், ஆண் மகவு ஒன்றும் பிறந்தன.

13-ஆம் நூற்றாண்டில், மகாராஷ் டிரப் பகுதியில் வாழ்ந்த ஞானி, ஞானேஸ்வர். இவர், பகவத் கீதைக் குக் கவிதை நடையில் எழுதிய உரை, அந்தக் காலத்தில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்நியப் படையெடுப்பால், மராட்டிய சமுதாயமே களையிழந்து காணப்பட்டது. புகழ்மிக்க தனது கலாசாரப் பாரம்பரியத்தைப் பறைசாற்ற முடியாமல் தவித்தது. அவற்றுள், ஞானேஸ்வரது கீதை உரையும் ஒன்று!

சுமார் இரண்டரை நூற்றாண்டு காலத்தில், மக்களது நினைவி லிருந்தே அகன்றுவிட்ட, ஞானேஸ் வரின் பகவத் கீதை உரையை அரும்பாடுபட்டுத் தேடிக் கண்டு பிடித்து, 'ஞானேஸ்வர்' எனும் பெயரில் வெளியிட்டார் ஏகநாதர். அவரது சமாதியைக் கண்டறிந்து, செப்பனிட்டுப் புதுப்பித்தார்.

சமூகத்தில் நிலவிய சாதி பேதங்களையும், தீண்டாமைக் கொடுமை களையும் கண்டு கொதித்தார் ஏகநாதர். அவற்றைக் கடுமையாக எதிர்த்தார். கடவுளின் முன் அனைவரும் சமம் என்று போதித்து, அனைத்துப் பிரிவினருடனும் சரிசமமாகப் பழகினார். இதனால், பல துன்பங்களை சந்தித்தபோதும், தனது கொள்கையிலிருந்து மாறவே இல்லை, அவர்!

ஏகநாதரின் பக்தியாலும், அற்புதக் கவிதை களாலும், அந்தப் பாண்டுரங்கனே சேவகனாக வந்து இவருக்குத் தொண்டு செய்தான்! ருக்மிணி ஸ்வயம்வர், ஹஸ்தாமலக், ஷூகாஷதக், ஸ்வாத்ம சுகா, ஆனந்த லஹரி, சிரஞ்சீவா, கீதாசார், பிரஹ் லாத விஜய ஆகிய இவரது கவிதைப் பாடல்கள் பக்தியின் மேன்மையை எடுத்துரைத்தன.

வாழ்வாங்கு வாழ்ந்த ஏகநாதர், 1599-ஆம் வருடம், பல்குனி மாதம், கிருஷ்ண சஷ்டி நாளில், கோதாவரி நதியில் தன்னை அர்ப்பணித்தார். தன்னுயிரைத் தியாகம் செய்து, இறைவனது திருப்பாதத்தை அடைந்தார். பக்தியும் கவிதையும் உள்ளவரை ஏகநாதரது பெயரும் அன்பர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கும்.

- (தரிசிப்போம்)