எஸ்.முநீஸ்வர சாஸ்திரி

குருவருள் பெறுவோம்!

'ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி '

அதாவது, 'மெய்ப்பொருள் என்பது ஒன்றுதான்; அதைப் பல பெயர்களில் அழைக்கின்றனர் சான்றோர்' என்கிறது வேதம்! ஆக, இறைவன் என்பவன் ஏகன்; ஒருவனே! ஆன்றோர் பெருமக்களின் வழிகாட்டுதலால், இறைவனை பலவிதத் தோற்றங்களில் வழிபடுகிறோம்.

குரு என்பவர், வடக்குத் திசை பார்த்தபடி நமக்குக் காட்சி தருபவர். ஸ்ரீதட்சிணாமூர்த்தி என்பவர், தென் திசை பார்த்தபடி அருளுபவர்; தேவர்களின் தலைவனாக திகழ்பவர்; அதுமட்டுமா?! குருவுக்கும் குருவானவர்!

குரு பகவான், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீவாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர் என்கின்றன புராணங்கள். குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்களுக்கு பேசாமல் மௌனமாக இருந்தே பேருண்மையை உபதேசித்து அருளினார் (மௌனம் வ்யாக்யானேன) என்று தெரிவிக்கின்றன புராணங்கள்! பிரகஸ்பதியை பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் எனப் போற்றி வணங்குகிறோம். ஆனால், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே வழிபடுகிறோம் (காலாய நம).

'யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத' என்கிறார் பதஞ்சலி முனிவர். அதாவது, 'மனிதனுக்கு யோகம் ஸித்திக்க வேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மௌனத்தைப் பழக வேண்டும்' என்கிறார். ஆனால் இந்த உலகில், சாதாரணர்களாகிய நாம், எதையுமே பேசித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில்... பேசும் குருவை வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்து, மௌன குருவை, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்! இதைத்தான் ஸத்சித் ஆனந்தம் என்கிறோம்.

'தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே'

-என்று தெளிவுற விளக்குகிறார் திருமூலர்.

அறியாமை இருட்டுக்கு அப்பால் எந்தவொரு பொய்த் தோற்றமும் இன்றி, குறையே இல்லாத பரிசுத்தமானதும், மனதுக்கும் சொல்லுக்கும் எட்டாத அறிவும் ஆனந்த உருவும் கொண்டவர் ஞானம் அளிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இதைத்தான், 'பேசா அநுபூதி பிறந்ததுவே' என்று போற்றுகிறார் அருணகிரிநாதர். அதாவது, சொல்லாமல் சொல்லி, பேரானந்தத்தை அளிப்பவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி!

இதேபோல், தேவகுரு பிரகஸ்பதியும் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். ஆங்கீரஸரின் மைந்தன்; அற்புத வல்லமை கொண்டவர்; ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில், ஸப்த ரிஷிகளில் முக்கியமானவர்; பேரறிஞராகத் திகழ்ந்தவர் என புராணங்கள் பிரகஸ்பதியை விவரிக்கின்றன.

பகவான், வாமன அவதாரத்தின்போது, பிரகஸ்பதியிடம் இருந்து வேதங்கள், அதன் அங்கங்கள், உப அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் ஆகிய அனைத்தையும் கற்றறிந்தார் எனத் தெரிவிக்கிறது ப்ருஹத் தர்ம புராணம்.

பிரகஸ்பதியின் குமாரர் கசன், இந்திரலோகத்தை ஆட்சி செய்த இந்திரனுக்குப் புரோகிதராகத் திகழ்ந்தார். இவர், சுக்கிராச்சார்யரின் இல்லத்தில் தங்கி, சஞ்ஜீவனி எனும் வித்தையைக் கற்றறிந்தார். இந்திரனுக்கு இவர் அருளிய உபதேசங்களை அறிந்து உணர, நமக்குப் பல நன்மைகள் ஏற்படும்; ஞானமும் கல்வியும் கிடைக்கப் பெறுவோம் என்பர். மகாபாரதத்தின் சாந்தி பருவம் மற்றும் அநுசாசன பருவம் ஆகியவற்றில், கசன் உபதேசித்து அருளிய கதைகள் உள்ளன. அவற்றைப் படித்துத் தெரிந்துகொண்டால், இல்லறம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக வாழ்வே வெற்றி பெறும்!

'புரோகிதர்களுள் முக்கியமானவரான பிரகஸ்பதி என்று என்னை அறிந்து கொள்' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். எனவே, அர்ஜுனனுக்கு குருவாகத் திகழ்ந்த ஸ்ரீகிருஷ்ணர், நமக்கும் குருவாகிறார்.

உலக வாழ்வில், அனைத்திலும் வெற்றி பெற, அருள்நிதியும் அறிவுநிதியும் அள்ளித் தரும் பிரகஸ்பதியை, அனுதினமும் வழிபட்டுப் பேரானந்தம் அடையலாம்!

பூச நட்சத்திர நாளில், அவரை ஜபம் செய்து, அர்ச்சித்து, ஹோமங்கள் நடத்தி வணங்கினால், வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒருவரது ஜாதகத்தில், குருபகவான் எங்கிருந்தாலும், அதற்காகக் கவலைப்படாமல், கலங்கித் தவிக்காமல், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால், குருவின் பேரருளைப் பெறலாம். அதேபோல், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில், குரு பகவானை வழிபட்டால், இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்!

'பூச நட்சத்திரத்தில் ஜனித்த போதே அனைவராலும் விரும்பத்தக்கவராக இருந்த பிராஜபதி, தேவர்களின் முதன்மையானவராகவும் அனைத்துப் படைகளையும் வெற்றி கொள்பவராகவும் இருப்பவர்... எனவே, அவர் அனைத்துத் திசைகளில் இருந்து காக்கட்டும்!' என பூச நட்சத்திரம் குறித்தும், பிரகஸ்பதி குறித்தும் வேதங்கள் விளக்குகின்றன.

வேதங்கள் போற்றும் குரு பகவானைத் தொழுவோம்; குருவருள் பெறுவோம்!